271. கடுங்கான நற்பாலுண்ண
ஞானசித்தி கடிதான யோகத்தில் அஞ்சாத
மடுங்கான பவுறுத்தில்
அஞ்சுநாதம் அறைதானும் கடந்திடத்தே சுத்தநாதம்
நெடுங்கானல் ஈசத்தில்
வாசிமுத்தி நேர்ப்பான மூலத்திடில் ஆவியேசத்தி
திடுங்கானல் சொலித்து
நிற்கும் எந்நாளுந்தான் தூரமல்ல காதமல்ல கண்ணிமைக்குளாமே
விளக்கவுரை :
272. கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்துகாணும் கடிதான விண்ணேது வெளியெங்கேது
ஒண்ணிமைக்குள் ஒளியேது
உரைத்தபடி இம்மூன்றும் உன்னதமாங்கே சரிதானுயர்த்தியாச்சு
நுண்ணிமைக்குள் கண்ணேது
மூக்கங்கேது நுண்மையாம் கண்டிப்பு அழிந்துபோச்சு
உண்ணிமைக்குள் ஒன்றிரண்டு
சமரசந்தானேது உற்றுப்பார் வெட்டவெளி ஒண்ணில்தானே
விளக்கவுரை :
[ads-post]
273. ஒண்ணிலே நின்றுரைத்துப்
பழக்கமாகி உத்தமியாம் மனோன்மணியை புருவமையத்தோடே
உண்ணியே ஒளியோடே மவுனத்தையோட்டி
ஊதியே சாம்பவியைக் கண்டுகொள்வாய்
நிண்ணியே இவ்வளவு
யோகமார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு
குண்ணியே விந்துவென்ற
குருபதத்தைக் கூட்டப்பா மவுனத்தைத் தாரையாமே
விளக்கவுரை :
274. தாரையாம் விந்திலே
திரமதியோகோடி தளுக்கான கண்கூசி மயக்கமாகும்
ஓரையாம் நாதத்தில்
செவிடுபட்டு ஊமையென்ற வெருத்தினுட உருவந்தோன்றும்
வாரையாம் அயசத்தியிலே
வன்னியேடு மாசற்ற கோடிரவிமதியும் ஒவ்வா
சூரையாம்
சோமப்பாலுண்டவருக்குக் காணும் சூதான ஞானிகட்கு மாயந்தானே
விளக்கவுரை :
275. மாயமாம் சிவத்துக்குள்
மவுனம்சென்றால் மாசற்ற நவகோடி வன்னிரவு சோமன்
மாயமாம் பரத்தின்கீழ்
முப்பாழுண்டு பார்க்கவே யகாரமொன்று உகாரமொன்று
மோயமாம் மகாரமொன்று
முப்பாழாக முனைந்திந்து அதனொளியைச் சொல்லப்போகா
தூயமாம் ஒளியுடைய உன்மனத்தை
தேவியுடபதமொன்றே கேசரிதான்காணே
விளக்கவுரை :