266. கண்டுபார் வாசியுன்னி
மேலேயேத்த கைவிட்ட மயக்கத்தை கீழேதள்வாள்
விண்டுபார் ஷணத்துக்குள்
வெளியுங்காணும் விடுபடுவாள் அண்டண்ட மாலைபூண்டால்
அணடுபார் ஆதிவலையத்து
அநாதிவலையத்து அதீதமாம் இரண்டுமொன்று அறிந்துகூடு
உண்டுபார் நிற்குணத்தில்
அமிர்தமுண்ணில் உயர்ந்துநின்ற ஞானசித்தி உண்மைதானே
விளக்கவுரை :
267. உண்மையாம் வாசியென்று
மவுனமொன்றும் உத்தமமாம் இரண்டுவித்தை உரைக்கக்கேளு
தண்மையாம் சாம்பவியும்
கேசரியும் இரண்டும் தனித்தேசி ஏறுதற்கு காதிவித்தை
வண்மையாம் மனமென்றால்
ஞானவித்தை மாசியென்ற மனமானால் இரண்டும் பொய்யாம்
ஆண்மையாம்
அறிவந்தாண்டுபோகும் அதிதனின்ற வெளியல்லோ அகண்டம்பாரே
விளக்கவுரை :
[ads-post]
268. பாரென்ற தீயிற்குள்
பராபரந்தான் இருந்தார் பண்பாக கண்டவரார் சித்தயோகி
ஏரென்ற உன்மனத்தாய்
கேசரிக்குள் நிற்பாள் ஏறிப்பார் மவுனம்வைத்து ஊதுவூது
நீயென்ற நிர்குணந்தான்
அதிலேகொள்ளு நிலையாரெ மவுனமொன்று வதியண்டு
கானென்ற நீராகாரம்
ஒன்றுமில்லை கட்டுதரார் அறிவுகொண்டு கருதிக்காணே
விளக்கவுரை :
269. காணவே குண்டலியின் மூலமொன்று
கண்டத்தில் பராபரமாம் மூலமொன்று
பூணவே புரயவமைய மூலமொன்று
புகழான விந்துவிலே மூலமொன்று
தாணவே சத்தியிலே மூலமொன்று
தனித்துநின்ற பராபரத்தின் மூலமொன்று
ஆணவே இதையாறும் கண்டோன் ஞானி
அறிந்தணர்ந்தால் மும்மூலயோகியாமே
விளக்கவுரை :
270. யோகியாம் நகாரவரை யகாரவரை
மட்டும் உறுதியாம் யோகத்தின் மூலமாச்சு
வாசியாம் அகாரம் முதல்
உகாரந்தொட்டு அதிதமாம் மகாரம்வரை ஞானமூலம்
தேசியாம் திசைநாதம்
மவுனத்தில் காணும் சேர்ந்தேற சேர்ந்தேற கண்டவீதி
ஊதியாம் காமப்பாலுண்டால்
கேளிபோகம் சித்திக்கு அடுக்கா நற்பாலையுண்ணே
விளக்கவுரை :