276. கேசரிதான் தாயானபதத்தின்
காந்தி கீர்த்தி கண்கொள்ளாது விண்கொள்ளாது
ஆசரியென்பார் ரம்பாரம்
தூளென்பார் அவளுக்குள் மவுனமுண்டு அறிவுன்னிப்பாரு
கேசரியின் மவுனத்தே
நிஷ்களமாய் போவாய் கெடியான வம்பரத்தில் ஏதொவேதோ
தூசரியின்படி மைந்தா
லட்சியத்தில் நேர்மை சொல்லரிது அப்பறத்தே சோதித்தானே
விளக்கவுரை :
277. தானென்ற மகாரவரை காதவோசை
தாயான கன்னிக்குப் பீடமாகும்
மானென்ற பூரணம்பார்
மவுனஞானம் மகத்தான நாதத்தோடு ஒன்றி ஒருமுனையாகும்
ஊனென்ற ஒருவழியாய் ஒன்றாயோடு
உட்புகுந்தால் தோற்றுது அங்கொன்றுமில்லை
தூனென்ற சுத்தவெளி ரவிகோடி
வன்னிகுழம்பாக மதிகோடி கண்டுகொள்ளாதே
விளக்கவுரை :
[ads-post]
278. கொள்ளாத மதிதமென்ற
மகாரங்காணும் குறிப்பாக நகாரமல்லோ குருவைக்காட்டும்
வள்ளாத மகாரமன்றோ மடங்கி
அந்தந்தாண்டி வழிகாட்டும் இடமல்லோ கேசரிதான்மைந்தா
மள்ளாத மகாரமென்ற
மேலெழுத்தேயென்பார் மாட்டுவது மூன்றெழுத்துங் காணமாட்டார்
அள்ளாத மகாரமென்ன மவுனவித்தை
வாய்திறவா மவுனமாமே
விளக்கவுரை :
279. வாமென்ற மவுனவித்தை மூன்றெழுத்துயென்பார் மாட்டுகிற இனங்காணார் மார்க்கங்காணார்
வாமென்ற மவுனவித்தை
வாய்மூடயென்பார் மாடோடு குதிரையது வாய்ப்போக்கேது
கோமென்ற மவனவித்தை
கேட்டிருப்பார் கூட்டுறவு காணார் கள்நாதங்கேளார்
ஆமென்ற மவுனவித்தை தாண்டி
நாட்டி ஆதியாந் திசைநாதம் கேட்கும்காணே
விளக்கவுரை :
280. காணேதான் மதியினுட
அமுர்தஞ்சிந்தும் கலங்காமல் துவாதசங் கடந்துதோன்றும்
தானேதான் ஓசையறும்
தன்னினைவும் போகும் தாரைபோல் அண்ணாக்கில் அமிர்தமொடு
மானேதான் மும்மலங்கள்
அற்றுப்போகும் சகத்தான ஐம்பொறிகள் அடங்கிநிற்கும்
தேனேதான் மேலாமுதம்
லகிறிமீறிச் சணமாகும் மூன்றுக்குமேல் ஜெயமுமாமே
விளக்கவுரை :