281. ஜெயமான உலகத்தில் லகிரி
உண்டு தீர்க்கமாய் முதிர்ந்தபின்பு உன்னுளக்கிரி
மயமான மகாரத்தால்
வந்துதாக்கும் மகாரத்தைக் கூட்டையிலே அறிந்து கூடு
குயமான கும்மென்ற ஞானத்தில்
கூடு குறியோடே அறிவென்ற மவுனத்தை நாட்டு
நயமான நாதத்தின் ஆட்டங்கேளு
நலங்காமல் ஒருவழியே நாட்டிடாயே
விளக்கவுரை :
282. நாடினால் சன்னமது
முத்தியாகும் நலமாக யேறுதற்கு வழியைக்கேளு
வாடினால் மூலத்தில்
வாசிவைத்து வழியோடே பிராணயாமம் பண்ணத்தீரும்
கூடினால் குண்டலிக்கும்
நடனங்கண்டு கொடிதான வாதித்த னொளியைக்காணும்
ஆடினால் கண்டத்தில்
வங்கென்றூனு ஆடாத வழிதிறக்கா வழிசெல்வாமே
விளக்கவுரை :
[ads-post]
283. செவ்வையாய் நின்றுரைத்த
பழக்கமானால் சிறப்பான மனோன்மணிதான் புருவமையத்தே
மவ்வையாம் ஒளியோடே
மவுனத்தைப்பூணு மகத்தான சாம்பவியைக் கண்டுகொள்வாய்
நெவ்வையாம் இவ்வளவும்
யோகமார்க்கம் நின்றல்லோ சிவயோகி நிலைத்துக்காணும்
தவ்வையாம் விந்துவென்ற
குருபதத்தில் தாக்கவே மவுனத்தைத் தாரையாமே
விளக்கவுரை :
284. தாரையாம் அஷ்டாங்கம்
சாற்றக்கேளு தனித்தனியே ஒவ்வொன்றாய் விரித்துச்சொல்வேன்
நேரையாம் சாட்டியமாம்
நித்திரையும் போக்கு நியமமாய் சதாநித்தம் தாரகத்தில் நில்லு
தூரையாம் மனம்குவிந்து
கேசரியைப்பாரு சோமப்பால் கசிந்தோடும் கேசரியைக்கண்டால்
காரையாம் ரவிமதியும்
வன்னிகூடி கலந்துநின்ற இடமல்லோ கேசரிதான்காணே
விளக்கவுரை :
285. காணவே ஏமமொடு நேமமாகும்
கருதியதோர் ஆசனமும் பிராணயாமம்
பூணவே பிரத்தியாகாரம்
தாரனையினொடு பெருமையாம் தியானமொடு சமாதியாகும்
ஏனவே இதுவெல்லாம் எட்டெயங்கு
மிகையான சித்தாந்தம் வேதாந்தமிரண்டும்
ஆனவே அடமெல்லாம் சொல்லக்கேளு
அறிந்துகொள்ளும் நிரைநிரையாய் அறிவில்தானே
விளக்கவுரை :