286. நானென்ற ஏமமது பத்துமாகும்
தனித்ததோர் ஐங்கிரியையும் சத்தியத்தினோடு
ஆனென்ற ஆர்த்திக பிரமங்கேளு
ஆச்சரியம் தயவினொடு ஆட்சேபமாகும்
கானென்ற கூர்மையினொடு
திருதிகூட கடிதான மிதாசார மஞ்சனத்தோடு
பானென்ற பத்துமே ஏமமாச்சு
பண்பான நேமத்தைப் பகர்ந்துபாரே
விளக்கவுரை :
287. பாரென்ற சோலையத்தில் கோமுத்தினோடு பரமமொடு வீரமாஞ்சிங்கமாகும்
மூரென்ற மந்திரமொடு
முத்தமாகும் முனையான பூரணமொடு ஜகந்தானாகும்
ஓவென்ற ஒன்பதும்
ஆசனந்தானாச்சு உற்றுக்கேள் பராணாய பிரிதிதன்னை
காரென்ற ரேசகமும் பூரகமும்
கலந்துநின்ற அற்பிசமும் நிற்பிசமஞ்சே
விளக்கவுரை :
[ads-post]
288. அஞ்சவே ஆறுவகை
பிரத்தியாகாரம் அனுகூல சரீரமென்ற பிரத்தியாகாரம்
இஞ்சவே இந்திரியம்
பிரத்தியாகாரம் இயல்பான பிராணனென்ற பிரத்தியாகாரம்
கஞ்சவே கரணமென்ற
பிரத்தியாகாரம் கைகலந்த காமியமாம் பிரத்தியாகாரம்
துஞ்சவே பிரத்தியாகாரந்தன்னை
சொல்லிவிட்டேன் தனியாறுஞ் சூட்டிப்பாரே
விளக்கவுரை :
289. சூட்டியே தாரனையில் ஆறுவிதம்
சொல்வேன் சுயபஞ்சபூதத்தின் தாரனைதான் ஒன்று
பூட்டியே பிராணனென்ற
தாரனையினோடு புகழான பிர்மமென்ற தாரணையுமாகும்
தாட்டியே தாகமென்ற
தாரனையினோடு தத்துவமென்ற தோரனையுஞ் சார்ந்துகேளு
மாட்டியே தாரனையினோடு மைந்தா
மகத்தான ஆறுவிதம் உண்டுபாரே
விளக்கவுரை :
290. பார்க்கவே பத்துவித தியானம்
சொல்வேன் பரிவான சடாதாரத் தியானமொன்று
மார்க்கவே தேகமொன்று
தியானமொன்று மருவிநின்ற மண்டலத்தில் தியானமொன்று
வேர்க்கவே பிரமத்தின்
தியானமொன்று வெளியான விட்டுணுவின் தியானமொன்று
ஊர்க்கவே ருத்திரனாம்
தியானமொன்று உகப்பான தேவதா தியானமொன்றே
விளக்கவுரை :