போகர் சப்தகாண்டம் 291 - 295 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

291. ஒன்றான சஞ்சாரச் சமாதியொன்று உதிக்கின்ற ஆரூடச் சமாதியொன்று
அன்றான சமாதிக்கு அஞ்சுவிதம் சொன்னேன் அப்பனே அஷ்டாங்கம் எட்டுமாச்சு
பன்றான ஏமமது பத்தும்கேளு பயனெல்லாம் சொல்லுகிறேன் பட்சிமிருகம்
துன்றான போதுவுந்தன் சுகதுக்கம்போல துப்புறவாய் மனதொன்று தெளிந்திடாயே

விளக்கவுரை :


292. தெளிந்திட்டால் அங்கிஷைதான் என்றுசொல்வார் சித்தாந்த விபரந்தான் சொல்லும்வாறு
விளிந்திட்ட வேதாந்தம் சொல்லுவாரு விரிவான பொறிவழியே அறிந்துநின்று
அளிந்திட்ட அகண்டமென்று பூரணத்தையப்பா அறிந்திட்டுப் பரிசனனாகக்கண்டு
தளிந்திட்ட ஜாதிவர்ணாச் சிரமத்தாலே சங்கற்பவிகற்பம் எல்லாம்தள்ளிப்போடே

விளக்கவுரை :

[ads-post]

293. போட்டுமே ஏறுகூறாகப் பண்ணி பூதாமலங்கிழையாய்ச் சார்ந்துநிற்கில்
நீட்டுமே நின்றநிலை ஆயிங்கிஷை என்பார்கள் நேரான பரிபாசம் விளையாட்டாலும்
ஆட்டுமே போய்விட்டு எங்குமான மாயந்தமாய் நிரைந்திருந்த சொரூபமூர்த்தி 
சாட்டுமே இதுவல்லோ சத்தியந்தான் மைந்தா தனித்தனியே கண்டிசகப் படாதென்பாரே

விளக்கவுரை :


294. என்பார்கள் அங்கிஷையில் கூடிநின்று இறந்துமே பரிபூரணமாய் இருப்பதாக்கி
மன்பார்கள் வன்மையும் தவிரவேறே மார்க்கந்தான் இல்லையென்று சந்தானித்து
தன்பார்கள் சத்தியமாய் வாக்குங்காயம் சாதமென்றும் பாலென்றும் கிரகியாமல்
அன்பார்கள் அபகரிப்பை விட்டு மனமுரைத்தால் அனித்தியமாம் சரீராதிசுபாவமாச்சே

விளக்கவுரை :


295. சரீரமென்றே அறிந்துபார் சகலமெல்லாம் தாரான சரீரத்தில் வருத்தத்தை நீக்கு
துரியமென்றே சகலஜனம் நன்மைபோலச் சுகம்வருத்தம் அல்லோர்க்கும் தந்தைதாய்மைந்தர்
பிரியமென்றே ஜனந்தான் வந்தாலுந்தான் பேராசைத்து உருவுக்கு இதமே செய்யில்
நெரியமென்றே ஆட்சேபம் இதையென்பார்கள் நேராக இதுவுமல்லோ சொல்லக்கேளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 286 - 290 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

286. நானென்ற ஏமமது பத்துமாகும் தனித்ததோர் ஐங்கிரியையும் சத்தியத்தினோடு
ஆனென்ற ஆர்த்திக பிரமங்கேளு ஆச்சரியம் தயவினொடு ஆட்சேபமாகும்
கானென்ற கூர்மையினொடு திருதிகூட கடிதான மிதாசார மஞ்சனத்தோடு
பானென்ற பத்துமே ஏமமாச்சு பண்பான நேமத்தைப் பகர்ந்துபாரே

விளக்கவுரை :


287. பாரென்ற சோலையத்தில் கோமுத்தினோடு பரமமொடு வீரமாஞ்சிங்கமாகும்
மூரென்ற மந்திரமொடு முத்தமாகும் முனையான பூரணமொடு ஜகந்தானாகும்
ஓவென்ற ஒன்பதும் ஆசனந்தானாச்சு உற்றுக்கேள் பராணாய பிரிதிதன்னை
காரென்ற ரேசகமும் பூரகமும் கலந்துநின்ற அற்பிசமும் நிற்பிசமஞ்சே

விளக்கவுரை :

[ads-post]

288. அஞ்சவே ஆறுவகை பிரத்தியாகாரம் அனுகூல சரீரமென்ற பிரத்தியாகாரம்
இஞ்சவே இந்திரியம் பிரத்தியாகாரம் இயல்பான பிராணனென்ற பிரத்தியாகாரம்
கஞ்சவே கரணமென்ற பிரத்தியாகாரம் கைகலந்த காமியமாம் பிரத்தியாகாரம்
துஞ்சவே பிரத்தியாகாரந்தன்னை சொல்லிவிட்டேன் தனியாறுஞ் சூட்டிப்பாரே

விளக்கவுரை :


289. சூட்டியே தாரனையில் ஆறுவிதம் சொல்வேன் சுயபஞ்சபூதத்தின் தாரனைதான் ஒன்று
பூட்டியே பிராணனென்ற தாரனையினோடு புகழான பிர்மமென்ற தாரணையுமாகும்
தாட்டியே தாகமென்ற தாரனையினோடு தத்துவமென்ற தோரனையுஞ் சார்ந்துகேளு
மாட்டியே தாரனையினோடு மைந்தா மகத்தான ஆறுவிதம் உண்டுபாரே

விளக்கவுரை :


290. பார்க்கவே பத்துவித தியானம் சொல்வேன் பரிவான சடாதாரத் தியானமொன்று
மார்க்கவே தேகமொன்று தியானமொன்று மருவிநின்ற மண்டலத்தில் தியானமொன்று
வேர்க்கவே பிரமத்தின் தியானமொன்று வெளியான விட்டுணுவின் தியானமொன்று
ஊர்க்கவே ருத்திரனாம் தியானமொன்று உகப்பான தேவதா தியானமொன்றே
விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 281 - 285 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

281. ஜெயமான உலகத்தில் லகிரி உண்டு தீர்க்கமாய் முதிர்ந்தபின்பு உன்னுளக்கிரி
மயமான மகாரத்தால் வந்துதாக்கும் மகாரத்தைக் கூட்டையிலே அறிந்து கூடு
குயமான கும்மென்ற ஞானத்தில் கூடு குறியோடே அறிவென்ற மவுனத்தை நாட்டு
நயமான நாதத்தின் ஆட்டங்கேளு நலங்காமல் ஒருவழியே நாட்டிடாயே

விளக்கவுரை :


282. நாடினால் சன்னமது முத்தியாகும் நலமாக யேறுதற்கு வழியைக்கேளு
வாடினால் மூலத்தில் வாசிவைத்து வழியோடே பிராணயாமம் பண்ணத்தீரும்
கூடினால் குண்டலிக்கும் நடனங்கண்டு கொடிதான வாதித்த னொளியைக்காணும்
ஆடினால் கண்டத்தில் வங்கென்றூனு ஆடாத வழிதிறக்கா வழிசெல்வாமே

விளக்கவுரை :

[ads-post]

283. செவ்வையாய் நின்றுரைத்த பழக்கமானால் சிறப்பான மனோன்மணிதான் புருவமையத்தே
மவ்வையாம் ஒளியோடே மவுனத்தைப்பூணு மகத்தான சாம்பவியைக் கண்டுகொள்வாய்
நெவ்வையாம் இவ்வளவும் யோகமார்க்கம் நின்றல்லோ சிவயோகி நிலைத்துக்காணும்
தவ்வையாம் விந்துவென்ற குருபதத்தில் தாக்கவே மவுனத்தைத் தாரையாமே

விளக்கவுரை :


284. தாரையாம் அஷ்டாங்கம் சாற்றக்கேளு தனித்தனியே ஒவ்வொன்றாய் விரித்துச்சொல்வேன்
நேரையாம் சாட்டியமாம் நித்திரையும் போக்கு நியமமாய் சதாநித்தம் தாரகத்தில் நில்லு
தூரையாம் மனம்குவிந்து கேசரியைப்பாரு சோமப்பால் கசிந்தோடும் கேசரியைக்கண்டால்
காரையாம் ரவிமதியும் வன்னிகூடி கலந்துநின்ற இடமல்லோ கேசரிதான்காணே

விளக்கவுரை :


285. காணவே ஏமமொடு நேமமாகும் கருதியதோர் ஆசனமும் பிராணயாமம்
பூணவே பிரத்தியாகாரம் தாரனையினொடு பெருமையாம் தியானமொடு சமாதியாகும்
ஏனவே இதுவெல்லாம் எட்டெயங்கு மிகையான சித்தாந்தம் வேதாந்தமிரண்டும்
ஆனவே அடமெல்லாம் சொல்லக்கேளு அறிந்துகொள்ளும் நிரைநிரையாய் அறிவில்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 276 - 280 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

276. கேசரிதான் தாயானபதத்தின் காந்தி கீர்த்தி கண்கொள்ளாது விண்கொள்ளாது
ஆசரியென்பார் ரம்பாரம் தூளென்பார் அவளுக்குள் மவுனமுண்டு அறிவுன்னிப்பாரு
கேசரியின் மவுனத்தே நிஷ்களமாய் போவாய் கெடியான வம்பரத்தில் ஏதொவேதோ
தூசரியின்படி மைந்தா லட்சியத்தில் நேர்மை சொல்லரிது அப்பறத்தே சோதித்தானே

விளக்கவுரை :


277. தானென்ற மகாரவரை காதவோசை தாயான கன்னிக்குப் பீடமாகும்
மானென்ற பூரணம்பார் மவுனஞானம் மகத்தான நாதத்தோடு ஒன்றி ஒருமுனையாகும்
ஊனென்ற ஒருவழியாய் ஒன்றாயோடு உட்புகுந்தால் தோற்றுது அங்கொன்றுமில்லை
தூனென்ற சுத்தவெளி ரவிகோடி வன்னிகுழம்பாக மதிகோடி கண்டுகொள்ளாதே

விளக்கவுரை :

[ads-post]

278. கொள்ளாத மதிதமென்ற மகாரங்காணும் குறிப்பாக நகாரமல்லோ குருவைக்காட்டும்
வள்ளாத மகாரமன்றோ மடங்கி அந்தந்தாண்டி வழிகாட்டும் இடமல்லோ கேசரிதான்மைந்தா
மள்ளாத மகாரமென்ற மேலெழுத்தேயென்பார் மாட்டுவது மூன்றெழுத்துங் காணமாட்டார்
அள்ளாத மகாரமென்ன மவுனவித்தை வாய்திறவா மவுனமாமே

விளக்கவுரை :


279. வாமென்ற மவுனவித்தை மூன்றெழுத்துயென்பார் மாட்டுகிற இனங்காணார் மார்க்கங்காணார்
வாமென்ற மவுனவித்தை வாய்மூடயென்பார் மாடோடு குதிரையது வாய்ப்போக்கேது
கோமென்ற மவனவித்தை கேட்டிருப்பார் கூட்டுறவு காணார் கள்நாதங்கேளார்
ஆமென்ற மவுனவித்தை தாண்டி நாட்டி ஆதியாந் திசைநாதம் கேட்கும்காணே 

விளக்கவுரை :


280. காணேதான் மதியினுட அமுர்தஞ்சிந்தும் கலங்காமல் துவாதசங் கடந்துதோன்றும்
தானேதான் ஓசையறும் தன்னினைவும் போகும் தாரைபோல் அண்ணாக்கில் அமிர்தமொடு
மானேதான் மும்மலங்கள் அற்றுப்போகும் சகத்தான ஐம்பொறிகள் அடங்கிநிற்கும்
தேனேதான் மேலாமுதம் லகிறிமீறிச் சணமாகும் மூன்றுக்குமேல் ஜெயமுமாமே

விளக்கவுரை :


Powered by Blogger.