போகர் சப்தகாண்டம் 326 - 330 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

326. போகுமே சடத்திலுள்ள நோய்களெல்லாம் பொருமியே நீராக வெந்துபோகும்
தேருமே தேகமது சிவப்புமாகும் செவ்வலரிப் பூபோலாம் கண்களிரண்டும்
வாகுமே சடமிந்த பிறுகுந்தேகம் மகத்தான சக்கரங்கள் ஆறுங்காணும்
ஓகுமே பஞ்சகர்த்தாளை வருந்தான்வந்து உற்றுவவர் கேட்டதெல்லாம் உதவுமாறே

விளக்கவுரை :


327. உரைக்கவே ரேசகந்தான் விடுவதாகும் ஓங்கியதோர் பூரகந்தான் உள்ளேவாங்கல்
தரைக்கவே கும்பகந்தான் தம்பிச்சிருத்தல் தாங்கியதோர் பீசமந்திரத்தினூடல்
விரைத்துமே நீபீசமந்திரத்தைவிட்டு தெளியிலே பூரித்தால் மெதுவிலேதான்
அரைக்கவே அஞ்சுவித பிராணயாமம் அசையாமல் தயாசனத்தில் இருத்திப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

328. பார்க்கவே மாத்திரைதான் முப்பத்திரண்டு பண்பாக பூரிப்பாய் மூலத்துக்குள்ளே
ஆர்க்கவே மாத்திரைதான் அறுபத்தினாலு அடவாக கும்பித்துப்பாரு
மூர்க்கவே மாத்திரைதான் பதினாறப்பா முறையாக ரேசிப்பாய் தவறிடாமல்
நார்க்கவே அறிந்துகொண்டு நந்தியைத்தான் பார்த்து நலந்தபின் பிறநலம் நாடிஊதே

விளக்கவுரை :


329. நாடியே விஷ்ணுவை நயந்துவூது நலமாக உரைத்தபின்பு ருத்திரனில் சேரு
ஊடியே மஹேஸ்பரத்தில் நின்று ஊது உரைத்தபின்பு சதாசிவத்தில் உகந்துகூடு
ஓடியே ஆறுதலம் முத்தியேறி உகந்துமே யொன்றாச்சு பிராணயாமம்
பீடியே விரமத்தின் காயமத்தின் பேராக ஒருமுறைக்குள் நீங்கிப்போமே

விளக்கவுரை :


330. நீங்கிப்போம் பிராணாயஞ் செய்யும்போது நிலைத்துமே மாத்திரைதான் ஏறயேற
காங்கிப்போம் கப்பமிகும் நேர்மைகொள்ளும் கதித்துமே கபாலத்தை அசைத்துத்தூக்கும்
வூங்கிப்போம் மும்மலமும் களிம்புபோல மூர்ந்துநின்ற நாடியெல்லாம் சுத்தியாகும்
ஓங்கிப்போம் பிராணாயாம் உரைத்துதானால் ஓங்குமே திசைநாதம் உண்மைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 321 - 325 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

321. சரீரமொன்றே நானென்று அபிமானித்து தனித்திருந்து ஈஸ்வரனைச் சிந்திப்பார்கள்
சரீரமென்றே சிவனுக்கு நீரவான கலந்துநின்ற லிங்கத்தைக் கண்டாப்போலே
உரீரமென்றே ரூபமாய் நின்றதெல்லாம் உண்மையாய் ஈஸ்வரனைப்போலே பார்ப்பார்
புரீரமொன்றே பிராணாயத் தியானங்கேளு பகழ்பெறவே வொன்றுவஞ்சக முப்பத்தாறே

விளக்கவுரை :


322. ஆறோடு பிரகிருதியென்ற புருஷனப்பா அதிகமாம் பரமார்த்தம் மூன்றாய்க்கண்டு
மாறோடு காஷமஷ்டி மருவிநின்ற வியாஷ்டியாய்ப் பிரித்துக்கொண்டு
தேறோடு மந்திரத்தால் பூசைபண்ணி செபித்துநின்று உபாசிப்பார் நாற்பத்திரண்டு
ஊறோடு ஒவ்வொன்றே எட்டாய்வாங்கி உயர்ந்து நின்றது இத்தனையும் வித்தையாமே

விளக்கவுரை :

[ads-post]

323. வித்தையாம் பிரமமென்ற தியானங்கேளு விரிவான மாயையொடு மாயப்பூமி
சுத்தையான சுத்தமென்ற சைதன்னியந்தான் சருதியாய் இதுமூன்றும் விண்ணைப்போலே
வித்தையாய் பறந்திருக்க காடுகண்டு மதித்தவரைத் தீர்த்தமூர்த்தி சேத்திரமாய்ப்பார்த்து
உத்தையாய் எந்நேரஞ் சிந்தைசெய்து உகந்துநான் பிரமமென்று எண்ணியெண்ணே

விளக்கவுரை :


324. எண்ணியே பத்துநான் இயல்பாய்ச் சொன்னேன் எளிதாக சமாதியஞ்சும் முன்னேசொன்னேன்
அண்ணியாதோர் அஷ்டாங்கம் அடக்கிச்சொன்னேன் அடவெல்லாம் தானறிந்தால் ஞானியாவன்
எண்ணியதோர் சமாதிக்கு ஆதிக்கஞ்சொன்னேன்உரைப்பான மாயியுட உறுதிசொன்னேன்
உண்ணியதோர் உனைஞ்சுமுன்னே பார்த்துத்தேறி உண்ணியே வாசியென்ற திறத்தைப்பாரே

விளக்கவுரை :


325. திறமாக இப்படிதான் பிராணயாமம் செய்வதற்கு ரோமமெல்லாம் வேர்வையோடு
அறமாக ஆடனொன்று வாசிதன்னை அனுதினமும் அப்பியாசம் பண்ணினாக்கால்
தறமான தாதுவெல்லாஞ் சித்தியாகும் தசையிலுள்ள தோஷமெல்லாம் சாடிப்போகும்
நிறமான நோயெல்லாம் கக்கும்பாரு நெடிதாகச் சட்டையொன்று திரண்டுபோமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 316 - 320 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

316. கேளென்ற சரீசத்தில் பஞ்சபூதம் கெடியாக இருக்கின்ற தானத்துள்ளே
மானென்ற மண்டலத்தில் வர்னமுத்து மனதுள்ளே தரித்துடனே பிராணாதாரம்
பானென்ற பதினாறு மூலத்தொட்டு பருவமுடன் பிராணனைத்தான் தரிக்கப்பண்ணி
தானென்ற கிரமத்தோடே சஞ்சரிக்கில் தாரணைதான் நாலுவிதம் சாதிப்போராக்கே

விளக்கவுரை :


317. சாதித்த தியானத்தை சாற்றக்கேளு சட்டமாம் பிரமருட வீட்டுக்குள்ளே
ரேதித்த மண்டலமும் குண்டலங்கிரீடங் கலந்துமே சரஜொதி லோகப்ரதானம்
சோதித்த பரிவாரஞ் சூழ்ந்துநிற்க சொல்லுகிறேன் வானத்தில் சூட்டினோர்க்கு
மாதித்த வரனுடைய தியானங்கேளு மாசற்ற பச்சைவர்ணம் வருத்திட்டாயே

விளக்கவுரை :

[ads-post]

318. வருத்திட்ட சங்கொடு சக்கரமும் தடியும் தரைந்துநின்ற பதுமைபோல் நாற்கால்கள்
குருந்திட்ட குண்டலமும் கிரீடம்வைத்துக் கொத்தான முத்தோடு துளசிமாலை
கருந்திட்ட கவுஸ்திவமாம் ரத்தினம் பூண்டுகையெடுக்க லட்சுமியும் கலந்துவைத்து
அருந்திட்ட பிரமாதி லோகபாலர் அருகிருத்தி தியானிப்பார் அறிந்துகாணே

விளக்கவுரை :


319. அறிந்துமே ருத்திரனைத் தியானம்பண்ணு ஆண்மையாம் அஞ்செழுத்தும் ஆயுதங்களோடு
பிரிந்துமே குண்டலமும் கிரீடம்பூண்டு புகழான ருத்திரியை வாமம்வைத்து 
எரிந்துமே இருக்கிறதாய் தியானித்துள்ளே எளிதாக உபசரிப்பார் பெரியோர்தாமும்
அறிந்துமே மயேஸ்பரனைக் கருத்தாய் நோக்கி மாசற்று அர்ச்சிப்பார் வண்மையோரே

விளக்கவுரை :


320. வண்மையாம் சதாசிவனும் மனோன்மணியை நோக்கி மனதுண்ணி தியானிப்பார் அதிகமெத்த
ஆண்மையாய் இப்படியே அறுவரை தியானமானபின்பு மண்டலத்தில் மூன்றுவகைதியானம்
உண்மையாய் இப்படியே உபாசிப்பார்க்க உத்தமமாம் தேவதா தியானமாச்சு   
விண்மையாய் விசுவமென்ற தியானங்கேளு விளங்கிநின்ற பிரபஞ்சமெல்லாம் சரீரமொன்றே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 311 - 315 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

311. ரேசித்து இப்படிதான் அங்கென்று கும்பி நில்லாமல் இதுரண்டும் தீர்ந்தபின்பு
ஆசித்து அகாரமுதல் உகாரங்கூட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்தேக்கு
மாசற்ற மவுனந்தான் குவிந்தபின்பு மருவியதோர் மூலத்தை விட்டுநீயும்
காகித்து கண்டத்தே நின்று ஊது காலடங்கி வந்தபின்பு மூலம்பாரே

விளக்கவுரை :


312. பார்த்துமே அறிவோடே மவுனம்பூரி பரிவாகப் பூரணத்தை அதுக்குள் கும்பி
நீர்த்துமே முனையோடே ரேசகத்தைப்பண்ணு நிற்பிசமாம் பிரமமென்ற பிராணயாமம்
பூர்த்துமே பிரபஞ்சமென்ற ஆசைவிட்டு பின்னொன்று மனதுள்ளே சங்கியாமல்
ஆர்த்துமே அந்தமென்ற காரணமுமாகி அந்தமென்ற மார்க்கத்தில் ஆடிக்காணே

விளக்கவுரை :

[ads-post]

313. ஆடியே ஆசனத்தை விரித்துச் சொல்வேன் அதிகமாஞ்சோஸ்திதத்தை அறியக்கேளு
மூடியே முழங்காலால் குளச்சில்ரண்டில் முனிந்தாக்கால் ரண்டும்வைக்கச் சொல்லதிகமாச்சு
சூடியே சிங்காசனத்தைக்கேளு சறந்தையோ வேட்டிதனைப் போட்டுக்கொண்டு
நூடிகய முழங்கால்கள் நீட்டி நுனிமூக்கைப் பார்த்திருப்பார் நிசமாங்காணே

விளக்கவுரை :


314. நிசமான பத்திராசனத்தைக் கேளு நேராக உட்கார்ந்து காலைரண்டும்  
துசமான பிறகாலே கையால்கட்டி சுகமுற்று இருக்கையில் ஆசனமுமாச்சு
நிசமான மூத்தயாசனத்தைக்கேளு முனிந்துமே காட்டோடு காடுபோட்டு
குசமான குத்துக்குள் குதிரைவைத்து கூசாமல் இருப்பதிந்தக் கொள்கைதானே

விளக்கவுரை :


315. கொள்கையாம் பூரயாசனத்தைக் கேளு குறிபெறவே ரெண்டுகையும் தலையிலூனி
கிள்கையாம் முழங்கையைத் தொப்புளிலே வைத்து கலந்துதடிபோலக் கவருவார்கள்
தூள்கையாம் சுகமுற்ற யாசனத்தைக்கேளு சுகமாக வேண்டியதோர் படியிருப்பு
உள்கையாம் எண்பதுக்கும் பருவம்சொன்னேன் உரைந்துமினி பிராணயாமம் உரைக்கக்கேளே

விளக்கவுரை :


Powered by Blogger.