321. சரீரமொன்றே நானென்று
அபிமானித்து தனித்திருந்து ஈஸ்வரனைச் சிந்திப்பார்கள்
சரீரமென்றே சிவனுக்கு நீரவான
கலந்துநின்ற லிங்கத்தைக் கண்டாப்போலே
உரீரமென்றே ரூபமாய்
நின்றதெல்லாம் உண்மையாய் ஈஸ்வரனைப்போலே பார்ப்பார்
புரீரமொன்றே பிராணாயத்
தியானங்கேளு பகழ்பெறவே வொன்றுவஞ்சக முப்பத்தாறே
விளக்கவுரை :
322. ஆறோடு பிரகிருதியென்ற
புருஷனப்பா அதிகமாம் பரமார்த்தம் மூன்றாய்க்கண்டு
மாறோடு காஷமஷ்டி மருவிநின்ற
வியாஷ்டியாய்ப் பிரித்துக்கொண்டு
தேறோடு மந்திரத்தால்
பூசைபண்ணி செபித்துநின்று உபாசிப்பார் நாற்பத்திரண்டு
ஊறோடு ஒவ்வொன்றே
எட்டாய்வாங்கி உயர்ந்து நின்றது இத்தனையும் வித்தையாமே
விளக்கவுரை :
[ads-post]
323. வித்தையாம் பிரமமென்ற
தியானங்கேளு விரிவான மாயையொடு மாயப்பூமி
சுத்தையான சுத்தமென்ற
சைதன்னியந்தான் சருதியாய் இதுமூன்றும் விண்ணைப்போலே
வித்தையாய் பறந்திருக்க
காடுகண்டு மதித்தவரைத் தீர்த்தமூர்த்தி சேத்திரமாய்ப்பார்த்து
உத்தையாய் எந்நேரஞ்
சிந்தைசெய்து உகந்துநான் பிரமமென்று எண்ணியெண்ணே
விளக்கவுரை :
324. எண்ணியே பத்துநான் இயல்பாய்ச் சொன்னேன் எளிதாக சமாதியஞ்சும் முன்னேசொன்னேன்
அண்ணியாதோர் அஷ்டாங்கம்
அடக்கிச்சொன்னேன் அடவெல்லாம் தானறிந்தால் ஞானியாவன்
எண்ணியதோர் சமாதிக்கு
ஆதிக்கஞ்சொன்னேன்உரைப்பான மாயியுட உறுதிசொன்னேன்
உண்ணியதோர் உனைஞ்சுமுன்னே
பார்த்துத்தேறி உண்ணியே வாசியென்ற திறத்தைப்பாரே
விளக்கவுரை :
325. திறமாக இப்படிதான்
பிராணயாமம் செய்வதற்கு ரோமமெல்லாம் வேர்வையோடு
அறமாக ஆடனொன்று வாசிதன்னை
அனுதினமும் அப்பியாசம் பண்ணினாக்கால்
தறமான தாதுவெல்லாஞ்
சித்தியாகும் தசையிலுள்ள தோஷமெல்லாம் சாடிப்போகும்
நிறமான நோயெல்லாம்
கக்கும்பாரு நெடிதாகச் சட்டையொன்று திரண்டுபோமே
விளக்கவுரை :