316. கேளென்ற சரீசத்தில் பஞ்சபூதம்
கெடியாக இருக்கின்ற தானத்துள்ளே
மானென்ற மண்டலத்தில்
வர்னமுத்து மனதுள்ளே தரித்துடனே பிராணாதாரம்
பானென்ற பதினாறு மூலத்தொட்டு
பருவமுடன் பிராணனைத்தான் தரிக்கப்பண்ணி
தானென்ற கிரமத்தோடே
சஞ்சரிக்கில் தாரணைதான் நாலுவிதம் சாதிப்போராக்கே
விளக்கவுரை :
317. சாதித்த தியானத்தை சாற்றக்கேளு சட்டமாம் பிரமருட வீட்டுக்குள்ளே
ரேதித்த மண்டலமும்
குண்டலங்கிரீடங் கலந்துமே சரஜொதி லோகப்ரதானம்
சோதித்த பரிவாரஞ்
சூழ்ந்துநிற்க சொல்லுகிறேன் வானத்தில் சூட்டினோர்க்கு
மாதித்த வரனுடைய தியானங்கேளு
மாசற்ற பச்சைவர்ணம் வருத்திட்டாயே
விளக்கவுரை :
[ads-post]
318. வருத்திட்ட சங்கொடு
சக்கரமும் தடியும் தரைந்துநின்ற பதுமைபோல் நாற்கால்கள்
குருந்திட்ட குண்டலமும்
கிரீடம்வைத்துக் கொத்தான முத்தோடு துளசிமாலை
கருந்திட்ட கவுஸ்திவமாம்
ரத்தினம் பூண்டுகையெடுக்க லட்சுமியும் கலந்துவைத்து
அருந்திட்ட பிரமாதி லோகபாலர்
அருகிருத்தி தியானிப்பார் அறிந்துகாணே
விளக்கவுரை :
319. அறிந்துமே ருத்திரனைத்
தியானம்பண்ணு ஆண்மையாம் அஞ்செழுத்தும் ஆயுதங்களோடு
பிரிந்துமே குண்டலமும்
கிரீடம்பூண்டு புகழான ருத்திரியை வாமம்வைத்து
எரிந்துமே இருக்கிறதாய்
தியானித்துள்ளே எளிதாக உபசரிப்பார் பெரியோர்தாமும்
அறிந்துமே மயேஸ்பரனைக்
கருத்தாய் நோக்கி மாசற்று அர்ச்சிப்பார் வண்மையோரே
விளக்கவுரை :
320. வண்மையாம் சதாசிவனும்
மனோன்மணியை நோக்கி மனதுண்ணி தியானிப்பார் அதிகமெத்த
ஆண்மையாய் இப்படியே அறுவரை
தியானமானபின்பு மண்டலத்தில் மூன்றுவகைதியானம்
உண்மையாய் இப்படியே
உபாசிப்பார்க்க உத்தமமாம் தேவதா தியானமாச்சு
விண்மையாய் விசுவமென்ற
தியானங்கேளு விளங்கிநின்ற பிரபஞ்சமெல்லாம் சரீரமொன்றே
விளக்கவுரை :