311. ரேசித்து இப்படிதான்
அங்கென்று கும்பி நில்லாமல் இதுரண்டும் தீர்ந்தபின்பு
ஆசித்து அகாரமுதல்
உகாரங்கூட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்தேக்கு
மாசற்ற மவுனந்தான்
குவிந்தபின்பு மருவியதோர் மூலத்தை விட்டுநீயும்
காகித்து கண்டத்தே நின்று
ஊது காலடங்கி வந்தபின்பு மூலம்பாரே
விளக்கவுரை :
312. பார்த்துமே அறிவோடே
மவுனம்பூரி பரிவாகப் பூரணத்தை அதுக்குள் கும்பி
நீர்த்துமே முனையோடே
ரேசகத்தைப்பண்ணு நிற்பிசமாம் பிரமமென்ற பிராணயாமம்
பூர்த்துமே பிரபஞ்சமென்ற
ஆசைவிட்டு பின்னொன்று மனதுள்ளே சங்கியாமல்
ஆர்த்துமே அந்தமென்ற
காரணமுமாகி அந்தமென்ற மார்க்கத்தில் ஆடிக்காணே
விளக்கவுரை :
[ads-post]
313. ஆடியே ஆசனத்தை விரித்துச்
சொல்வேன் அதிகமாஞ்சோஸ்திதத்தை அறியக்கேளு
மூடியே முழங்காலால்
குளச்சில்ரண்டில் முனிந்தாக்கால் ரண்டும்வைக்கச் சொல்லதிகமாச்சு
சூடியே சிங்காசனத்தைக்கேளு
சறந்தையோ வேட்டிதனைப் போட்டுக்கொண்டு
நூடிகய முழங்கால்கள் நீட்டி
நுனிமூக்கைப் பார்த்திருப்பார் நிசமாங்காணே
விளக்கவுரை :
314. நிசமான பத்திராசனத்தைக் கேளு
நேராக உட்கார்ந்து காலைரண்டும்
துசமான பிறகாலே கையால்கட்டி
சுகமுற்று இருக்கையில் ஆசனமுமாச்சு
நிசமான மூத்தயாசனத்தைக்கேளு
முனிந்துமே காட்டோடு காடுபோட்டு
குசமான குத்துக்குள்
குதிரைவைத்து கூசாமல் இருப்பதிந்தக் கொள்கைதானே
விளக்கவுரை :
315. கொள்கையாம் பூரயாசனத்தைக்
கேளு குறிபெறவே ரெண்டுகையும் தலையிலூனி
கிள்கையாம் முழங்கையைத்
தொப்புளிலே வைத்து கலந்துதடிபோலக் கவருவார்கள்
தூள்கையாம் சுகமுற்ற
யாசனத்தைக்கேளு சுகமாக வேண்டியதோர் படியிருப்பு
உள்கையாம் எண்பதுக்கும்
பருவம்சொன்னேன் உரைந்துமினி பிராணயாமம் உரைக்கக்கேளே
விளக்கவுரை :