போகர் சப்தகாண்டம் 306 - 310 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 306 - 310 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

306. எண்ணவே எண்ணியந்த மதியாறில் வந்தால் இயல்பாக அழிசகத்தில் இருந்துகொண்டு
திண்ணதே மனதொன்றில் வேதாந்தம்பார்த்து சீராக நிற்கிறதே லட்சையாகும்
வெண்ணவே வேதாந்த பிரமந்தன்னில் விரைந்துநின்று பூரணத்தை தினம்தான்நோக்க
வண்ணவே கோழைவிட்டு தெளிவுவந்து வளப்பமுற்றால் மதியென்று சொல்லலாமே

விளக்கவுரை :


307. சொல்லவே நான்பிரமமென்று ஆசான் சுருதிகுரு உபதேசப்படியேநின்று
வெல்லவே மேதாந்தப் பொருளென்றெண்ணி மிகுதியாசைதன்னை தள்ளிவிட்டால்
மல்லவே மனமொத்தால் சிவமிதாச்சு மற்றதெல்லாம் சிவமல்ல மாயங்காணும்
வல்லவே மவுசத்தை ஐம்பொறியின் வழியில் மருவாமல் நிறுத்தினால் மாயம்போமே

விளக்கவுரை :

[ads-post]

308. மாயாமல் நான்பிரமமென்றே எண்ணி மனதொத்து நிரந்தரமும் வேதாந்தம்பார்த்து
பேயாமல் எந்தெந்த காரியங்கள் வந்தும் புகழாக துக்கமுடன் சுகந்தான்வந்தும்
காயாமல் குருசொன்ன காரியத்தின் வழியைக் கைமுறையாய் நிற்பதுவே விரதமாச்சு
நேயாமல் ஏமமென்ற பத்துஞ்சொன்னேன் நேராக இருபதையும் அனுஷ்டித்தேறே

விளக்கவுரை :


309. ஏறியிந்த இருபதையும் அனுஷ்டித்தாக்கால் ஏற்றமாம் மனத்திடம் இல்லாவிட்டால்
தேறியிந்தச் சுவரில்லாச் சித்திரம் போலாகும் சிறந்த சீவரடிப்படைதான் வைக்குமுன்னே
சூரியிந்த குளிகை யவயத்து மொக்கு துப்புரவாய்க் காயசித்தி பண்ணுமுன்னே
ஊறியிந்த சதுரகத்தைக் கண்டதொக்கு முண்மையிருபதும் அனுஷ்டித்தால் அறிவுண்டாமே

விளக்கவுரை :


310. அறிவுண்டாம் சதுர்யுகத்தோடே மூர்த்தியைக்காணா அப்பனே அஷ்டாங்கம் அறிந்துயுண்ணு
தறிவுண்டாச்சு கசாதனமாயிருந்துகொண்டே தனித்ததோர் மூலத்தில் வங்கென்றுபூரிக்
குறியுண்டாய் கும்பித்து மாத்தீயையேற்றி கூராகசிகாரத்தால் முடியுண்டாக்கி
நெறியுண்டாய் மூன்றுமுறை மாறினாக்கால் நேராகக் கும்பகமே ரேசிப்பாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar