போகர் சப்தகாண்டம் 361 - 365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

361. கடுகவே ஏறயிலே தீட்டைவிதிக் கருவைக் கருத்துண்ணி அங்கங்கே கலந்துகாணும்
அடுகவே பிராணயாமம் அங்கேவைத்து வாகாக விழுங்கையிலே ஒளியேயீறும்
திடுகவே ஒளியோடே சேரு சேர சிறப்பான திசைநாதம் செவியில் கேட்கும்
அடுகவே பராபரத்தாய் அமிர்தம் ஈவாள் அகண்டபரி பூரணந்தான் பேசும்பாரே

விளக்கவுரை :


362. பார்க்கவே பூரணந்தான் எளிதோமைந்தா பரிவான தசதீட்சைக் குருவைக்காரு
ஆர்க்கவே அவர்மனது வந்துதானால் ரண்டிலே சித்தியாம் அடைந்துகூடும்
நோக்கவே இதைவிட்டு மத்தில்சென்று நினைவுகெடப் பானமுண்டு நிலைத்துவுண்ணார்
தாக்கவே கூசாதே சற்குருவைத்தேடித்தான் அசையாமல் உடல்பொருளுமாவிநீயே

விளக்கவுரை :

[ads-post]

363. ஆவியவர் கைக்கொண்டால் கண்டங்கொள்ளும் அடுக்கான வானுவந்தான் பிறவிபோச்சு
பாவியென்ற பேரெல்லாம் படுதீயாச்சு பராபரத்தில் உன்னறிவு பாய்ந்துபோச்சு 
காவியென்ற சீலையென்ற வேஷமென்னக் கருவுண்ணி சமுசாரத்தின் உள்ளேநிற்பார்
கோவியென்ற கோபம்வந்து செபித்தாரானால் கோட்டிவிழுந்தாப்போல கொள்குந்தானே

விளக்கவுரை :


364. தானான பிராணயாமம் பண்ணும்போது தயங்கியே அபினாபரத்தில் பானந்தாக்கில்
ஊனான உகாரத்தில் உந்தியிலே சேர்வாய் முகப்பான மருந்துகொண்டால் சருமநோய்தான்
ஆனான லட்சியத்தை அதிலேவைத்து அடியற்றா மூர்ச்சையுள்ளே வாங்கிநின்றால்
பானான வபானமது பிரிந்துபோகும் பண்பான பானத்தை பாங்காயுண்ணே

விளக்கவுரை :


365. உண்ணவே இவ்வளவும் யோகமார்க்கம் உறுதியாய் பார்த்தபடி உண்மைசொன்னேன்
கண்ணவே காலாங்கி ஐயர்சொல்லக் கடாட்சித்த பாட்டரென்ற மூலநாயர்
திண்ணவே அவர்பதத்தைச் சிரசில்வைத்துச் சிறந்தமனோன்மணித்தாயார் சொல்லக்கேட்டு
விண்ணவே பதஞ்சலியர் வியாக்கிரமர்தாமும் விதியுள்ளாரென்று போதித்தாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 356 - 360 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

356. கொண்டிடவே ஐவரையும் சோதித்தேறி கூர்ந்துமே திரும்பிவந்து அடியேன்பக்கம்
அண்டிட்ட அஷ்டாங்கம் அறிந்துபார்த்து அஷ்டான சைதன்யத்துள் அடர்ந்திருந்தார்
விண்டிட்ட அறுபத்து நாலுபேர் சீஷர்மேதினியில் எங்குமே சஞ்சரித்து
அண்டிட்டு சமாதிக்குள் அமைந்திருந்தார் அறியாட்டல் யோகத்தை யவத்தமாமே

விளக்கவுரை :


357. அவத்தமா அவயோகங்கள் செய்தானாகில் அரியாமல் பூரித்தல் ஒதுங்கிற்றானால்
விவத்தசாம் வியாப்பிரத்தை சொருக்கிக்கொள்ளும் விழிப்பான கனபோகமும் கோணிப்போகும்
உவத்தமா உடம்மெரி உமிகளாகும் உடலெல்லாம் வேர்வையால் வலியேகாணும்
கவத்தமாம் அட்டயோகம் கர்மயோகம் கடிதான அவயோகம் கருமங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

358. கருமமாய் பூதமெல்லாம் லயமேசெய்து காரணமாம் தத்துவத்தை லயமேசெய்து
நருமமாய் குருபதத்தில் நாட்டிநின்று நயந்துமே ஏறுவார் கடினமெத்த
பருவமாய்ப் பிரியங்கி யோகத்தாலே பரிந்துமே மலிவார்கள் கர்மகர்மம்
நிருபமாய் மிக்கான ராஜயோகம் நிலைத்தல்லோ சாதித்து நினைவாய்ப் பாரே

விளக்கவுரை :


359. நினைவாக அதன்மேலே மந்திரயோகம் நேரான தசதீட்சை முறையோடொக்க
அனைவாக அண்டவெளிச் சக்கரத்தை ஆடிநின்று பிராணாயந் தீர்ந்துதேறி  
மனைவாக நிற்குணத்தின் மவுனத்தூடி மருவிவிட்டாய் மருவிவிட்டாய் பூரணத்தினோடு
வினைவாகத் தசதீட்சைப்பார் சொல்லப்போறார் விரைந்துணர்ந்த பெரியோரை அடுத்திடாயே

விளக்கவுரை :


360. பெரியோரை அடுத்திட்டு தொண்டுபண்ணி போற்றிசெய்து அனுசரித்துக் கேட்டால் சொல்வார்
மரியோரைக் கேட்டேனே சொல்லவில்லையென்று வனக்குறங்கால் கெட்டவர்கள் கோடாகோடி
துரியாதே அலையாதே மோட்சம்வேண்டி துரிசிவிட்டுக் காத்திருந்து குருபதத்தில்கேளு
குரியார்க்குக் கொடுத்திட்டால் தீட்சையாவார் கூட்டடா பூரணத்தில் கடுகநீயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 351 - 355 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

351. போற்றியே அர்ச்சித்து அஞ்சலிபண்ணி பேரான சிவசொத்தை பொசித்திடாமல்
தேற்றியே புல்சருகு தனைப்பொசித்து சிவசிந்தை மறவாமல் காத்திருக்கும்
ஆற்றியே இப்படிதான் அநேககாலம் அர்ச்சித்துக் காத்திருக்கும் நாளில்தானும்
லேற்றியே வெளியொளிபாழ் தன்னைவிட்டு வெளியிலே மனந்தன்னை விரைந்திட்டேனே

விளக்கவுரை :


352. விரைந்திட்டு கண்விழித்து பார்க்கும்போது மிருகமென்ற சிங்கமெல்லாம் நடுநடுங்கி
அரைந்திட்டு அடிவணங்கி நிற்கும்போது ஆர்நீங்களென்றுசொல்லி நான்தான்கேட்க
திரந்திட்ட மிருகமென்ற சிங்கம்நாங்கள் செயலறியாப் புத்திதனில் செயலெண்ணி
முறைத்திட்ட மூர்த்தியிட பதத்தில் நின்றோம் உனிந்தகண்ணீர் தில்லையினால் அறிவுண்டாச்சே

விளக்கவுரை :

[ads-post]

353. அறிவுண்டாய்ப் பயந்துமே நடுங்கி அடியேன்கள் கடந்தேறும் பொருட்டுக்காகத்
தெறுவுண்டாய்த் தேவர்மறம் காத்திருந்தும் ஜெயமேது தேவரீர் கடாஷத்தாலே
நெறியண்டாய் மிருகமென்ற சட்டைநீக்கி நித்யமா முத்தியெனக்கருளுகன்னே
நெறிவுண்டாய் நான்தானும் உபதேசிக்க நாடாளும் ராஜாவாய்ப் பிறந்திட்டாரே

விளக்கவுரை :


354. பிறந்திட்டு ராஜ்ஜியங்கள் மிகவும் ஆண்டு பேரானசுகாதிகளை அனுபவித்து
மறந்திட்ட மாய்கை பெண்ணாசை மயக்கறுத்து மனதுதன்னை வழிப்பாடாக்கி
திறந்திட்டுத் திரேகசதமல்லவென்று திரும்பிவந்து ராஜாவாய்க் குருவேயென்று
கறந்திட்ட பால்போல யோகஞானம் கருத்தெனக்கு அருளுயென்றார் கடாஷித்தேனே

விளக்கவுரை :


355. என்றான கடாஷத்தால் யோகம்பார்த்து எத்தான ஆசானயோகத்தில்நின்று  
கன்றான கைநெல்லிக் கனிபோலேதான் கருதியே யோகத்தின் கருத்தறிந்து
தின்றான கற்பங்கள் வெகுநாள் தின்று சடமிருக்கக் கற்பாந்தகாலந்தானும்
குன்றான வாதமெல்லாம் கூர்ந்துபார்த்து குளிகைகட்டி கெவுனவழி கொண்டிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 346 - 350 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

346. சித்தியாய் அறுபத்திமூன்று பேரும் தேசமெங்கும் திரிந்திட்டு விண்ணிலேறி
அத்தியே அடுக்காறும் அதனில்புக்கி அதிசயங்களெல்லாம் தானறிந்து பார்த்து
நத்தியாய் நடனத்தின் புதுமைகண்டு நாதாந்தத் திசைநாதம் நாட்டம்பார்த்து
புத்தியாய் இப்பூமிக்குள் மேருவலம்வந்து புகழ்ந்தாரே பிள்ளைகள்தான் புகழ்ந்தேன்காணே

விளக்கவுரை :


347. காணவே பிள்ளைகள்தான் வணக்கம்செய்தார் கையமர்த்தி சமாதிக்குள் செல்லுமென்றேன்
ஊணவே காலாங்கிநாயகர் மூலக்குருவுமே நெஞ்சில்வைத்து மூலநாயர்
தோணவே பாதமெந்தன் சிரசில்வைத்து சிவயோக மார்க்கத்தில் தெளியவென்று
வேணவே அசோகமாமரத்தின்கீழே வேட்டிதனை விரித்துமே விரைந்தேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

348. விரைந்துமே நூறாண்டு சிவயோகத்தில் வெளியொளிபாழ்தன்னில் மனம்விரவிப்போச்சு
திறைந்துமே ஆண்பெண்ணாஞ் சிங்கம்ரண்டும் சிலையென்று நம்மையெண்ணிச் சிறக்குநாலில்
புரைந்துமே வெகுநாள்தான் பிள்ளைகளைப் பெற்றுப் பெருக்கங்களாகியே சிங்கக்கூட்டம்
நரைந்துமே நம்மைசுத்தி இருந்துகொண்டு நாட்டமாய் இரைகொண்டு கொடுக்கும்பாரே

விளக்கவுரை :


349. பார்க்கவே வெகுநாள்தான் இருக்கும்போது பதிவாக அதிலொருநாள் நமக்குத்தானும்
ஆர்க்கவே ஆனந்தங்கழிந்துதானும் மருவிபோல் தில்லை சிங்கமடியின்மேலே
தீர்க்கவே சிங்கமது படுத்திருக்கத் தில்லைதான் சிங்கத்தின் வாயில்வீழ
ஆர்க்கவே எழுந்திருந்து விழித்துப்பார்த்து ஆனந்தவாரியினால் ஞானமாச்சே

விளக்கவுரை :


350. ஞானமாய் பந்துகனந் தனையழைத்து நாதாந்த சிவயோகி தன்னைத்தாமும்
கானமாய்க் கல்லென்று பருகிருந்தோம் கடுஞ்சாபம் நமக்குவரப்போகுதென்று
தூனமாய் இடமெல்லாம் சுத்திபண்ணி சுற்றிலுந்தான் பிள்ளைகளைக் காவல்வைத்து
நமனமாய்த் தங்களுக்கு இடந்தான்வேறே அவதரித்துச் சதாநித்தம் போற்றுவாரே

விளக்கவுரை :


Powered by Blogger.