356. கொண்டிடவே ஐவரையும்
சோதித்தேறி கூர்ந்துமே திரும்பிவந்து அடியேன்பக்கம்
அண்டிட்ட அஷ்டாங்கம்
அறிந்துபார்த்து அஷ்டான சைதன்யத்துள் அடர்ந்திருந்தார்
விண்டிட்ட அறுபத்து நாலுபேர்
சீஷர்மேதினியில் எங்குமே சஞ்சரித்து
அண்டிட்டு சமாதிக்குள்
அமைந்திருந்தார் அறியாட்டல் யோகத்தை யவத்தமாமே
விளக்கவுரை :
357. அவத்தமா அவயோகங்கள்
செய்தானாகில் அரியாமல் பூரித்தல் ஒதுங்கிற்றானால்
விவத்தசாம் வியாப்பிரத்தை
சொருக்கிக்கொள்ளும் விழிப்பான கனபோகமும் கோணிப்போகும்
உவத்தமா உடம்மெரி உமிகளாகும்
உடலெல்லாம் வேர்வையால் வலியேகாணும்
கவத்தமாம் அட்டயோகம்
கர்மயோகம் கடிதான அவயோகம் கருமங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
358. கருமமாய் பூதமெல்லாம்
லயமேசெய்து காரணமாம் தத்துவத்தை லயமேசெய்து
நருமமாய் குருபதத்தில்
நாட்டிநின்று நயந்துமே ஏறுவார் கடினமெத்த
பருவமாய்ப் பிரியங்கி
யோகத்தாலே பரிந்துமே மலிவார்கள் கர்மகர்மம்
நிருபமாய் மிக்கான ராஜயோகம்
நிலைத்தல்லோ சாதித்து நினைவாய்ப் பாரே
விளக்கவுரை :
359. நினைவாக அதன்மேலே
மந்திரயோகம் நேரான தசதீட்சை முறையோடொக்க
அனைவாக அண்டவெளிச் சக்கரத்தை
ஆடிநின்று பிராணாயந் தீர்ந்துதேறி
மனைவாக நிற்குணத்தின்
மவுனத்தூடி மருவிவிட்டாய் மருவிவிட்டாய் பூரணத்தினோடு
வினைவாகத் தசதீட்சைப்பார்
சொல்லப்போறார் விரைந்துணர்ந்த பெரியோரை அடுத்திடாயே
விளக்கவுரை :
360. பெரியோரை அடுத்திட்டு
தொண்டுபண்ணி போற்றிசெய்து அனுசரித்துக் கேட்டால் சொல்வார்
மரியோரைக் கேட்டேனே
சொல்லவில்லையென்று வனக்குறங்கால் கெட்டவர்கள் கோடாகோடி
துரியாதே அலையாதே
மோட்சம்வேண்டி துரிசிவிட்டுக் காத்திருந்து குருபதத்தில்கேளு
குரியார்க்குக்
கொடுத்திட்டால் தீட்சையாவார் கூட்டடா பூரணத்தில் கடுகநீயே
விளக்கவுரை :