போகர் சப்தகாண்டம் 351 - 355 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 351 - 355 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

351. போற்றியே அர்ச்சித்து அஞ்சலிபண்ணி பேரான சிவசொத்தை பொசித்திடாமல்
தேற்றியே புல்சருகு தனைப்பொசித்து சிவசிந்தை மறவாமல் காத்திருக்கும்
ஆற்றியே இப்படிதான் அநேககாலம் அர்ச்சித்துக் காத்திருக்கும் நாளில்தானும்
லேற்றியே வெளியொளிபாழ் தன்னைவிட்டு வெளியிலே மனந்தன்னை விரைந்திட்டேனே

விளக்கவுரை :


352. விரைந்திட்டு கண்விழித்து பார்க்கும்போது மிருகமென்ற சிங்கமெல்லாம் நடுநடுங்கி
அரைந்திட்டு அடிவணங்கி நிற்கும்போது ஆர்நீங்களென்றுசொல்லி நான்தான்கேட்க
திரந்திட்ட மிருகமென்ற சிங்கம்நாங்கள் செயலறியாப் புத்திதனில் செயலெண்ணி
முறைத்திட்ட மூர்த்தியிட பதத்தில் நின்றோம் உனிந்தகண்ணீர் தில்லையினால் அறிவுண்டாச்சே

விளக்கவுரை :

[ads-post]

353. அறிவுண்டாய்ப் பயந்துமே நடுங்கி அடியேன்கள் கடந்தேறும் பொருட்டுக்காகத்
தெறுவுண்டாய்த் தேவர்மறம் காத்திருந்தும் ஜெயமேது தேவரீர் கடாஷத்தாலே
நெறியண்டாய் மிருகமென்ற சட்டைநீக்கி நித்யமா முத்தியெனக்கருளுகன்னே
நெறிவுண்டாய் நான்தானும் உபதேசிக்க நாடாளும் ராஜாவாய்ப் பிறந்திட்டாரே

விளக்கவுரை :


354. பிறந்திட்டு ராஜ்ஜியங்கள் மிகவும் ஆண்டு பேரானசுகாதிகளை அனுபவித்து
மறந்திட்ட மாய்கை பெண்ணாசை மயக்கறுத்து மனதுதன்னை வழிப்பாடாக்கி
திறந்திட்டுத் திரேகசதமல்லவென்று திரும்பிவந்து ராஜாவாய்க் குருவேயென்று
கறந்திட்ட பால்போல யோகஞானம் கருத்தெனக்கு அருளுயென்றார் கடாஷித்தேனே

விளக்கவுரை :


355. என்றான கடாஷத்தால் யோகம்பார்த்து எத்தான ஆசானயோகத்தில்நின்று  
கன்றான கைநெல்லிக் கனிபோலேதான் கருதியே யோகத்தின் கருத்தறிந்து
தின்றான கற்பங்கள் வெகுநாள் தின்று சடமிருக்கக் கற்பாந்தகாலந்தானும்
குன்றான வாதமெல்லாம் கூர்ந்துபார்த்து குளிகைகட்டி கெவுனவழி கொண்டிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar