போகர் சப்தகாண்டம் 381 - 385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

381. சுன்னமென்ற துரைக்கலாம் கடுங்காரமெத்த தொடுகுறிபோல் கடுங்காரமேறுமேறும்
கன்னமென்ற திறவுகோல் வழலைச்சுன்னம் கடுங்காரமேற்றினால் சரக்குக்கக்கும்
பன்னமென்ற கல்லுப்பு இதுக்குட்சாகும் படுமுன்னே நவாச்சாரம் கட்டிப்போகும்
வண்ணமென்ற வீரமது மணியுமாகும் மகத்தான பூரமது சுன்னமாமே

விளக்கவுரை :


382. ஆமப்பா தாதுவகை அறுபத்திநாலும் அப்பனே மெழுகாகும் குருவுமாகும்   
வாமப்பா உபசரங்கள் ஈயமாகும் மார்க்கத்தில் குளிகையுமாம் செந்தூரமாகும்
போமப்பா வெகுதூரம் எட்டியோடும் போகத்தில் மெத்தவுண்டு புகட்டியாடும்
ஊமப்பா காலாங்கி பாதம்போற்றி உலகத்தோர் பிழைக்கவென்று வழிசொன்னேனே

விளக்கவுரை :

[ads-post]

383. உரைசெய்தேன் ஈசருடவடமொழியைப் பார்த்து உத்தமனே ஏழாயிரமாமுன்னே
நிரைசெய்தேன் ஏழைத்தான் எழுநூறாக நிகண்டாக மறையாமல் திறந்துபோட்டேன்
புரைசெய்த எந்நூலில் ஒன்றுபொய்யா புத்தியில்லா புல்லருக்கும் மலைவுதோன்றும்
கரைசெய்தேன் வாதமடைதிறந்துபோக கைதவறில் நூலெல்லாம் அசடாய்ப்போமே

விளக்கவுரை :


384. போகாது ஆயிபதம் பூசைபண்ணு போங்கோடே ஆதாரம் ஏறிப்பாரு
ஏகாமல் வாசியைத்தான் நங்கென்றூணு எழும்பாமல் வாசியைத்தான் அறுத்துத்தள்ளு
நோகாமல் சடமெல்லாம் கற்பமுண்ணு நோக்கிநின்ற அறிவுக்குள் மனத்தைப்பூணு
சாகாமல் தேகத்தை சுத்திபண்ணு சதாநித்தம் குருவினுட பதத்தினுள்ளே

விளக்கவுரை :


385. உன்னவே உப்புடைய கட்டைக்கேளு ஓடுகிறதூரமது உயர்த்திமெத்த
பன்னவே பலநூலில் இல்லைஇல்லை பாடினதால் சித்தரென் பகையுமாச்சு
கன்னவே சவர்க்காரச் சுன்னமொன்று கலருகமன் சாரத்தைக் கல்லத்திட்டு
பன்னவே நாற்சாமமும் உமிநீர்விட்டு பக்குவமாய் அரைத்துருட்டி குகையில்வையே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 376 - 380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

376. குருவுக்கு கடுங்கார ஜெயநீர்கேளு கூரறிய பூநீறும் கல்லுசுண்ணம்
தருவுக்குள் அமுரிவிட்டுக் கலக்கிவைத்துச் சாதகமாய் மூன்றுதினங்கடந்தபின்பு
திருவுக்குள் தெளிவிருந்துச் சேருரண்டு திறமான பீங்கானில் வைத்துக்கொண்டு
கருவுக்குள் போடுகிற மருந்தைக்கேளு கனமான ஐந்துசுன்னங் காசுபோடே  

விளக்கவுரை :


377. போடப்பா காசெடைதான் வாங்கச்சுன்னம் பொலிவான வெடியுப்பு சுன்னம்போடு
நீடப்பா சீனமொருகாசுபோடு நிகறான சூடனுமோர் காசுபோடு
மூடப்பா பூரமொரு காசுபோடு முனையான சவரசத்து காசுபோடு
ஆடப்பா நாபியொரு காசுபோடு ஆதியென்ற சாரமொரு காசுதானே

விளக்கவுரை :

[ads-post]

378. காசெடைதான் குருவண்டு உரமுஞ்சூதம் கனமான பழுகோடு புறாவினெச்சில்
நேசிதோர் குக்குடத்தின் வெண்மலமுங்கூட நெகிழாமல் அமுரிவிட்டு அரைநாற்சாமம்
வாசியதாம் உன்னீரில் கரைத்துக்கொண்டு மறவாமல் அண்டமது மூப்பத்தொன்று
தேசியாத வெண்கருவஐக் கூடவிட்டுச் சிறப்பான எருக்கம்பால் சோரைவாரே

விளக்கவுரை :


379. வார்த்துநன்றாய் மத்திப்பாய்க் குச்சியாலே மறவாமல் மூன்றுநாள் மத்திச்சப்பால்
போற்றியதோர் தெளிவிறுத்துப் பீங்கானுக்குள் பொற்கொடிமுன்வைத்ததனைப் பூசைபண்ணி
மாற்றியதோர் வஸ்துசித்தி பானஞ்செய்து மறவாமல் அஞ்செழுத்து எட்டெழுத்துமாதி
தூற்றியதோர் சவர்க்காரம் தோய்த்துப்போடு சுகமாக ஏழுநாள் ரவியிற்போடே

விளக்கவுரை :


380. போட்டபின்பு சண்ணாம்பு முப்புசேரே பொடித்துஅரை சுண்ணாம்பு தண்ணீர்விட்டு
நாட்டபின்பு புடம்போட்டு எடுத்துரைத்து நலமாக குளிகைபோல பண்ணிக்கொண்டு
நீட்டமுடன் சரக்கெல்லாம் ஒன்றாய் சேர்த்து நெடிதான பருவமுடன் அனுகியேதான்
ஆட்டியபின் மேல்மூடிச் சீலைசெய்து அதட்டியொரு புடம்போடச் சுன்னமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 371 - 375 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

371. காயவே ஏழுநாள் கலைத்துப்போடு காய்ந்தபின்பு செய்கிற வரிசைகேளு
மாயவே நெல்லதனைப் பாண்டத்திட்டு வகையாகத் தண்ணீரும் கூடவிட்டு
நேயவே மல்லிகையினிலையை நினைவாக அதின்மேலே சவர்க்காரம்வைத்து
தோயவே மேலுமந்த இலைபரப்பித் தோலைகட்டி மேல்மூடி அடுப்பிலேற்றே

விளக்கவுரை :


372. அடுப்பேற்றி கடிகைரண்டு தீயைமூட்டி ஆவிமேல் வருதல்கண்டு எடுநேர்பாகத்
துடுப்பேற்ற ரவிதனிலே உலரப்போட்டுத் துலங்கமுன்போல் இலைபரப்பி நெல்லிவைத்து
அடுப்பேற்ற ரவிதனிலே உலரப்போட்டு மறுநாளும் முன்போலே இலைபரப்பிக்
கடுப்பேற்றி எரித்து முன்போல் பதத்தைப் பார்த்து கனமான வெயிலுக்குள் காயப்போடே

விளக்கவுரை :

[ads-post]

373. போட்டுடனே தந்தம்போல் சுத்தியாகும் புகழாகக் கிளிபோலத் தாழக்கட்டி   
ஆட்டுடனே கற்சுண்ணம் கிளிஞ்சல்சுண்ணம் அப்பனே அகண்டோறி நத்தைசுண்ணம்
நீட்டோடே சங்குசுண்ணம் புதிதாய்ச்சுட்டு நீற்றாமேல் ஒன்றாகக் கலந்துகொண்டு
மாட்டுடனே கிளியெடுத்து நடுவேவைத்து வளமான சட்டியிலே வைத்திடாயே

விளக்கவுரை :


374. வைத்தபின்பு அயத்தகடு கெண்ணிபார்த்து வளமாகப் பதியையுறவாகப்போட்டு
உயத்தபின்பும் உவரிதன்னில் மல்லிகையினிலையை உறவாகப்போட்டு நனாறாய்காச்சிக்கொண்டு
நைத்தபின்பு இந்நீரைவிட்டு நீயும்நலமாக மேற்சட்டிமூடிபோடு
ஐத்தபின்பு கிளிவாங்கி உலரப்போடு ஐந்துதரம் இப்படிதான் இற்றிடாயே

விளக்கவுரை :


375. நீற்றபின்பு கிளிவாங்கி உலரப்போடு நிதமாக அண்டோடல் இதனைவைத்து
மாட்டியபின் அண்டோடு மேலேமூடி மறவாமல் சுண்ணாம்பு சீலைசெய்து
தோற்றியதோர் பத்தெருவில் புடத்தைப்போடு சுகமாகக் குளிர்ந்தபின்பு எடுத்துப்பாரு
ஆற்றியதோர் தவளகமாம் படிகம்போல அம்மம்மா சவர்க்காரக் குருவுமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 366 - 370 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

366. போதித்த பெரியோர்கள் ரிஷிகள்சித்தர் புத்தியள்ளாரென்று மாகக்கண்டு
ஓவறவே கருத்தழிந்து ஒன்றேயாகி உள்ளரையில் காற்றசையா விளக்குப்போல
அலறவே அலைச்சலற்றுத் தானேதானாய் அகண்டமொடு பூரணமாய் நின்றுபின்னை
துலறவே தேகமற்று இருப்பதாலே சுத்தமாம் அகத்துவல்ல சமாதியாச்சே

விளக்கவுரை :


367. ஆச்சப்பா சவர்க்காரக் குருவைப்பண்ண அறைகிறேன் நான் அறிந்தமட்டும்
போச்சப்பா சவர்க்காரம் என்னவென்பார் பொல்லாதர் எண்ணெயைக் கழற்றமாட்டார்
மாச்சப்பா பூநீரால் எல்லாமாச்சு மருவியதிற் பழச்சாற்றைவிட்டு ஆட்டி
பாச்சப்பா புடம்போட்டு எடுத்துப்பார்த்து பாரமில்லை லேசாச்சு என்பார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

368. பாரப்பா சவர்க்கார மார்க்கம்பாரு பங்குனிதனிலெடுத்த பூநீர்தானும்
நேரப்பா படிநாலு பாண்டத்தில் போட்டு தாரப்பாவாட்டி நன்றாய் வகையதிலேயுண்டு
சமாதியாம் சத்தானவித்தையுண்டு தரிப்பான திரிசானு வித்தையொன்று
பெமாதியாம் சத்தான வித்தைமார்க்கம் கலக்கிவைத்து சமர்த்துடனே நாலாநாள் தெளிவைவாங்கே

விளக்கவுரை :


369. வாங்கியே அடுப்பில் வைத்து எரிநேர்ப்பாக வற்றியே குழம்புபோல் வருதல்கண்டு
தேங்கியே படி அரைதான் நல்லெண்ணெயும் சிறப்பாக கூடவிட்டுத் திரளாய்க்காச்சி
பிரங்கியே பக்குவத்தில் ஆனபின்பு பருவமுடன் விபூதிமேல் சீலைப்போட்டு
நீங்கியே அகப்பையினால் எடுத்துவிட்டு நெகிழாமல் விளாங்காய்ப்போல் உண்டைசெய்யே

விளக்கவுரை :


370. செய்தவுண்டை ரவிதனிலே உலறவைத்து சிறப்பாக எடுத்து நவபாண்டத்தில்
மைதபின்பு லோகத்தோர் சவர்க்காரந்தான் வாதத்துக்காகாது வண்ணார்க்காகும்
பைதபின்பு இதற்கடுத்த சுத்திகேளு பாங்காக பாக்குபோல் சீவிக்கொண்டு
கொய்தமல்லி சாறதனால் பாகமேசெய்து கூரறிய ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


Powered by Blogger.