376. குருவுக்கு கடுங்கார
ஜெயநீர்கேளு கூரறிய பூநீறும் கல்லுசுண்ணம்
தருவுக்குள் அமுரிவிட்டுக்
கலக்கிவைத்துச் சாதகமாய் மூன்றுதினங்கடந்தபின்பு
திருவுக்குள் தெளிவிருந்துச்
சேருரண்டு திறமான பீங்கானில் வைத்துக்கொண்டு
கருவுக்குள் போடுகிற
மருந்தைக்கேளு கனமான ஐந்துசுன்னங் காசுபோடே
விளக்கவுரை :
377. போடப்பா காசெடைதான்
வாங்கச்சுன்னம் பொலிவான வெடியுப்பு சுன்னம்போடு
நீடப்பா சீனமொருகாசுபோடு
நிகறான சூடனுமோர் காசுபோடு
மூடப்பா பூரமொரு காசுபோடு
முனையான சவரசத்து காசுபோடு
ஆடப்பா நாபியொரு காசுபோடு
ஆதியென்ற சாரமொரு காசுதானே
விளக்கவுரை :
[ads-post]
378. காசெடைதான் குருவண்டு உரமுஞ்சூதம் கனமான பழுகோடு புறாவினெச்சில்
நேசிதோர் குக்குடத்தின்
வெண்மலமுங்கூட நெகிழாமல் அமுரிவிட்டு அரைநாற்சாமம்
வாசியதாம் உன்னீரில்
கரைத்துக்கொண்டு மறவாமல் அண்டமது மூப்பத்தொன்று
தேசியாத வெண்கருவஐக்
கூடவிட்டுச் சிறப்பான எருக்கம்பால் சோரைவாரே
விளக்கவுரை :
379. வார்த்துநன்றாய்
மத்திப்பாய்க் குச்சியாலே மறவாமல் மூன்றுநாள் மத்திச்சப்பால்
போற்றியதோர் தெளிவிறுத்துப்
பீங்கானுக்குள் பொற்கொடிமுன்வைத்ததனைப் பூசைபண்ணி
மாற்றியதோர் வஸ்துசித்தி
பானஞ்செய்து மறவாமல் அஞ்செழுத்து எட்டெழுத்துமாதி
தூற்றியதோர் சவர்க்காரம்
தோய்த்துப்போடு சுகமாக ஏழுநாள் ரவியிற்போடே
விளக்கவுரை :
380. போட்டபின்பு சண்ணாம்பு
முப்புசேரே பொடித்துஅரை சுண்ணாம்பு தண்ணீர்விட்டு
நாட்டபின்பு புடம்போட்டு
எடுத்துரைத்து நலமாக குளிகைபோல பண்ணிக்கொண்டு
நீட்டமுடன் சரக்கெல்லாம்
ஒன்றாய் சேர்த்து நெடிதான பருவமுடன் அனுகியேதான்
ஆட்டியபின் மேல்மூடிச்
சீலைசெய்து அதட்டியொரு புடம்போடச் சுன்னமாமே
விளக்கவுரை :