போகர் சப்தகாண்டம் 381 - 385 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 381 - 385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

381. சுன்னமென்ற துரைக்கலாம் கடுங்காரமெத்த தொடுகுறிபோல் கடுங்காரமேறுமேறும்
கன்னமென்ற திறவுகோல் வழலைச்சுன்னம் கடுங்காரமேற்றினால் சரக்குக்கக்கும்
பன்னமென்ற கல்லுப்பு இதுக்குட்சாகும் படுமுன்னே நவாச்சாரம் கட்டிப்போகும்
வண்ணமென்ற வீரமது மணியுமாகும் மகத்தான பூரமது சுன்னமாமே

விளக்கவுரை :


382. ஆமப்பா தாதுவகை அறுபத்திநாலும் அப்பனே மெழுகாகும் குருவுமாகும்   
வாமப்பா உபசரங்கள் ஈயமாகும் மார்க்கத்தில் குளிகையுமாம் செந்தூரமாகும்
போமப்பா வெகுதூரம் எட்டியோடும் போகத்தில் மெத்தவுண்டு புகட்டியாடும்
ஊமப்பா காலாங்கி பாதம்போற்றி உலகத்தோர் பிழைக்கவென்று வழிசொன்னேனே

விளக்கவுரை :

[ads-post]

383. உரைசெய்தேன் ஈசருடவடமொழியைப் பார்த்து உத்தமனே ஏழாயிரமாமுன்னே
நிரைசெய்தேன் ஏழைத்தான் எழுநூறாக நிகண்டாக மறையாமல் திறந்துபோட்டேன்
புரைசெய்த எந்நூலில் ஒன்றுபொய்யா புத்தியில்லா புல்லருக்கும் மலைவுதோன்றும்
கரைசெய்தேன் வாதமடைதிறந்துபோக கைதவறில் நூலெல்லாம் அசடாய்ப்போமே

விளக்கவுரை :


384. போகாது ஆயிபதம் பூசைபண்ணு போங்கோடே ஆதாரம் ஏறிப்பாரு
ஏகாமல் வாசியைத்தான் நங்கென்றூணு எழும்பாமல் வாசியைத்தான் அறுத்துத்தள்ளு
நோகாமல் சடமெல்லாம் கற்பமுண்ணு நோக்கிநின்ற அறிவுக்குள் மனத்தைப்பூணு
சாகாமல் தேகத்தை சுத்திபண்ணு சதாநித்தம் குருவினுட பதத்தினுள்ளே

விளக்கவுரை :


385. உன்னவே உப்புடைய கட்டைக்கேளு ஓடுகிறதூரமது உயர்த்திமெத்த
பன்னவே பலநூலில் இல்லைஇல்லை பாடினதால் சித்தரென் பகையுமாச்சு
கன்னவே சவர்க்காரச் சுன்னமொன்று கலருகமன் சாரத்தைக் கல்லத்திட்டு
பன்னவே நாற்சாமமும் உமிநீர்விட்டு பக்குவமாய் அரைத்துருட்டி குகையில்வையே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar