386. வைத்துமே சில்லிட்டு சீலைசெய்து வளமாக பத்தெருவிற் புடத்தைப்போடு
வைத்துமே வாவிட்டு
எடுத்துவாங்கி கடுங்கார செயநீர் குத்தித்
தைத்துமே மூன்றுநாள்
ரவியிற்போடு சாதகமாய் தினந்தினமும் செயநீர்குத்திப்
பைத்துவெண்ணெய்ப்
பக்குவமாய்ப் பீங்கானிலப்பி பருவமாய் ராக்காலம் பனியில்வையே
விளக்கவுரை :
387. வைத்துடனே மொலுமொலெனத்
தண்ணீராகும் வாகாக இந்நீரில் வீரம்போட்டு
கைத்துடனே இந்துப்பை
கல்லத்திட்டுக் காணிதே நீரிலரைநாலுசாமம்
மொய்த்துட பன்பெடுத்துருட்டி
சுன்னமுனைமேல் மூடியே சீலைசெய்து புடத்தைப்போட்டு
கைத்துடனே இந்துப்புச்
சுன்னமாகும் நனைத்துமே கடுங்காரம் ரவியிற்போடே
விளக்கவுரை :
[ads-post]
388. போடப்பா தினம் மூன்றுகாயம்
பொசிவான பின்பெடுத்து பனியில்லைப்பாய்
நீடப்பா செயநீராம்
இதனைவாங்கி நிலைத்துநிற்கும் வீரத்தைப் பொடித்துத்தூவி
ஆடப்பாசெயநீரும் ஒருபலந்தான்
வாங்கி அதற்குள்ளே பூரமொருபலத்தைப்போடு
நாடப்பா காற்றில்லாக்
குளிந்தவிடந்தன்னில் அணுகாமல் மூன்றுநாள் மூடிவையே
விளக்கவுரை :
389. வையப்பா ரவிதனிலே
ஐந்துநாள்தான் மகத்தான பூரமது முப்புமாகும்
செய்யப்பா சுண்ணாம்புக்
குகையிலிட்டு சிறப்பாக மேல்மூடிச் சீலைசெய்து
மெய்யப்பா பத்தெருவில்
புடத்தைபபோடே வெரித்த புலிபோல் உழன்றுவெண்ணெயாகும்
கையப்பா பட்டுடனேவெந்து
நீறுங் கடுங்காரம் செயநீரால் அரைத்து அப்பே
விளக்கவுரை :
390. அப்பியே பீங்கானில் ரவியில்போடு
ஐந்துநாள் தினந்தினமும் செயநீர் குத்தி
செப்பியே ஒருவருடன்
பேசவேண்டாம் ஜெகஜாலம் இதற்குள்ளெ அடங்கிப்போச்சு
கப்பியாஞ் சுன்னமெல்லாம்
இதற்குள்ளாச்சு கதையில்லை இதற்குள்ளே சொல்லவென்றால்
வெப்பியே வெம்மியே
அலையவேண்டாம் வெகுளாதே பீங்கானில் பதனம்பண்ணே
விளக்கவுரை :