போகர் சப்தகாண்டம் 391 - 395 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 391 - 395 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

391. பண்ணப்பா வீரமொரு பலந்தான் தூக்கி பரியான சவர்க்காரச் செயநீர்விட்டு
தண்ணப்பா கல்லத்தில் அரைநாற்சாமம் தனில்பிறகு வழிந்தெடுத்து வில்லையாக்கி
கண்ணப்பா ரவிதனிலே உலர்ந்தபின்பு காசிடைதான் சவர்க்காரச் சுன்னம்போட்டு
விண்ணப்பா பூரணமாஞ் சுன்னமொன்று வெண்காரஞ்சாரம் இருகாசுதூக்கே   

விளக்கவுரை :


392. தூக்கியபின் கல்வத்தில் சாரநீரால் துடியாக அரைத்து மேல்கவசங்கட்டி
தாக்கியபின் ரவிதனிலே உலரவைத்து சாதகமாய்ச் சுண்ணாம்புக் குகையிலிட்டு
நோக்கியே வஜ்ஜிரமாம் சீலைசெய்து நொடியான காந்தவாம் சீலைசெய்து
நீக்கியபின் சீலைசெய்து புடத்தைப்போடு நிர்மலம்போல் வெண்ணீராய் நிரைந்துபோமே

விளக்கவுரை :

[ads-post]

393. போகாமல் வெடியுப்பு செயநீர்கேளு போக்கேடே வெடியுப்பு நாலாங்காய்ச்சல்
வாகாமல் பலம்பத்து நிறுத்துக்கொண்டு மைந்தனே பூநீறு பலமும்போடு
தாகாமல் சீனமொரு பலமும்போடு தயங்காதக் கல்லுப்புப் பலமும்போடு
வேகாமல் சூடனது காசுபோடு விரவியதோர் காரமொரு காசுபோடு

விளக்கவுரை :


394. போட்டெல்லாம் கல்வத்தில் பழச்சார்விட்டுப் பொலிவாக மூன்றுநாள் ஆட்டுஆட்டு
நீட்டெல்லாம் வழித்துய்யச் சட்டிக்கிட்டு நேர்ப்பாகத் தீயெரிப்பாய் நாலுசாமம்
வாட்டெல்லாம் வடித்துமொரு பீங்கானுக்குள் மைந்தனே கடுங்காரச் செயநீர்குத்தித்
தீட்டோடே ஐந்துநாள் ரவியிற்போட்டுச் சிறப்பாகச் சுன்னமென்ற குகையிலூதே

விளக்கவுரை :


395. ஊதையிலே சுண்ணாம்பு பாய்வெந்து நீறும் உத்தமனே பீங்கானில் எடுத்துக்கொண்டு
மாதையிலே கடுங்காரம் செயநீர்குத்தி மைந்தனே நீற்றியதைப் பனியில்வைப்பாய்
பாதையிலே சலமாகும் இந்நீரில் பருவமுடன் வழலையென்ற சுன்னங்காசு
கோதையிலே பூரமென்ற சுன்னம்காசு கொடியதொரு வீரமென்ற சுன்னங்காசே    

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar