396. காசெடைதான் செயநீரில்
கலக்கிக்கொண்டு கடியதொரு சரக்குகளிற் சுக்குபோடே
ஆசெடைதான் அறுபத்திநாலுங்
கட்டும் ஆச்சரிய உபசரியங்கள் சத்தேயாகும்
காசெடைதான் கெவிரிவெள்ளை
லிங்கம் வீரம் தயங்காத தாளகமும் சிலையும்கெந்தி
தேசெடைதான் நாகத்தைப்
பகையாமல் கொல்லுஞ்சனத்தினிலே கவரும் கஞ்சாய்க் காச்சாமே
விளக்கவுரை :
397. சாமப்பா உப்பிதுக்குள்
சாற்றக்கேளு தனித்ததொரு வெடியுப்பு சீனக்காரம்
ஓமப்பா கடல்நுரையும்
சூடனிந்து உத்தமனே வெண்காரம் துருசுச்சாரம்
நாமப்பா வெடியுப்பு
நீரைவார்த்து நலக்கவரை ஏழுநாள்ரவியிற்போடு
வேமப்பாசரக்கெல்லாம்
வெந்துநீறும் வெகுளாதே பீங்கானில் எடுத்துவையே
விளக்கவுரை :
[ads-post]
398. வையப்பாவுப்பேது என்றாயானால்
மகத்தான வாரிதியில் சத்திநாதம்
தையப்பா மலைபோலே
நிற்கும்பாரு தனையெடுத்துப் பாக்குப்போல் உண்டைசெய்து
செய்யப்பா பூச்சாறு
தினமூன்றுவிட்டுத் திறமான உப்பங்கே சுத்தியாகும்
மெய்யப்பா நினைவாக உலரப்போடு
விரவியங்கே உட்பூச மருந்துகேளே
விளக்கவுரை :
399. கேளப்பா சவர்க்காரச்
சுன்னமொன்று கொடியான வீரமொன்று பூரமொன்று
வாளப்பா சவர்க்காரச்
செயநீர்விட்டு மைந்தான குழம்புபோல கல்வத்தாட்டி
கேளப்பா கல்லுப்பில்
துவைத்து வாட்டு கொள்கியந்த தணலுக்குள் அடர்ந்துவாட்டி
நாளப்பா குழம்பையெல்லாம்
பூசிவாட்டி கலந்தபின்பு முன்னெட்டு மருந்துபூசே
விளக்கவுரை :
400. பூசியதை வாட்டுதற்கு
விபரங்கேளு பொலிவான வெடியுப்பு நீரைவார்த்து
தாசியதைக் கல்வத்தில்
குளப்பிக்கொண்டு தழையெல்லாம் பிரட்டிநன்றாய் வாட்டிப்போடு
வாசியதைக் கல்லுப்பு
பலத்தைக்கேளு வகையாக மும்மலத்தில்
பூசிப்போடு
தேசியதை அடுக்கடுக்க
முதிரவாட்டி சிறப்பாக தணலுக்குள் அடந்ததுவாட்டே
விளக்கவுரை :