போகர் சப்தகாண்டம் 366 - 370 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 366 - 370 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

366. போதித்த பெரியோர்கள் ரிஷிகள்சித்தர் புத்தியள்ளாரென்று மாகக்கண்டு
ஓவறவே கருத்தழிந்து ஒன்றேயாகி உள்ளரையில் காற்றசையா விளக்குப்போல
அலறவே அலைச்சலற்றுத் தானேதானாய் அகண்டமொடு பூரணமாய் நின்றுபின்னை
துலறவே தேகமற்று இருப்பதாலே சுத்தமாம் அகத்துவல்ல சமாதியாச்சே

விளக்கவுரை :


367. ஆச்சப்பா சவர்க்காரக் குருவைப்பண்ண அறைகிறேன் நான் அறிந்தமட்டும்
போச்சப்பா சவர்க்காரம் என்னவென்பார் பொல்லாதர் எண்ணெயைக் கழற்றமாட்டார்
மாச்சப்பா பூநீரால் எல்லாமாச்சு மருவியதிற் பழச்சாற்றைவிட்டு ஆட்டி
பாச்சப்பா புடம்போட்டு எடுத்துப்பார்த்து பாரமில்லை லேசாச்சு என்பார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

368. பாரப்பா சவர்க்கார மார்க்கம்பாரு பங்குனிதனிலெடுத்த பூநீர்தானும்
நேரப்பா படிநாலு பாண்டத்தில் போட்டு தாரப்பாவாட்டி நன்றாய் வகையதிலேயுண்டு
சமாதியாம் சத்தானவித்தையுண்டு தரிப்பான திரிசானு வித்தையொன்று
பெமாதியாம் சத்தான வித்தைமார்க்கம் கலக்கிவைத்து சமர்த்துடனே நாலாநாள் தெளிவைவாங்கே

விளக்கவுரை :


369. வாங்கியே அடுப்பில் வைத்து எரிநேர்ப்பாக வற்றியே குழம்புபோல் வருதல்கண்டு
தேங்கியே படி அரைதான் நல்லெண்ணெயும் சிறப்பாக கூடவிட்டுத் திரளாய்க்காச்சி
பிரங்கியே பக்குவத்தில் ஆனபின்பு பருவமுடன் விபூதிமேல் சீலைப்போட்டு
நீங்கியே அகப்பையினால் எடுத்துவிட்டு நெகிழாமல் விளாங்காய்ப்போல் உண்டைசெய்யே

விளக்கவுரை :


370. செய்தவுண்டை ரவிதனிலே உலறவைத்து சிறப்பாக எடுத்து நவபாண்டத்தில்
மைதபின்பு லோகத்தோர் சவர்க்காரந்தான் வாதத்துக்காகாது வண்ணார்க்காகும்
பைதபின்பு இதற்கடுத்த சுத்திகேளு பாங்காக பாக்குபோல் சீவிக்கொண்டு
கொய்தமல்லி சாறதனால் பாகமேசெய்து கூரறிய ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar