போகர் சப்தகாண்டம் 401 - 405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

401. வாட்டிடவே கல்லுப்புத் தேறிப்போகும் மருவியதோர் ஊசரமும் உப்பும்கேளே  
நாட்டிடவே நாயுருவிப் பிரண்டைச் சாம்பல் நலமான கிளிங்சிநீர் சரியாய்கூட்டி
ஆட்டிடவே அமுரிவிட்டு மெழுகாய்ப்பண்ணி அடைபோலே ரண்டாக்கி சட்டியிலேபோடு
நீட்டிடவே அடைமேலே உப்பைவைத்து நேர்பாக அதின்மேலே அடையால்மூடே

விளக்கவுரை :


402. மூடியே மேல்மூடிச் சீலைசெய்து முசியாதே அடுப்பேற்றி எரிநால்சாமம்
ஆட்டியே தீபம்போல் எரித்துவாங்கி ஆறவிட்டு எடுத்தந்த படியேவைத்து
நாட்டியே கசபுடத்திற் போட்டாயானால் நலமான வயிரம்போல் உருகிக்கட்டும்
தேற்றியே ஆறவிடுத்துப்பாரு சிவசிவா முத்துபோல் மணியுமாமே

விளக்கவுரை :

[ads-post]

403. ஆமப்பா மணியெடுத்து உருக்கிப்பாரு அரகரா பொன்போல நின்றுஆடும்
தேமப்பா கரிதனிலே இறங்கிற்றானால் சிறப்பாக முன்போல மருந்துபூசி
வாமப்பா புடம்போடு உருகிநிற்கும் மணிபோலே நின்றாடும் கரியுனுள்ளே
தாமப்பா உப்புமணித் தாழ்வடமாய்க் கோர்த்துத் தாயோடு தந்தையும் பூசைபண்ணே

விளக்கவுரை :


404. பண்ணப்பா பானமொடு சுத்திவைத்துப்பரிவாக பூசைபண்ணி மதுவையுண்ணு
விண்ணப்பா தாழ்வடத்தைக் காதில்வைத்து வேதாந்த அனுபவத்தில் மனதையுன்னி
கண்ணப்பா அங்செழுத்தம் எட்டெழுத்தும் ஓத கயிலையுறை சிவன்வந்து நிர்த்தஞ்செய்வார்
நண்ணப்பா சிறுபிள்ளை ஆயிவந்து நாட்டிலுள்ள அதிசயங்கள் சொல்லுவேனே

விளக்கவுரை :


405. சொல்லுவாள் அஷ்டகர்மம் எட்டுந்தானும் தோற்றான கர்மத்தில் வழியுஞ்சொல்வாள்
கொல்லுவாள் வாமத்தைப் பணிந்தபேரை கூப்பிடுவாள் வாமத்தில் கொள்டினோரை
சொல்லுவாள் சிவகாம் சொல்லயானும் விடுத்துப்பார்த்து மக்கட்காக சொன்னேன்
மல்லுவாள் சமாதியிலே உரைத்துப்பாரு மாயப்பிரபஞ்சமெல்லாம் ஒழிந்துபோமே 

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 396 - 400 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

396. காசெடைதான் செயநீரில் கலக்கிக்கொண்டு கடியதொரு சரக்குகளிற் சுக்குபோடே
ஆசெடைதான் அறுபத்திநாலுங் கட்டும் ஆச்சரிய உபசரியங்கள் சத்தேயாகும்
காசெடைதான் கெவிரிவெள்ளை லிங்கம் வீரம் தயங்காத தாளகமும் சிலையும்கெந்தி
தேசெடைதான் நாகத்தைப் பகையாமல் கொல்லுஞ்சனத்தினிலே கவரும் கஞ்சாய்க் காச்சாமே

விளக்கவுரை :


397. சாமப்பா உப்பிதுக்குள் சாற்றக்கேளு தனித்ததொரு வெடியுப்பு சீனக்காரம்
ஓமப்பா கடல்நுரையும் சூடனிந்து உத்தமனே வெண்காரம் துருசுச்சாரம்
நாமப்பா வெடியுப்பு நீரைவார்த்து நலக்கவரை ஏழுநாள்ரவியிற்போடு
வேமப்பாசரக்கெல்லாம் வெந்துநீறும் வெகுளாதே பீங்கானில் எடுத்துவையே

விளக்கவுரை :

[ads-post]

398. வையப்பாவுப்பேது என்றாயானால் மகத்தான வாரிதியில் சத்திநாதம்
தையப்பா மலைபோலே நிற்கும்பாரு தனையெடுத்துப் பாக்குப்போல் உண்டைசெய்து
செய்யப்பா பூச்சாறு தினமூன்றுவிட்டுத் திறமான உப்பங்கே சுத்தியாகும்
மெய்யப்பா நினைவாக உலரப்போடு விரவியங்கே உட்பூச மருந்துகேளே

விளக்கவுரை :


399. கேளப்பா சவர்க்காரச் சுன்னமொன்று கொடியான வீரமொன்று பூரமொன்று
வாளப்பா சவர்க்காரச் செயநீர்விட்டு மைந்தான குழம்புபோல கல்வத்தாட்டி
கேளப்பா கல்லுப்பில் துவைத்து வாட்டு கொள்கியந்த தணலுக்குள் அடர்ந்துவாட்டி
நாளப்பா குழம்பையெல்லாம் பூசிவாட்டி கலந்தபின்பு முன்னெட்டு மருந்துபூசே 

விளக்கவுரை :


400. பூசியதை வாட்டுதற்கு விபரங்கேளு பொலிவான வெடியுப்பு நீரைவார்த்து
தாசியதைக் கல்வத்தில் குளப்பிக்கொண்டு தழையெல்லாம் பிரட்டிநன்றாய் வாட்டிப்போடு
வாசியதைக் கல்லுப்பு பலத்தைக்கேளு  வகையாக மும்மலத்தில் பூசிப்போடு
தேசியதை அடுக்கடுக்க முதிரவாட்டி சிறப்பாக தணலுக்குள் அடந்ததுவாட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 391 - 395 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

391. பண்ணப்பா வீரமொரு பலந்தான் தூக்கி பரியான சவர்க்காரச் செயநீர்விட்டு
தண்ணப்பா கல்லத்தில் அரைநாற்சாமம் தனில்பிறகு வழிந்தெடுத்து வில்லையாக்கி
கண்ணப்பா ரவிதனிலே உலர்ந்தபின்பு காசிடைதான் சவர்க்காரச் சுன்னம்போட்டு
விண்ணப்பா பூரணமாஞ் சுன்னமொன்று வெண்காரஞ்சாரம் இருகாசுதூக்கே   

விளக்கவுரை :


392. தூக்கியபின் கல்வத்தில் சாரநீரால் துடியாக அரைத்து மேல்கவசங்கட்டி
தாக்கியபின் ரவிதனிலே உலரவைத்து சாதகமாய்ச் சுண்ணாம்புக் குகையிலிட்டு
நோக்கியே வஜ்ஜிரமாம் சீலைசெய்து நொடியான காந்தவாம் சீலைசெய்து
நீக்கியபின் சீலைசெய்து புடத்தைப்போடு நிர்மலம்போல் வெண்ணீராய் நிரைந்துபோமே

விளக்கவுரை :

[ads-post]

393. போகாமல் வெடியுப்பு செயநீர்கேளு போக்கேடே வெடியுப்பு நாலாங்காய்ச்சல்
வாகாமல் பலம்பத்து நிறுத்துக்கொண்டு மைந்தனே பூநீறு பலமும்போடு
தாகாமல் சீனமொரு பலமும்போடு தயங்காதக் கல்லுப்புப் பலமும்போடு
வேகாமல் சூடனது காசுபோடு விரவியதோர் காரமொரு காசுபோடு

விளக்கவுரை :


394. போட்டெல்லாம் கல்வத்தில் பழச்சார்விட்டுப் பொலிவாக மூன்றுநாள் ஆட்டுஆட்டு
நீட்டெல்லாம் வழித்துய்யச் சட்டிக்கிட்டு நேர்ப்பாகத் தீயெரிப்பாய் நாலுசாமம்
வாட்டெல்லாம் வடித்துமொரு பீங்கானுக்குள் மைந்தனே கடுங்காரச் செயநீர்குத்தித்
தீட்டோடே ஐந்துநாள் ரவியிற்போட்டுச் சிறப்பாகச் சுன்னமென்ற குகையிலூதே

விளக்கவுரை :


395. ஊதையிலே சுண்ணாம்பு பாய்வெந்து நீறும் உத்தமனே பீங்கானில் எடுத்துக்கொண்டு
மாதையிலே கடுங்காரம் செயநீர்குத்தி மைந்தனே நீற்றியதைப் பனியில்வைப்பாய்
பாதையிலே சலமாகும் இந்நீரில் பருவமுடன் வழலையென்ற சுன்னங்காசு
கோதையிலே பூரமென்ற சுன்னம்காசு கொடியதொரு வீரமென்ற சுன்னங்காசே    

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 386 - 390 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

386. வைத்துமே சில்லிட்டு சீலைசெய்து வளமாக பத்தெருவிற் புடத்தைப்போடு
வைத்துமே வாவிட்டு எடுத்துவாங்கி கடுங்கார செயநீர் குத்தித்
தைத்துமே மூன்றுநாள் ரவியிற்போடு சாதகமாய் தினந்தினமும் செயநீர்குத்திப்
பைத்துவெண்ணெய்ப் பக்குவமாய்ப் பீங்கானிலப்பி பருவமாய் ராக்காலம் பனியில்வையே

விளக்கவுரை :


387. வைத்துடனே மொலுமொலெனத் தண்ணீராகும் வாகாக இந்நீரில் வீரம்போட்டு
கைத்துடனே இந்துப்பை கல்லத்திட்டுக் காணிதே நீரிலரைநாலுசாமம்
மொய்த்துட பன்பெடுத்துருட்டி சுன்னமுனைமேல் மூடியே சீலைசெய்து புடத்தைப்போட்டு
கைத்துடனே இந்துப்புச் சுன்னமாகும் நனைத்துமே கடுங்காரம் ரவியிற்போடே

விளக்கவுரை :

[ads-post]

388. போடப்பா தினம் மூன்றுகாயம் பொசிவான பின்பெடுத்து பனியில்லைப்பாய்
நீடப்பா செயநீராம் இதனைவாங்கி நிலைத்துநிற்கும் வீரத்தைப் பொடித்துத்தூவி
ஆடப்பாசெயநீரும் ஒருபலந்தான் வாங்கி அதற்குள்ளே பூரமொருபலத்தைப்போடு
நாடப்பா காற்றில்லாக் குளிந்தவிடந்தன்னில் அணுகாமல் மூன்றுநாள் மூடிவையே

விளக்கவுரை :


389. வையப்பா ரவிதனிலே ஐந்துநாள்தான் மகத்தான பூரமது முப்புமாகும்
செய்யப்பா சுண்ணாம்புக் குகையிலிட்டு சிறப்பாக மேல்மூடிச் சீலைசெய்து
மெய்யப்பா பத்தெருவில் புடத்தைபபோடே வெரித்த புலிபோல் உழன்றுவெண்ணெயாகும்
கையப்பா பட்டுடனேவெந்து நீறுங் கடுங்காரம் செயநீரால் அரைத்து அப்பே

விளக்கவுரை :


390. அப்பியே பீங்கானில் ரவியில்போடு ஐந்துநாள் தினந்தினமும் செயநீர் குத்தி
செப்பியே ஒருவருடன் பேசவேண்டாம் ஜெகஜாலம் இதற்குள்ளெ அடங்கிப்போச்சு
கப்பியாஞ் சுன்னமெல்லாம் இதற்குள்ளாச்சு கதையில்லை இதற்குள்ளே சொல்லவென்றால்
வெப்பியே வெம்மியே அலையவேண்டாம் வெகுளாதே பீங்கானில் பதனம்பண்ணே

விளக்கவுரை :


Powered by Blogger.