போகர் சப்தகாண்டம் 416 - 420 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

416. போமப்பா பச்சையுப்பு தின்றாயானால் புகழான வேருவையில் சுக்கிப்போடும்
வேமப்பா அமுரியிலே இரங்கிப்போகும் வெறிப்பானச் சடமெல்லாம் தளர்ந்துபோகும்
போமப்பா சடமலைந்து நரைமெத்தாகி புகழான தந்தமெல்லாம் கழன்றுபோகும்
நாமப்பா கட்டியதோர் உப்பைத்தின்று நலமான சமாதியிலே இருந்திட்டேனே

விளக்கவுரை :


417. இருந்திட்டேன் சமாதியிலே கற்பமுண்டு ஏழுயுகங்கடந்து எழுந்தேனப்பா
அருந்திட்ட பாட்டர் பக்கல்சென்றுயானும் அருகிருந்தெழுந்திறைஞ்சி தீட்சைக்கேட்டேன்
திருந்திட்ட காலாங்கி ஐயர்பாகல் சென்று செப்பமுடனே யுகம்வாதம்பார்த்தேன்
மருந்திட்டம் ஆகியல்லோ குளிகைகட்டிப் பக்குவமாய் அண்டமெல்லாம் பார்த்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

418. பார்த்திட்டேன் அண்டரண்ட பத்துமட்டும் பரிவான மலைதோறும் நாதாக்கள் கோடி
ஆர்த்திட்ட மலைதோறும் சித்தர்கோடி அந்தந்த மலைகளிலே மூலிகையோமெத்த
ஏர்த்திட்ட சாஸ்திரங்கள் அநேகமுண்டு எந்தநூல் பார்த்துமே எளிதில்காணார்
மார்த்திட்சிமாகவல்லோ உப்புசொன்னேன் மறைத்தார்கள் சாஸ்திரத்தில் சித்தர்தானே

விளக்கவுரை :


419. மறைத்ததென்னவென்றாக்கால் சொல்லக்கேளு மலைகளெல்லாம் சித்தர்மயமாச்சுதென்று
நிறைந்ததென்ன ஆதியுப்பை இழுக்காய்ச்சொல்லி நேராகவழலைத்தான் மூடிப்போட்டார்
உரைத்ததென்ன வாலையினால் வாதம்போச்சு ஓகோகோகாயசித்தி கெவுனசித்திபோச்சு
குரைத்ததென்ன சித்தரென்று சொல்லியானும் கூறினேன் வெளியாகக்கூறினேனே  

விளக்கவுரை :


420. கூறியதோர் சவர்க்கார உண்டைசெய்து குறிப்பாக சுத்திபண்ணி சுன்னம்பண்ணு
மாறியதோர் கடுங்காரச் செயநீர்பண்ணு மைந்தனே கற்பூரவுப்பு பண்ணு
தேறியதோர் வீரத்தை சுண்ணம்பண்ணு சிறப்பாக வெடியுப்பிற் செயநீர்பண்ணு
ஆறியதோர் கல்லுப்பைக் கட்டியாடு அரகரா வாதமிதில் அடங்கிப்போச்சே
விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 411 - 415 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

411. சொல்லவே உபினுட மணியைக்கேளு துடியாகக்கருவில் வைத்து உருக்கும்போது
மல்லவே தங்கமோர் இடையை நீட்டு வாய்திறந்து ஆவென்று சுழித்துவாங்கும்
வெள்ளவே நாகமோர் இடையைப் போடு பேதித்து வாங்கையிலே சூதம்போடு
தெள்ளவே வீரமோர் இடையைப்போடுத் திரண்டுருகி வாங்கையிலே கெந்திபோடே

விளக்கவுரை :


412. போட்டுடனே களங்காகும் முப்பூவுங்கால் பொலிவான நவலோகம் அன்பதுக்கொன்று
காட்டுடனே பத்தரையே மாற்றுங்காணும் கனகத்தைக் கண்டுடனே கெர்ச்சிக்காதே
ஆட்டுடனே அன்னமரைத் தண்ணீர் கொள்ளு ஆசையென்ற புளியுப்பை அகற்றித்தள்ளு
நாட்டுடனே சிவசொத்தை வருமைபோலெண்ணு நலம்போலே சமாதியிலே இருந்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

413. இருந்திட்ட உப்பினுட செந்தூரத்தை இதமாகக்கேளுங்கள் மாணாக்காளே
தருந்திட்ட சூதம் ஒன்று நாகம் மூன்று மருவியிதை உருக்கியல்லோ பொடியாய்ப்பண்ணி
திருந்திட்ட வீரமென்ற சுன்னமொன்று சிறப்பாக மத்தித்து பனியில் வைக்க
அருந்திட்ட செயநீராம் இதனைவாங்கி ஆதியென்ற உப்புபண்ணி தன்னிற்றோயே

விளக்கவுரை :


414. தோச்சுமே பரித்த கட்டைமேலே தூற்றில் சுகமான இலுப்பை நெய்யால் விளக்கைவைத்தும்
பாச்சுமே நூலிழையில் திரியைப்போட்டுப் பக்குவமாய் வாங்குமட்டும் வாட்டித்தீரு
ஏய்ச்சுமே உப்பருந்து பரிதானப்பா இதமான வருணனைப்போல் ஆகும்பாரு
காச்சுமே நவலோகம் ஐம்பதுக்கொன்றிய கையோடே பத்தரையாம் கண்டுகொள்ளே

விளக்கவுரை :


415. கொள்ளப்பா செந்தூரம் குன்றிமட்டும் கோடானகோடிவரை இருத்தும் தேகம்
விள்ளப்பா சுக்கிலத்தைக் கட்டிநீற்ற மேலேறும் அல்லாது கீழோடாது
துள்ளப்பா நரைதிரைகளெல்லாம் மாறும் சுகமாகும் காயமது சிவந்துபோகும்
விள்ளப்பா சட்டையொன்று கக்கிப்போகும் வேதாந்தசாரமெல்லாம் வெளியாய்ப்போமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 406 - 410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

406. போகாமல் உப்பினுட குருவைச்சொல்ல புகழாக சவர்க்காரச் சுன்னமொன்று
நோகாமல் கற்பூரச் சுன்னமொன்று நேர்பாபார வீரத்தின் சுன்னமொன்று
வேகாமற் புழுகொன்று சீனமொன்று விரவியரைச் சவர்க்கார நீரினாலே
வாகாமல் உப்பினுட மணிக்கு பூநீர் மாசற்ற ரவிதனிலே உலரப்போடே

விளக்கவுரை :


407. உலர்ந்த பின்பு சண்ணாம்புக் குகையில்வைத்து உத்தமனே மேல்மூடிசீலைசெய்து
அலர்ந்த பின்பு பத்தெருவில் புடத்தைப்போடு ஆதியென்ற கல்லுப்பு சுண்ணாம்பாகும்
குலந்தனக்குக் கோடாலிகாம்புபோலே கொள்ளியதோர் சரக்குக்குக் காலன்காலன்
நலந்தனக் கடுங்காரம் செயநீர்குத்திக் நாளெழு ரவியிற்குள் உலரப்போடே

விளக்கவுரை :

[ads-post]

408. போடவே அதின்மேனிப் பூப்போலாகும் பொலிவான சுன்னமிடை சாரங்கூட்டி
நாடவே தினமொன்று அரைத்தாயானால் நலமான வருணசலம் போலேநிற்கும்
நீடவே ரவிதனிலே உலர்ந்தபின்பு நேரான சுண்ணாம்புக் குகையில்வைத்து
ஆடவே மேல்மூடிச் சீலைசெய்து அகட்டியொரு புடம்போடச் சுன்னமாமே

விளக்கவுரை :


409. சுன்னத்தைப் பனியில் வைக்கச் செயநீராகும் தோற்றறிய வெந்நீரில் வீரச்சுன்னம்
வன்னத்தை மாற்றிவிக்கும் சவர்க்காரச் சுன்னம் மாசற்றவெளியாகும் பூரச்சுன்னம்
சுன்னத்தை வெளியாக்கும் நீரில்போட்டு கலக்கியொன்றாய் மத்தித்து சரக்கிற்பூச
அன்னத்தை அடுத்த பால்சலம் வேறாம்போல் அணுகிலே கட்டியங்கே மணிபோலாமே

விளக்கவுரை :


410. ஆமப்பா அறுபத்துநாலுதானும் அப்பனே உபசரங்கள் நூற்றிரண்டுபத்தும்
போமப்பால் அவணமுதல் இருபத்தஞ்சும் பொன்காய்க்கும் மரமாக பண்ணுவிக்கும்
நாமப்பா காலாங்கி பதத்தைப் போற்றி நாட்டிலுள்ள பேர்களுக்கு பிழைக்கச்சொன்னேன்
வாமப்பா என்னாவில் ஒன்றுதப்பில் மதிகெட்ட போகமுனியென்று சொல்லே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 401 - 405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

401. வாட்டிடவே கல்லுப்புத் தேறிப்போகும் மருவியதோர் ஊசரமும் உப்பும்கேளே  
நாட்டிடவே நாயுருவிப் பிரண்டைச் சாம்பல் நலமான கிளிங்சிநீர் சரியாய்கூட்டி
ஆட்டிடவே அமுரிவிட்டு மெழுகாய்ப்பண்ணி அடைபோலே ரண்டாக்கி சட்டியிலேபோடு
நீட்டிடவே அடைமேலே உப்பைவைத்து நேர்பாக அதின்மேலே அடையால்மூடே

விளக்கவுரை :


402. மூடியே மேல்மூடிச் சீலைசெய்து முசியாதே அடுப்பேற்றி எரிநால்சாமம்
ஆட்டியே தீபம்போல் எரித்துவாங்கி ஆறவிட்டு எடுத்தந்த படியேவைத்து
நாட்டியே கசபுடத்திற் போட்டாயானால் நலமான வயிரம்போல் உருகிக்கட்டும்
தேற்றியே ஆறவிடுத்துப்பாரு சிவசிவா முத்துபோல் மணியுமாமே

விளக்கவுரை :

[ads-post]

403. ஆமப்பா மணியெடுத்து உருக்கிப்பாரு அரகரா பொன்போல நின்றுஆடும்
தேமப்பா கரிதனிலே இறங்கிற்றானால் சிறப்பாக முன்போல மருந்துபூசி
வாமப்பா புடம்போடு உருகிநிற்கும் மணிபோலே நின்றாடும் கரியுனுள்ளே
தாமப்பா உப்புமணித் தாழ்வடமாய்க் கோர்த்துத் தாயோடு தந்தையும் பூசைபண்ணே

விளக்கவுரை :


404. பண்ணப்பா பானமொடு சுத்திவைத்துப்பரிவாக பூசைபண்ணி மதுவையுண்ணு
விண்ணப்பா தாழ்வடத்தைக் காதில்வைத்து வேதாந்த அனுபவத்தில் மனதையுன்னி
கண்ணப்பா அங்செழுத்தம் எட்டெழுத்தும் ஓத கயிலையுறை சிவன்வந்து நிர்த்தஞ்செய்வார்
நண்ணப்பா சிறுபிள்ளை ஆயிவந்து நாட்டிலுள்ள அதிசயங்கள் சொல்லுவேனே

விளக்கவுரை :


405. சொல்லுவாள் அஷ்டகர்மம் எட்டுந்தானும் தோற்றான கர்மத்தில் வழியுஞ்சொல்வாள்
கொல்லுவாள் வாமத்தைப் பணிந்தபேரை கூப்பிடுவாள் வாமத்தில் கொள்டினோரை
சொல்லுவாள் சிவகாம் சொல்லயானும் விடுத்துப்பார்த்து மக்கட்காக சொன்னேன்
மல்லுவாள் சமாதியிலே உரைத்துப்பாரு மாயப்பிரபஞ்சமெல்லாம் ஒழிந்துபோமே 

விளக்கவுரை :


Powered by Blogger.