போகர் சப்தகாண்டம் 416 - 420 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 416 - 420 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

416. போமப்பா பச்சையுப்பு தின்றாயானால் புகழான வேருவையில் சுக்கிப்போடும்
வேமப்பா அமுரியிலே இரங்கிப்போகும் வெறிப்பானச் சடமெல்லாம் தளர்ந்துபோகும்
போமப்பா சடமலைந்து நரைமெத்தாகி புகழான தந்தமெல்லாம் கழன்றுபோகும்
நாமப்பா கட்டியதோர் உப்பைத்தின்று நலமான சமாதியிலே இருந்திட்டேனே

விளக்கவுரை :


417. இருந்திட்டேன் சமாதியிலே கற்பமுண்டு ஏழுயுகங்கடந்து எழுந்தேனப்பா
அருந்திட்ட பாட்டர் பக்கல்சென்றுயானும் அருகிருந்தெழுந்திறைஞ்சி தீட்சைக்கேட்டேன்
திருந்திட்ட காலாங்கி ஐயர்பாகல் சென்று செப்பமுடனே யுகம்வாதம்பார்த்தேன்
மருந்திட்டம் ஆகியல்லோ குளிகைகட்டிப் பக்குவமாய் அண்டமெல்லாம் பார்த்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

418. பார்த்திட்டேன் அண்டரண்ட பத்துமட்டும் பரிவான மலைதோறும் நாதாக்கள் கோடி
ஆர்த்திட்ட மலைதோறும் சித்தர்கோடி அந்தந்த மலைகளிலே மூலிகையோமெத்த
ஏர்த்திட்ட சாஸ்திரங்கள் அநேகமுண்டு எந்தநூல் பார்த்துமே எளிதில்காணார்
மார்த்திட்சிமாகவல்லோ உப்புசொன்னேன் மறைத்தார்கள் சாஸ்திரத்தில் சித்தர்தானே

விளக்கவுரை :


419. மறைத்ததென்னவென்றாக்கால் சொல்லக்கேளு மலைகளெல்லாம் சித்தர்மயமாச்சுதென்று
நிறைந்ததென்ன ஆதியுப்பை இழுக்காய்ச்சொல்லி நேராகவழலைத்தான் மூடிப்போட்டார்
உரைத்ததென்ன வாலையினால் வாதம்போச்சு ஓகோகோகாயசித்தி கெவுனசித்திபோச்சு
குரைத்ததென்ன சித்தரென்று சொல்லியானும் கூறினேன் வெளியாகக்கூறினேனே  

விளக்கவுரை :


420. கூறியதோர் சவர்க்கார உண்டைசெய்து குறிப்பாக சுத்திபண்ணி சுன்னம்பண்ணு
மாறியதோர் கடுங்காரச் செயநீர்பண்ணு மைந்தனே கற்பூரவுப்பு பண்ணு
தேறியதோர் வீரத்தை சுண்ணம்பண்ணு சிறப்பாக வெடியுப்பிற் செயநீர்பண்ணு
ஆறியதோர் கல்லுப்பைக் கட்டியாடு அரகரா வாதமிதில் அடங்கிப்போச்சே
விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar