411. சொல்லவே உபினுட மணியைக்கேளு
துடியாகக்கருவில் வைத்து உருக்கும்போது
மல்லவே தங்கமோர் இடையை
நீட்டு வாய்திறந்து ஆவென்று சுழித்துவாங்கும்
வெள்ளவே நாகமோர் இடையைப்
போடு பேதித்து வாங்கையிலே சூதம்போடு
தெள்ளவே வீரமோர்
இடையைப்போடுத் திரண்டுருகி வாங்கையிலே கெந்திபோடே
விளக்கவுரை :
412. போட்டுடனே களங்காகும்
முப்பூவுங்கால் பொலிவான நவலோகம் அன்பதுக்கொன்று
காட்டுடனே பத்தரையே
மாற்றுங்காணும் கனகத்தைக் கண்டுடனே கெர்ச்சிக்காதே
ஆட்டுடனே அன்னமரைத் தண்ணீர்
கொள்ளு ஆசையென்ற புளியுப்பை அகற்றித்தள்ளு
நாட்டுடனே சிவசொத்தை
வருமைபோலெண்ணு நலம்போலே சமாதியிலே இருந்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
413. இருந்திட்ட உப்பினுட
செந்தூரத்தை இதமாகக்கேளுங்கள் மாணாக்காளே
தருந்திட்ட சூதம் ஒன்று
நாகம் மூன்று மருவியிதை உருக்கியல்லோ பொடியாய்ப்பண்ணி
திருந்திட்ட வீரமென்ற
சுன்னமொன்று சிறப்பாக மத்தித்து பனியில் வைக்க
அருந்திட்ட செயநீராம்
இதனைவாங்கி ஆதியென்ற உப்புபண்ணி தன்னிற்றோயே
விளக்கவுரை :
414. தோச்சுமே பரித்த கட்டைமேலே
தூற்றில் சுகமான இலுப்பை நெய்யால் விளக்கைவைத்தும்
பாச்சுமே நூலிழையில்
திரியைப்போட்டுப் பக்குவமாய் வாங்குமட்டும் வாட்டித்தீரு
ஏய்ச்சுமே உப்பருந்து
பரிதானப்பா இதமான வருணனைப்போல் ஆகும்பாரு
காச்சுமே நவலோகம்
ஐம்பதுக்கொன்றிய கையோடே பத்தரையாம் கண்டுகொள்ளே
விளக்கவுரை :
415. கொள்ளப்பா செந்தூரம்
குன்றிமட்டும் கோடானகோடிவரை இருத்தும் தேகம்
விள்ளப்பா சுக்கிலத்தைக்
கட்டிநீற்ற மேலேறும் அல்லாது கீழோடாது
துள்ளப்பா நரைதிரைகளெல்லாம்
மாறும் சுகமாகும் காயமது சிவந்துபோகும்
விள்ளப்பா சட்டையொன்று
கக்கிப்போகும் வேதாந்தசாரமெல்லாம் வெளியாய்ப்போமே
விளக்கவுரை :