போகர் சப்தகாண்டம் 406 - 410 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 406 - 410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

406. போகாமல் உப்பினுட குருவைச்சொல்ல புகழாக சவர்க்காரச் சுன்னமொன்று
நோகாமல் கற்பூரச் சுன்னமொன்று நேர்பாபார வீரத்தின் சுன்னமொன்று
வேகாமற் புழுகொன்று சீனமொன்று விரவியரைச் சவர்க்கார நீரினாலே
வாகாமல் உப்பினுட மணிக்கு பூநீர் மாசற்ற ரவிதனிலே உலரப்போடே

விளக்கவுரை :


407. உலர்ந்த பின்பு சண்ணாம்புக் குகையில்வைத்து உத்தமனே மேல்மூடிசீலைசெய்து
அலர்ந்த பின்பு பத்தெருவில் புடத்தைப்போடு ஆதியென்ற கல்லுப்பு சுண்ணாம்பாகும்
குலந்தனக்குக் கோடாலிகாம்புபோலே கொள்ளியதோர் சரக்குக்குக் காலன்காலன்
நலந்தனக் கடுங்காரம் செயநீர்குத்திக் நாளெழு ரவியிற்குள் உலரப்போடே

விளக்கவுரை :

[ads-post]

408. போடவே அதின்மேனிப் பூப்போலாகும் பொலிவான சுன்னமிடை சாரங்கூட்டி
நாடவே தினமொன்று அரைத்தாயானால் நலமான வருணசலம் போலேநிற்கும்
நீடவே ரவிதனிலே உலர்ந்தபின்பு நேரான சுண்ணாம்புக் குகையில்வைத்து
ஆடவே மேல்மூடிச் சீலைசெய்து அகட்டியொரு புடம்போடச் சுன்னமாமே

விளக்கவுரை :


409. சுன்னத்தைப் பனியில் வைக்கச் செயநீராகும் தோற்றறிய வெந்நீரில் வீரச்சுன்னம்
வன்னத்தை மாற்றிவிக்கும் சவர்க்காரச் சுன்னம் மாசற்றவெளியாகும் பூரச்சுன்னம்
சுன்னத்தை வெளியாக்கும் நீரில்போட்டு கலக்கியொன்றாய் மத்தித்து சரக்கிற்பூச
அன்னத்தை அடுத்த பால்சலம் வேறாம்போல் அணுகிலே கட்டியங்கே மணிபோலாமே

விளக்கவுரை :


410. ஆமப்பா அறுபத்துநாலுதானும் அப்பனே உபசரங்கள் நூற்றிரண்டுபத்தும்
போமப்பால் அவணமுதல் இருபத்தஞ்சும் பொன்காய்க்கும் மரமாக பண்ணுவிக்கும்
நாமப்பா காலாங்கி பதத்தைப் போற்றி நாட்டிலுள்ள பேர்களுக்கு பிழைக்கச்சொன்னேன்
வாமப்பா என்னாவில் ஒன்றுதப்பில் மதிகெட்ட போகமுனியென்று சொல்லே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar