421. போச்சென்ற உப்பினுட
மெழுகைக்கேளு பேரானுவப்பதுவும் பலமுமொன்று
ஆச்சென்ற குகையில்நின்று
உருகும்போது அப்பனே சாரமது பலமும்கால்தான்
நீச்சென்ற வெண்காரம் பலமும்
கால்தான் நேரான கந்தகமும் பலம் அரைதான் சேர்த்து
காச்சென்ற சவர்க்கார
நீரைவார்த்துக் குன்றியளவு உண்டைசெய்யே
விளக்கவுரை :
422. செய்த உண்டையுப்பு நின்று
உருகும்போது சிதராமல் ஒவ்வொன்றாய்க் கொடுத்துவாநீ
மைதவுண்டை புகையாமல்
உள்ளேவாங்கி மகிழாமல் உப்பதுவும் இப்பால்வாங்கிப்
பெய்தநவலோகத்தில்
நூற்றுக்கொன்று போட்டிடவே தசமாற்றாய் நிற்கும்பாரு
ஐதவுப்புக் காவிக்கும்
ஓடாதப்பா ஆச்சரியம் காயசித்தி சுருக்கம்பாரே
விளக்கவுரை :
[ads-post]
423. பாரிந்த மெழுகதனை
குன்றியண்ணு பத்தியமாய்ப் புளியுப்புப் பெண்ணும்தள்ளு
காரிந்த நாற்பது நாள்
உள்ளவரையில் வாழும் கனமான யோகத்தே நின்றுதேரு
சாரிந்த சட்டையொன்று
தள்ளிப்போடும் சந்திரனோ சூரியனோ என்பார்பாரு
ஆரிந்தபடி செய்வார்
நாதாக்கள் செய்வார் ஆச்சரியம் உலகத்தோர் பாஷாண்டிதானே
விளக்கவுரை :
424. தானென்ற உலகத்தோர்க்கு
வாதமெய்தில் அத்தருவம் அயனாய்த்திரிந்து பெண்ணைச்சேர்ந்து
பானென்ற அமுதமுண்டு
மற்றேயாகிப் பலநிலைவாய்க்கப் பழுத்துப்பாசமெய்தி
கோனென்ற குருவேது
காயசித்தியேது குறிப்பான ஆதாரவழிதானேது
வானொன்றி யாடுகிற
குளிகையென்ன வென்று வாய்ப்பேச்சாய்த் திரிந்துழன்று மருளுவானே
விளக்கவுரை :
425. மருளாமற் போகவல்லோ வாதஞ்சொன்னேன் மாண்டிறந்து போகாமல் காயசித்திச்சொன்னேன்
இருளான வெளிகான
யோகஞ்சொன்னேன் ஏழுவகைக் காணவல்லோ குளிகைச்சொன்னேன்
அருளான மனமடங்க
போதஞ்சொன்னேன் வாநந்தமாவதற்கு வஸ்துசொன்னேன்
பொருளான குருபதத்தில்
தொண்டுபண்ணி போக்கோடே உப்பைமுந்திக் கட்டியாடே
விளக்கவுரை :