426. ஆடவே உப்பென்ற சுன்னமொன்று
அணைத்திடுநீ சாரத்தை ரண்டையுந்தான்
நீடவே கல்வத்தில்
அரைநாற்சாமம் நேர்ந்த பின்பு சுன்னமென்ற குகையில்வைத்தூது
நாடவே
கடுங்காரச்செயநீர்குத்தி நாள்மூன்று மத்தித்து ரவியில்வைப்பாய்
மூடவே ரவியில்வைக்கச்
செயநீருமாகும் உத்தமனே இந்நீரின் ஓட்டங்கேளே
விளக்கவுரை :
427. கேளப்பா இந்நீரில்
வீரச்சுன்னம் கெடியாக மத்தித்துப் பலந்தான்பூரம்
நாளப்பா பீங்கானில்
பூரம்போட்டு நலமாகச் செயநீரை அதிலேவாரும்
நீளப்பா மூன்றுநாள்
நிழலில்வைத்து நேர்பாக ரவிதனிலே ஐந்துநாள்போடு
வாளப்பா அரைத்துநன்றாய்
பில்லைதட்டி வளமான சவர்க்காரச்சுன்னம்பூசே
விளக்கவுரை :
[ads-post]
428. பூசியல்லோ சுன்னமென்ற
குகையில்வைத்து பொருந்தவே மேல்மூடிசீலைசெய்து
ஆசியல்லோ பீசானம் பூசைபண்ணி
ஐந்தெருவில் புடம்போடப் பூரம்நீறும்
வாசியல்லோ கடுங்காரம்
செயநீர்குத்தி மகத்தான ரவிதனிலே உலரப்போடு
தேசஇயல்லோ சிவகாமி சொன்ன
மார்க்கம் செப்புகிறேன் அதின்வேகம் செப்புறேனே
விளக்கவுரை :
429. செப்பியதோர் பூரமது பலந்தான்
ஒன்று தெள்வான சாரமது பலமுமொன்று
ஒப்பியதோர் இதுரெண்டும்
கல்வத்தாட்டு ஓங்கியதோர் நெட்டெழும்ப மாட்டுமாட்டு
தப்பியதோர் சுண்ணாம்புக்
குகையில் வைத்து சார்பாக மேல்மூடி சீலைசெய்து
அப்பியதோர் புடத்தைப்போட
வெந்துநீராம் ஆச்சரியம் பனியில்வைக்கச் செயநீராமே
விளக்கவுரை :
430. ஆமப்பா இந்நீரில்
வீரச்சுன்னம் அதட்டியே கலக்கிமெள்ளவைத்துக்கொண்டு
ஓமப்பா சரக்கான அறுபத்திநாலு
முற்றும்மெள்ள மாட்டிடவே மணியுமாகும்
சாமப்பா சாரமது லவணமெல்லாம்
ஷணத்திலே சுண்ணாம்பாய் விரிந்துபோகும்
வேமப்பா கண்டருமோ
வெள்ளையாகும் வேதித்ததாளகத்தின் மஞ்சள்போமே
விளக்கவுரை :