போகர் சப்தகாண்டம் 431 - 435 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 431 - 435 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

431. மஞ்சளென்ற கெந்தகமே வெள்ளையாகும் மாசற்ற வீரமது சுன்னமாகும்
மஞ்சளென்ற லிங்கமது மெழுகேயாகும் ஆதியென்ற கல்லுப்பும் மணியுப்பாகும்
துஞ்சளென்ற உபசாரங்கள் ஈயமாகும் தொடுமுன்னே தேகமது விரைத்துப்போகும்
சுஞ்சலென்ற லோகங்கள் வெண்ணையாகும் காட்டிடவே நூற்றொன்றில் ஏமமாமே

விளக்கவுரை :


432. ஏமமே ஆச்சுதென்று புளகிக்க வேண்டாம் மெளிதாக மூலத்தையிருத்திப் பாரு
வாமயம கெதியாக அனுதினமும் போற்று வழியாறு தளமெல்லாம் கண்டுபாரு
தேவமே சமரசவாசலுக்குள்ளே புக்கிச் செப்பரிய மதியளவும் தொட்டுயேறு
காமமே கதியென்று விழுகவேண்டாம் கருத்தென்ற வாளினால் பொறியைவீசே

விளக்கவுரை :

[ads-post]

433. வீசிடவே பூரமென்ற நீரினாலே விளங்கியதோர் தாளகத்தில் சுருக்குப்போடு
தூசிடவே சவர்க்காரச் சுன்னம்தானும் துடியான பூரமென்ற சுன்னம் மூன்று
ஆசிடவே வெடியுப்பு நீரால் ஆட்டி அப்பிய தாளகத்தில் விரவிப்போடு 
வாசிடவே சுண்ணாம்புக் குகையில்வைத்து மண்செய்து ஊதிடவே சுன்னமாமே

விளக்கவுரை :


434. சுன்னமென்ற தாளகத்தில் வீரம்கூட்டித் துடியாக மத்தித்து வங்கத்தப்பி
கன்னமென்ற அண்டோடு கீழ்மேலிட்டு கடுகவே சுன்னமென்ற குகையில் ஊது
வன்னமென்ற வங்கமது சுன்னமாகும் வாதமென்ற கடைதிறக்கும் திறவுகோலாம்
சின்னமென்ற வேங்கையில் ஆடுபோன திடுக்கிட்டுச் சூடமது உண்டையாமே

விளக்கவுரை :


435. ஆமப்பா துரிசியொரு பலமேதூக்கு அதிகமென்ற பூதநீர் தன்னில் தோய்த்து
சேமப்பா ரவிதனிலே உலரப்போடு சிறப்பாக ஏழுநாள் ஆனபின்பு
தாமப்பா சவர்க்காரச் சுன்னமொன்று தயங்காத வீரமொன்று சுன்னமொன்று
வாமப்பா வங்கமொன்று பூரமொன்று வகையாக சூதமொரு காசுந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar