போகர் சப்தகாண்டம் 436 - 440 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 436 - 440 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

436. தானென்ற புழுகோடு உரமுங்கூட்டிச் சமரசமாய்க் கடுங்காரச் செயநீர்குத்தி
மானென்ற துரிசியின்மேல் கவசங்கட்டி வகையான சுண்ணாம்புக் குகையில் வைத்து
கானென்ற மேல்மூடிச் சீலைசெய்து கசபுடத்தில் போட்டெடுத்து ஆறவிட்டு
ஆனென்ற கவசத்தை உடைத்துப் பார்த்தால் அம்மம்மா கடுஞ்சுருக்குச் சுன்னமாச்சே

விளக்கவுரை :


437. ஆச்சப்பா துரிசியது குருவுமானால் அண்டரண்ட கடாகமெல்லாம் கிழிந்துபோகும்
மூச்சப்பா ஆடுமுன்னே நாகங்கட்டு மூதண்ட சவ்வீர மெழுகேயாகும்
பாச்சப்பா அண்டமெல்லாம் மெழுகாய்ப்போகும் பாஷானகுலமெல்லாம் வெண்மையாகும்
ஏசப்பா பனிநீரும் வெள்ளைநீரும் எடுத்துவந்தால் ஒன்றிரவில் கோடியாமே

விளக்கவுரை :

[ads-post]

438. கோடியென்று சொல்லுவதும் கொஞ்சம்கொஞ்சம் குறுக்காமல் எடுக்கலாம் அனேகவித்தை
மாடியென்றும் இளையாமல் சித்தியாகும் மாசித்தர் ஆட்டமெல்லாம் இதுதானல்லோ
நாடியென்றும் துரிசினால் சிங்கிபண்ணி நலமுற்ற குளிகைகட்டிச் சாரணைசெய்து
ஆடியென்றும் குளிகைதனை வாயில்வைத்து அண்டரண்ட பதமெல்லாம் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


439. பார்த்திட்டேன் அண்டத்தில் சித்தர்கோடி பரிவாக அவரைநீகண்டு பேசில்
மார்திட்ட குருவேது என்றாராகில் மகத்தான மூலரிட பேரனென்று சொல்லு
சேர்திட்டால் அஸ்திரமும் சூஸ்திரமும் கேட்பார் சிறப்பாகக் கக்கத்தில் இருக்குதென்று
கார்த்திட்ட குளிகையுட வேகங்கேட்கில் கண்ணிமைக்குள் கற்பமென்று புக்குமென்றுன்னே

விளக்கவுரை :


440. என்னவே சாரத்தை பண்டம்போல்சீவி இதமான அபினோடு மிளகு பூரம்
கன்னவே மேனிச்சார் அரைத்துப்பூசிக் கடுகவே ரவிதன்னில் உலரப்போடு
பன்னவே அதின்மேலேச் சரக்குத்தானும் பக்குவமாய் இறக்கியதில் கவசங்கட்டி
மன்னவே சாணாக்கில் சீலைசெய்து வகையாக வங்கத்தில் தோய்க்கக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar