441. கேளப்பா வங்கத்தைக் குகையிலிட்டு கெடியாக வருகையில் தோய்த்துவாநீ
வாளப்பா ஏழுதரம்
தோய்த்துவாநீ வகையான காரமது சுத்தியாகும்
தாளப்பா சவர்க்காரச்
சுன்னவீரம் தயங்காத பூரமொடு மூன்றுங்கேளு
வேளப்பா வெடியுப்பு
நீரைவார்த்து விரவியதை சாரத்தின் மேலேபூசே
விளக்கவுரை :
442. பூசியதைச் சுண்ணாம்புக்
குகையில்வைத்துப் புடம்போட்டு எடுத்துப்பார் தவளநீராம்
ஆசியதைக் கடுங்காரச்
செயநீர்குத்தி அப்பனே பனியில்வைக்கச் செயநீராகும்
தேசியதில் சரக்குகளில்
சுருக்குப்போட செயமான மெழுகாகும் வேதையாகும்
ஆசியதை எண்ணாதே கற்பமுண்ணு
அருணனைப்பொல் சிவப்பாகும் காயந்தானே
விளக்கவுரை :
[ads-post]
443. தானென்ற செயநீரில்
வீரச்சுன்னம் சமரசமாய் பூரமொன்று சுன்னமொன்று
கானென்ற சவர்க்காரச்
சுன்னம்தானும் கலந்தசெயநீரால் படிகைமேலே
வானென்ற தினந்தோறும்
தோய்த்துத் தோய்த்து மகத்தான ரவிதனில் ஏழுநாள்போட்டு
பானென்ற வெடியுப்புச்
சுன்னம்பூசப் பருவமாய் சுன்னமொரு குகையில்வையே
விளக்கவுரை :
444. வைத்துமே சீலைசெய்து
புடத்தைப்போடு வாகாக எடுத்துப்பார் சீனச்சுன்னம்
கைத்துமே கடுங்காரச்
செயநீர்குத்தி கணிதமாய்ச் சமனான சாரம்சேர்த்து
தைத்துமே கல்வத்திட்டு
ஆட்டிச்சமமாகப் புடம்போடு எடுத்துக்கொட்டி
மைத்துமே பனியில்வைக்கச்
செயநீராகும் மாசற்ற நீராலே எல்லாம்சாமே
விளக்கவுரை :
445. சாமென்ற நீரிலே வீரச்சுன்னம்
தயங்காத பூரமென்ற சுன்னம்போட்டு
காமென்ற நீரிலே
கலக்கிவைத்துக் கடுஞ்சூடன் பலமொன்றில் நீரைவார்த்து
ஆமென்ற நிழலிலே மூன்றுநாள்
வைத்து அதன்பிறகு ஏழுநாள் ரவியில்போட்டு
வாமென்ற பில்லைபண்ணி
உலரப்போட்டு மாசாரக்கல்லுப்பு சுன்னம்பூசே
விளக்கவுரை :