போகர் சப்தகாண்டம் 446 - 450 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 446 - 450 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

446. பூசியே சுண்ணாம்புக் குகையில்வைத்துப் பொலிவாகப் புடம்போடப் பூப்போலாகும்
காசியென்ற நடுங்காரச் செயநீர்குத்தி கனமாக அண்டத்தின் மேலேபூசி  
தேசியென்ற சேர்த்துருக்க முன்னேவைத்து சிறப்பாக மூன்றுநாள் ரவியிற்போடு
தூசியென்ற மேலோடு ரண்டுசுருக்கூடும் சுழன்று வெந்து சுண்ணாம்பாய் நீறிப்போமே

விளக்கவுரை :


447. நீறியதில் வீரமென்ற சுன்னம்போட்டு நேர்ப்அகச் சாரநீர்விட்டு ஆட்டி
மாறியதில் நிமிளைதனை கவசங்கட்டி மகத்தான சுண்ணாம்புக் குகையில்வைத்து
தேறியதில் மேல்மூடிசீலைசெய்து சிறப்பாக கெசபுடத்தில் போடுநீயும்
ஆறியபின் எடுத்துப்பார் கடிதாம் சுன்னம் ஆகாரம் அதின் ஆண்மை அறிந்திலேனே

விளக்கவுரை :

[ads-post]

448. அறிந்திலேன் இச்சுன்னம் வீரச்சுன்னம் அப்பனே ரண்டையும்தான் சாரநீரால்
பிறிந்திலேன் மத்தித்துத் தங்கத்துக்கப்பி பேரானயண்டத்தோல் கீழ்மேலிட்டு
செறிந்திலேன் கெசபுடமாய் வெளியில்போடு சிறப்பான பரிதானும் சுன்னமாகும்
கறிந்திலேன் வாதமடம் திறந்துப்போச்சு கரைக்குள்ளாய் வாதமடம் சிக்கிப்போச்சே

விளக்கவுரை :


449. போச்சப்பா பரிதானும் சுன்னமானால் போட்டிட்டால் சூதமது கட்டிப்போகும்
நீச்சப்பா வாதமெல்லாம் கைக்குள்ளாகும் நிரைநிரைத் தாதுவெல்லாம் மணிபோலாடும்
காச்சப்பா தேகமது பொன்போலாகும் கண்டுகொள்ளு காயயித்தி சுருக்குமெத்த
வாச்சப்பா இத்தனையும் முப்பாலாச்சு மயங்காதே உப்பைமந்திக் கட்டியாடே

விளக்கவுரை :


450. ஆடவே வாசினையை அடித்துத்தள்ளு அப்பனே அஷ்டாங்கம் அறிந்துபாரு
போடவே கற்பமுண்டு காயசித்தியுண்டு புகழும் மனோன்மணித்தாயை நீராய்ப்பூசி
கூடவே குருபதத்தை தொண்டுபண்ணு குறிப்பாக கைமுறையும் இனமும்பாரு
நீடவே சத்துரு மித்துருவும்பாரு நினைவெல்லாம் வேதாந்தக் குறிப்பில்வையே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar