போகர் சப்தகாண்டம் 451 - 455 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 451 - 455 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

451. குறிப்பாக வெங்காரக் கட்டுகேளு கூறியது இதன்பெருமை சிவனுங்காணார்
நெரிப்பாகச் சத்தெலஃலாம் இதினாலல்லோ நேரான காமவிடாய் சத்துப்போச்சு
வெறிப்பான லோகங்கள் தம்மினத்துக்கெல்லாம் விரவியிதைவிட்டல்லோ கண்விட்டாடும்
கறுப்பாகம் கபாலல்லோ கார ஆட்டு கைவிட்டால் சரக்கெல்லாம் உட்கொள்ளாதென்னே

விளக்கவுரை :


452. என்னவே சாரமது பலகைபோல எடுத்துமே ஆவெருதின் சாணியாலே 
கன்னவே கழுவிநன்றாய் சுத்திபண்ணு கலங்காதே சவர்க்காரச் சுன்னம் வீரம்
என்னவே பூரமொடு மூன்று கேளு பதறாமல் கழஞ்சிவைதான் சாக்கிக்கொண்டு
தன்னவே மத்தித்து சாரநீரில் தயங்காதே ரவிதனிலே தோய்த்துப்போடே

விளக்கவுரை :

[ads-post]

453. போடவே தினமெழில் வெளிரிக்கட்டும் பூனைக்கண்போல வரவும் காணும்
ஆடவே நாகத்தின் செயநீர்க்குள்ளே அபாஞ்சி ரேக்கதனை மேலேசுற்றி
நிடவே தீபத்தில் வாட்டு நேர்ந்த நேரான அபஞ்சியைத்தான் சுளித்து வாங்கும்
மாடவே அருணனைப்போல் சிவப்பேயாகும் மாதளம்பூப் போலிருக்கும் மக்காள்பாரே

விளக்கவுரை :


454. பார்க்கவே நவலோகம் நூற்றுக்கொன்று பாச்சிடவே பதினாறு மாற்றுமாகும்
ஆர்க்கவே தினம்பணந்தான் உண்டாயானால் அருணனைப்போல் தேகமுமாம் கண்ணொளியேயீறும்
சேர்க்கவே காயமது கர்ப்பாந்தகாலம் திரையாமல் பண்ணிவைக்கும் நரையோயில்லை
சார்க்கவே சூதத்தை ஷணத்தில்கொல்லும் கண்ணிமைக்குள் பாஷாணம் சத்துமாமே

விளக்கவுரை :


455. சத்தான சாரநீர்க் குள்ளே மைந்தா தயங்காத சவர்க்காரச் சுன்னமிட்டும்
மகத்தான வீரமிட்டும் பூரமிட்டுப் பரிவாகப் பீங்கானில் வாங்கிக் கொண்டு
அத்தான அண்டமது அன்பத்தொன்று அதிகமென்ற மஞ்சளாய்க் கருவைவாங்கி
நித்தான சட்டியிட்டு அடுப்பிலேற்றி நினைவாக வருத்திடுவாய் கருகத்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar