போகர் சப்தகாண்டம் 456 - 460 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 456 - 460 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

456. கருகவே வருத்திடவே மயிலமாகும் கானந்த வேளையிலே படிதானொன்று
பகருவேன் இலுப்பையெண்ணெய் கூடவிட்டு பக்குவமே ஆனபின்பு இருத்துக்கொண்டு
தருகவே அப்புருகம் பலந்தான்ரண்டு தன்னோடு காந்தமது பலமும்ரண்டு
திருகவே கருவளகில் பலமும்ரண்டு சிறந்ததொரு வெங்காரம் பலமும்ரண்டே

விளக்கவுரை :


457. ரெண்டோடு இதுவெல்லாம் பொடியாய்ப்பண்ணி  நேரான அண்டத்தின் தைலத்தில்குழப்பி
பண்டோடே மண்ணாலே குகைதான் பண்ணி பக்குவமாய்ச் சுட்டெடுத்து வைத்துக் கொண்டு
சண்டோடே தயிலத்தை யுடகுகையிற்பூசி சார்பாக நாகம் பலந்தான் எட்டு 
கண்டோடே வெறும்குகைக்குள் உரிக்கிமைந்தா கனமான சாரத்தின்பொடிமேல்தூவே

விளக்கவுரை :

[ads-post]

458. தூவியே நாகமது கண்விட்டாடும்  சுகமாக மருந்திட்ட குகையில் வார்த்துத்
தாவையிலே தயிலத்தைக் குத்துகுத்து  தணிப்பிறகு சாரநீர்  குத்திவாரி
பாவையிலே வில்லையாய் இருக்கும்பாரு பக்குவமாய் எடுத்துமுன்போல் தயிலம்பூசி
காவையிலே முன்போல உருக்குமைந்தா கனமான சாரத்தின்பொடிமேல்தூவே 

விளக்கவுரை :


459. தூவியபின்முன்குகையில் மருந்துபூசிதுடியாக அதற்குள்ளே சாய்த்துப்பின்பு
பாவியபின் அதின்மேலே தயிலம்குத்தி பரிவாகாதின்மேலே சாரநீர்குத்தி
மேவியபின் அப்படியே ஐம்பத்தொன்றும் ஒலிவாக சாய்ந்துவா பாகமாக
காவியபின்புகையஞ்சும் கட்டிப்போகும் கனமானமுழுக்கட்டு நாகம்பாரே

விளக்கவுரை :


460. பாரப்பா நாகமது கட்டிற்றானால் பண்பேதி சண்பேதி கத்திபேதி
ஆரப்பா இதினாட்டைக் காணப்போறார் அம்மம்மாசிவரிஷி  சித்தர்காண்பார்
தூரப்பா எடுத்தசலம்  துலையாப்போல  தொடர்ந்தேறி கொடிமட்டும் எட்டியோடும்
காரப்பா குருபதத்தில் தொண்டுபண்ணு கைமுறைகள் தவறாமல் சூட்டுவிட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar