போகர் சப்தகாண்டம் 461 - 465 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 461 - 465 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

461. சூட்டவே நாகமொரு பலந்தானப்பா துடியான தங்கமொரு பலத்திலீய
நீட்டவே ரண்டுமொன்றாய் உருகும்போது நினைவாக சூதமொரு பலத்தைப்போடு
ஆட்டவே கல்வத்தில் அதனைக்கொட்டி அனையப்பா பலம்நாலு கெந்திதானும்
கூட்டவே சூடனது பலமிரண்டு கொடிதான மல்லிகையின் சாற்றால் ஆட்டே

விளக்கவுரை :


462. ஆட்டியே தினமூன்று காயக்காய அதன்பின்பு பொடியாக்கி குப்பிக்கேற்றி
நீட்டியே வான்குகையிற் பனிரண்டு சாமம்நேர்ப்பாக முத்தீயும் மாட்டித்தீரு
கூட்டியே வஸ்துசுத்தி ஈசானத்தில் கொடிய நிருவாணிக்கும் பூசைசெய்து
மாட்டியே நவலோகம் ஆயிரத்துக்கொன்று மாற்றது இருபத்து அஞ்சுதானே

விளக்கவுரை :

[ads-post]

463. அங்சான செந்தூரம் குன்றியுண்ணு அப்பனே மண்டலத்தில் சட்டைபோகும்
பஞ்சாங்க நேரங்களெல்லாம் தவிடுபொடியாகும் மடுமுன்னே காயமது இருக்கிக்கொள்ளும்
தஞ்சானசிலைபோலத் தேகமாகும் சாவில்லை யுகாந்தவரை நரைதிரை இல்லை
பிஞ்சான காயமுமாம் மத்தியாமுண்ணு பேசாதே ஒருவருடன் மூலம்பாரே

விளக்கவுரை :


464. பார்க்கவே நாகமொரு பலத்தைநீயும் பரிவாகத் தகடாக்கிப் பூசக்கேளு
சேர்க்கவே வீரமென்ற சுன்னமொன்று சிறப்பான பூரமென்ற சுன்னமொன்று
கார்க்கவே தாளகத்தின் சுன்னமொன்று  கலங்காதே சாரநீர்விட்டு ஆட்டி
ஆர்க்கவே மத்தித்து தகட்டிற்பூசி ஆதியாம் சுண்ணாம்பு குகையில் ஊதே

விளக்கவுரை :


465. ஊதவே சுண்ணம்பாய் நீறிப்போகும் உத்தமனே வாசனைக்குப் பாஷாணம் சாகும்
பாதவே சூதமது இட்டிளி போலாகும் பண்பான வீரமது மணியுமாகும்
கோதவே லிங்கமது கட்டிப்போகும் கொடிதான சரக்குகளிற் பூசிவாட்ட
ஓதவே சரக்கெல்லாம் மணிபோலாகும் உத்தமனே நாகத்தின்ஓட்டம்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar