466. தானென்ற நாகம்போல் காரீயம் சாய்த்துச் சமர்த்துனே தகடாக்கி
பூசக்கேளு
ஊனென்ற வெள்ளையென்ற
பாஷாணத்தோடு உத்தமனே சவ்வீரம் பூரம்சீனம்
கானென்ற சவர்க்காரச் சுன்னம்
சூடன்கலந்தரைத்து சாரதின்செயநீராகில்
பானென்ற தகடுதனிற்
பூசிவைத்து பக்குவமாய் சுன்னமென்ற
குகையிலூதே
விளக்கவுரை :
467. ஊதையிலே வெந்துருகி சுன்னமாகும் உத்தமனே சுன்னத்தின்
சாரங்கூட்டிப்
பாதையிலே கல்வத்திலிட்டு ஆட்டிப் பக்குவமாய் சுன்னமென்ற குகையில்வைத்து
வேதையிலே மேல்மூடிசீலைசெய்து விளங்கவே மலரும் பூப்போல்
காதையிலே கடுங்காரச் செயநீர்குத்திக் கனமான பீங்கானிற் பனிப்படவே
வையே
விளக்கவுரை :
[ads-post]
468. வைத்துடனே பலபலெனத் தண்ணீராகும்
வாகாகயின்னீரில் வீரம்பூரம்
கைத்துடனே உப்பான
சுன்னமிட்டுக் கனமானதுரிசிநீர் கழஞ்சுபோட்டுத்
தைத்துடனே கல்வத்தில்
சூதம்போட்டு தாக்கி அரைக்கால்சாமம் கல்வத்திட்டு
மொய்த்துடனே உண்டையாய்
எடுத்துக்கொண்டு முயற்சியாய் ஆரையிலை கவசங்கட்டே
விளக்கவுரை :
469. கட்டியே அவிற்புடமாய்
பத்துபோடு கனமானசூடன் தீதத்னில்வாட்டித்
தேட்டியே கரண்டியிலே எண்ணெய்குத்தி
உருக்கிச் செயமானபின்பு எடுத்து சிரசில்வைக்க
வெட்டியே பார்நீ மகற்றிபோடு விரவியே வாயில்வைக்க தம்பனையேயாகும்
வட்டியே உபசரத்தின்
சத்தையீந்து மார்க்கமாய்ச் சாரனைதான்
செய்திடாயே
விளக்கவுரை :
470. செய்திட்ட குளிகைதன்னை
வாயில்வைக்கத் திறமான அண்டரண்டத்
தலங்களெல்லாம்
கைத்திட்டமாக உந்தன்
காட்டிவிக்கும் கண்ணிமைக்குள் சங்கவரை
புக்குவிக்கும்
கொய்திட்ட ஆண்டத்தில் சித்தருண்டு குளிகையெங்கே
பார்ப்போமென்பர் அறியவேண்டாம்
மெய்த்திட்ட புத்தியினால்
கொடுத்தாயானால் விரைந்தெடுத்து
அண்டத்தில் பாய்வார்பாரே
விளக்கவுரை :