போகர் சப்தகாண்டம் 471 - 475 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 471 - 475 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

471. பாரப்பா அடுக்குகளிற் புத்திகொள்வார் பாய்ந்துபோய்நீயங்கே தடவப்போறாய்ச்
சேரப்பா பாட்டருட மணியைவாங்கி திறமாகப் பார்ப்பமென்று  வாயில்வைத்து
காரப்பா அண்டத்திற்  புக்கிப்போனால்  கடுகவொருமணி  வாயில்வைத்துப் பாட்டர்
தூரப்பா கேதனத்தில் தேடிப்பார்த்தார் சுற்றியெங்கும் காணாமல் திகைத்திட்டாரே

விளக்கவுரை :


472. திகைத்திட்டுக் குகையில்வைத்து சீஷருக்குச் செப்பினார்  கேசரத்தில்  ஆடும்போது
பகைத்திட்ட சித்தர்கள்தான்  அநேகங்கோடி பாசிக்கும்  குளிகையைதான் கேட்பார்மக்கள்
நகைத்திட்டு அவர்கையில் ஈயவேண்டாம் நம்போலே ஏளிதயாய்ப் போகவேண்டாம்
புகைத்திட்டார்  பாட்டர்சொல்லக்கேட்டே இனியானும் போய்மக்காள் புத்திகொண்டு பிழைத்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

473. பிழைத்திட்டு குளிகைகட்டி  யோகம்பார்த்து  பேரானகாயத்தை  சுத்திபண்ணி
குழைத்திட்டு ஆத்தாளை  பூசைபண்ணிக் கூறரிய வஸ்துசுத்தி பானம்பண்ணி
அழைத்திட்டு வாசியைத்தான் அங்கென்றூணி அடுக்காறு தளத்தில்நிற்கும் அச்சமுங்கண்டு
வழைத்திட்ட சாந்திதனில்  அமுர்தத்தையுண்டு வழியோடே மனதூன்றிப் பாருபாரே

விளக்கவுரை :


474. பார்த்திடவே தங்கமொன்று உருகும்போது பரிவான சூதமொன்று காரத்தோடீய்ந்து
கார்திடவே  நாகமொன்று  கொடுத்துவாங்கிக் காணிதுக்கு சமனாககெந்திகூட்டி
ஆர்த்திடவே  தாளகமும்  சிலையும்  வீரம்  அழகாக நாலிலொன்று  கூடக்கூட்டி
மார்த்திடவே  கல்வத்தில்  இதனைவிட்டு மல்லிகையினிலைச் சாற்றில் அரைத்திடாயே

விளக்கவுரை :


475. அரைத்திடுவாய் தினமூன்று  சாறுவிட்டு அழகாகப்  பொடியாக்கிக்  குப்பிக்கேற்றி
நிரைத்திடுவாய் வாலுகையின் அடுப்பிலேற்றி நேர்பாகத்  தீயெரிப்பாய்  பனிரெண்டுசாமம்
விரைந்திடுவாய் ஆயிபதம் பூசைபண்ணி வெகுளாதே எடுத்துப்பார் அருணன்போலாம்
கரைத்திடுவாய்  ஆயிரத்துக் கொன்றேயீயக் கைகண்ட  மாற்றென்ன இருபத்தஞ்சே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar