476. அஞ்சுமே செந்தூரம் பணந்தானொன்று அனுபானம் தேனோடே மண்டலமேகொள்ளு
கெஞ்சுமே நோய்களெல்லாம்
தவிடுபொடியாகும் கொடியான காயசித்தி அருணன்போலாம்
துஞ்சுமே நரைதிரையெல்லாம் மாறும் சகமான சட்டையொன்று கக்கிப்போகும்
வஞ்சுமே கற்பாந்தகோடிகாலம் வாசியை ஐந்துதலத்தில் இருத்திப்பாரே
விளக்கவுரை :
477. இருந்திடமே சவ்வீரவைப்புகேளு எழிலான வெடியுப்பு நாலுபத்து பலந்தான்
பொருத்திடவே சீனமது அஞ்சுபத்து பலந்தான் புகழாமல்
இதுரண்டும்கல்வத்திட்டு
வருத்திடவே மேனிசார்விட்டுஆட்டு வகையாக வில்லைதட்டி உலரப்போட்டு
கரித்திடவே கவசத்தில்
இதனைப்போட்டு சக்கரமாம் பானையைத்தான் மேலேமூடே
விளக்கவுரை :
[ads-post]
478. மூடியே சீலைசெய்து அடுப்பிலேற்றி முசியாதே பீங்கானில்
கிண்ணிவைத்துச்
சாடியே தணலெறிப்பாய்
மூச்சாமம்தான் தன்னுக்குள்
வேர்வைபோலிறங்கும்பாரு
வாடியே வெளுப்பாக
இறங்கும்நீரை வகையாக ஊற்றிவிடு
மறுகாலைநீரைத்
தேடியே வீதருக்குள் அடைத்துவைத்துச் சிதறாமல் நீரையெல்லாம்
வாங்குவாங்கே
விளக்கவுரை :
479. வாங்கியே சூதமொரு பலந்தானெட்டு வகையாக மறுபீங்கான் தன்னில்வைத்து
ஓங்கியே திராவகத்தை
அதிலேவிட்டு உர்ப்பனமாய்த் தனலிட்டு உருகவைத்து
தேங்கியே மணல்போலே ஆகும்பாரு
சிறக்கவே கல்லுப்பு பலந்தானொன்று
பாங்கியே துரிசியொரு பலந்தானாறு
பக்குவமாம் பூநீருபலந்தான்
ரண்டே
விளக்கவுரை :
480. ரெண்டோடு வெடியுப்பு ஒன்றைதானப்பா
நேர்ப்பான சீனமது ஒன்றரையேயாகும்
ரண்டோடு அன்னமென்ற
பேதிதானும் கருவவே ஒருபலந்தான் கூடப்போடு
தண்டோடு சாரமது அரையேபோடு
சார்வான கல்லுப்பு துரிசுதன்னை
பண்டோடே பொடியாக
வறுத்துப்போடு பக்குவமாய் வெவ்வேறே
பொடித்துவையே
விளக்கவுரை :