481. வைத்தெல்லாம் சூதத்தில்
நன்றாய்ப்போட்டு வாகாகப்பொடிசெய்து குப்பிக்கேற்றி
பைத்ததெல்லாம் அரைவாசிதானே போட்டுப் பக்குவமாய் வாலுகையில்
மேலேயேற்றி
கைத்தல்லோ தீபோட்டுக் கமலம்போல நாலுநாள்
மூச்சாமம் ஆறவிட்டுப்போடு
கைத்தல்லோ பனிரண்டுசாமமானால் கனமான தங்கம்போலிருக்கும்
தானே
விளக்கவுரை :
482. தானென்ற சவ்வீரப்பொடிதான் சேரை சமர்த்தான கல்லுப்பு
ஒன்றுக்கு முக்கால்
மானென்ற சவ்வீரம் பொடியாக்குப்பாதி மகத்தான மூரில்யென்ற பலந்தானப்பா
தானென்ற துரிசுக்குப்பாதிப்
பூநீரு கனமான நீருக்குச் சீனம் முக்கால்
வேனென்ற வெடியுப்பும்
அப்படியேயாகும் வெடியுப்பு மூன்றிலொன்று
சாரஞ்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
483. சேர்க்கவே அன்னமென்றபேதி தானும்சிறந்த
பூநீருக்குப்பாதியப்பா
ஆர்க்கவே பொடிசெய்து குப்பிக்கேற்றி அரைவாசி
வாலுகையில் மேலேவைத்து
ஏர்க்கவே தீயிடுவாய் கமலம்போல இதமான நாலுமுச்சாமமப்பா
பார்க்கவே ஆறவிட்டு எரித்தாயானால் பருவமாய்
பனிரண்டு சாமம்தானே
விளக்கவுரை :
484. தானென்ற மும்முறைதான் இப்படியே செய்தால் சமர்த்தான
கொச்சியென்ற பேருமாச்சு
தானென்ற பரங்கிவைத்தான் மாயிசொல்ல கனமான வீரத்தால்
வாதமாச்சு
வேனென்ற வீரத்தைச் சுன்னம்செய்தால் வெகுளாமல்
தங்கமது பூப்போலாகும்
தேனென்ற சரக்கெல்லாம்
சுண்ணாம்பாகும்
சிறுபிள்ளையாடுமிந்த வாதந்தானே
விளக்கவுரை :
485. வாதத்துக்கு ஆதியென்ற
வீரப்போக்கை மரைத்தாரே நாதாக்கள்
ரிஷிகள்சித்தர்
வேதத்தின் முடிவுபோல் ஒளிப்புமெத்த
வெட்டவெளியாச்சுதென்றார் லோகமெல்லாம்
போதத்தின்
பஞ்சகர்த்தாள் சிருட்டிபோகும் பொன்மயமாயுலகமெல்லாம் போகுமென்று
நீதத்தல் சொன்னவராருமில்லை நேர்ப்பாக எந்நூலில் சொன்னேன்
காணே
விளக்கவுரை :