போகர் சப்தகாண்டம் 486 - 490 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 486 - 490 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

486. சொன்னதினால்  சித்தரென்னப்  பகையுமாச்சு  தோற்றாத கருவெல்லாம்
வெட்டவெளியாகப் பன்னதினால் பலனென்று விரித்துச்சொன்னேன் பரத்துக்கேவுப்பென்று
மனதிலெண்ணி தன்னதினால்  மன்னதினால்  நூல்கொடுத்தோன் நரகமெய்தி 
மாண்டிறந்து கடைநரகில் வீழ்வான் காணே

விளக்கவுரை :


487. காணவே  நிர்மூடவாவாதிகட்கு  கைகொடுக்கில்   இந்நூலில் கருவையுண்ணி
பூணவே  பார்த்தலைந்து ஏமம்கண்டு புளாகித்து மெய்மறந்து பெண்ணைக்கண்டு
ஆணவே  தனையீய்ந்து கற்பழிந்து அழும்பாக்கிக் குடிகெடுத்து  ஆசைபூட்டி
ஊணவே காமநோய் கொண்டுயேங்கி உலகத்து நடத்தைத் தப்பியவன்தானே

விளக்கவுரை :

[ads-post]

488. தானான ஞானிக்கு  இந்நூல்  எய்தில்  சண்டாளப்  பாசத்தை  அறுத்துத்தள்ளி
ஊணான காயத்தைச்சுத்திப்பண்ணி  ஊரூரு தலங்களெல்லாம்  சோதித்துப்பார்த்து
பானான நிராதாரத்துக்குள்ளே சொக்கிப் பரத்துக்கு அடுக்கநின்று பானம்பண்ணி
ஆனான அன்னமரை தண்ணீர்கால்  மருந்தியே ஒருபொழுது இருப்பார்தானே 

விளக்கவுரை :


489. இருந்திட்ட  கருவெல்லாம் எண்ணிப்பார்த்து  எளிதாகத் தொழில்செய்து ஏமம்கண்டு
திருந்திட்ட சிவனுடைய சொத்திதுவென்று  செலவுசெய்யார்  கனமான கர்மத்துக்கும்
பொருந்திட்ட மாத்திரையே எடுத்துவித்து பூசைதிரவியத்துக்கும் கற்பத்துக்கும்
அருந்திட்டும்  ஒன்றும் அறியாதார்போல வசையற்று  இருப்பார்கள்  ஞானிதானே 

விளக்கவுரை :


490. ஞானிக்கு  வறுமைவந்தால்  சகலசித்தும்  பொய்யாம்  நாட்டிலுள்ள மனிதரெல்லாம் நகைப்பாரென்று
ஞானிக்குப் பசிவந்தால்  மனமலையுமென்று நலமானகாயசித்தி  போகுமென்று
ஞானிக்கு  விகடம் வரலாகாதென்று  நாதாக்கள்  சொல்லாத கருவைச்சொன்னேன்
ஞானிக்கு சொன்னதால் குருவுக்காச்சு நலமான சவ்வீர  வைப்புகேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar