போகர் சப்தகாண்டம் 311 - 315 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

311. ரேசித்து இப்படிதான் அங்கென்று கும்பி நில்லாமல் இதுரண்டும் தீர்ந்தபின்பு
ஆசித்து அகாரமுதல் உகாரங்கூட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்தேக்கு
மாசற்ற மவுனந்தான் குவிந்தபின்பு மருவியதோர் மூலத்தை விட்டுநீயும்
காகித்து கண்டத்தே நின்று ஊது காலடங்கி வந்தபின்பு மூலம்பாரே

விளக்கவுரை :


312. பார்த்துமே அறிவோடே மவுனம்பூரி பரிவாகப் பூரணத்தை அதுக்குள் கும்பி
நீர்த்துமே முனையோடே ரேசகத்தைப்பண்ணு நிற்பிசமாம் பிரமமென்ற பிராணயாமம்
பூர்த்துமே பிரபஞ்சமென்ற ஆசைவிட்டு பின்னொன்று மனதுள்ளே சங்கியாமல்
ஆர்த்துமே அந்தமென்ற காரணமுமாகி அந்தமென்ற மார்க்கத்தில் ஆடிக்காணே

விளக்கவுரை :

[ads-post]

313. ஆடியே ஆசனத்தை விரித்துச் சொல்வேன் அதிகமாஞ்சோஸ்திதத்தை அறியக்கேளு
மூடியே முழங்காலால் குளச்சில்ரண்டில் முனிந்தாக்கால் ரண்டும்வைக்கச் சொல்லதிகமாச்சு
சூடியே சிங்காசனத்தைக்கேளு சறந்தையோ வேட்டிதனைப் போட்டுக்கொண்டு
நூடிகய முழங்கால்கள் நீட்டி நுனிமூக்கைப் பார்த்திருப்பார் நிசமாங்காணே

விளக்கவுரை :


314. நிசமான பத்திராசனத்தைக் கேளு நேராக உட்கார்ந்து காலைரண்டும்  
துசமான பிறகாலே கையால்கட்டி சுகமுற்று இருக்கையில் ஆசனமுமாச்சு
நிசமான மூத்தயாசனத்தைக்கேளு முனிந்துமே காட்டோடு காடுபோட்டு
குசமான குத்துக்குள் குதிரைவைத்து கூசாமல் இருப்பதிந்தக் கொள்கைதானே

விளக்கவுரை :


315. கொள்கையாம் பூரயாசனத்தைக் கேளு குறிபெறவே ரெண்டுகையும் தலையிலூனி
கிள்கையாம் முழங்கையைத் தொப்புளிலே வைத்து கலந்துதடிபோலக் கவருவார்கள்
தூள்கையாம் சுகமுற்ற யாசனத்தைக்கேளு சுகமாக வேண்டியதோர் படியிருப்பு
உள்கையாம் எண்பதுக்கும் பருவம்சொன்னேன் உரைந்துமினி பிராணயாமம் உரைக்கக்கேளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 306 - 310 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

306. எண்ணவே எண்ணியந்த மதியாறில் வந்தால் இயல்பாக அழிசகத்தில் இருந்துகொண்டு
திண்ணதே மனதொன்றில் வேதாந்தம்பார்த்து சீராக நிற்கிறதே லட்சையாகும்
வெண்ணவே வேதாந்த பிரமந்தன்னில் விரைந்துநின்று பூரணத்தை தினம்தான்நோக்க
வண்ணவே கோழைவிட்டு தெளிவுவந்து வளப்பமுற்றால் மதியென்று சொல்லலாமே

விளக்கவுரை :


307. சொல்லவே நான்பிரமமென்று ஆசான் சுருதிகுரு உபதேசப்படியேநின்று
வெல்லவே மேதாந்தப் பொருளென்றெண்ணி மிகுதியாசைதன்னை தள்ளிவிட்டால்
மல்லவே மனமொத்தால் சிவமிதாச்சு மற்றதெல்லாம் சிவமல்ல மாயங்காணும்
வல்லவே மவுசத்தை ஐம்பொறியின் வழியில் மருவாமல் நிறுத்தினால் மாயம்போமே

விளக்கவுரை :

[ads-post]

308. மாயாமல் நான்பிரமமென்றே எண்ணி மனதொத்து நிரந்தரமும் வேதாந்தம்பார்த்து
பேயாமல் எந்தெந்த காரியங்கள் வந்தும் புகழாக துக்கமுடன் சுகந்தான்வந்தும்
காயாமல் குருசொன்ன காரியத்தின் வழியைக் கைமுறையாய் நிற்பதுவே விரதமாச்சு
நேயாமல் ஏமமென்ற பத்துஞ்சொன்னேன் நேராக இருபதையும் அனுஷ்டித்தேறே

விளக்கவுரை :


309. ஏறியிந்த இருபதையும் அனுஷ்டித்தாக்கால் ஏற்றமாம் மனத்திடம் இல்லாவிட்டால்
தேறியிந்தச் சுவரில்லாச் சித்திரம் போலாகும் சிறந்த சீவரடிப்படைதான் வைக்குமுன்னே
சூரியிந்த குளிகை யவயத்து மொக்கு துப்புரவாய்க் காயசித்தி பண்ணுமுன்னே
ஊறியிந்த சதுரகத்தைக் கண்டதொக்கு முண்மையிருபதும் அனுஷ்டித்தால் அறிவுண்டாமே

விளக்கவுரை :


310. அறிவுண்டாம் சதுர்யுகத்தோடே மூர்த்தியைக்காணா அப்பனே அஷ்டாங்கம் அறிந்துயுண்ணு
தறிவுண்டாச்சு கசாதனமாயிருந்துகொண்டே தனித்ததோர் மூலத்தில் வங்கென்றுபூரிக்
குறியுண்டாய் கும்பித்து மாத்தீயையேற்றி கூராகசிகாரத்தால் முடியுண்டாக்கி
நெறியுண்டாய் மூன்றுமுறை மாறினாக்கால் நேராகக் கும்பகமே ரேசிப்பாயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 301 - 305 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

301. ஆச்சுதே பிரமாதி லோகத்துள்ளே அழுத்திநின்ற காமிபத்தை நாகம்போலெண்ணி
துச்சுதே வெறுப்புவந்து சொற்பனம்போலாச்சு துக்கமிது என்றுசொல்லி மனதுதேறி
தாச்சதே பொருளான சச்சிதானந்தத் தடையற்று தெளிந்துநின்று தானேதான் ஆனால்
போச்சுதே ஆனந்த வடிவுமாகி போதமாயிருக்கில் சந்தோஷந்தானே

விளக்கவுரை :


302. தானான ஆகமபுராணந்தன்னை தணிவாக எல்லோர்க்கும் வெளியிலிட்டு
வேனான வேதாந்த பிரமசாரம் விளங்குகிற கருச்சொல்லும் பூரணமென்றெண்ணி
ஆனானது அறிந்துகொண்டார் ஆத்திமம் ஆச்சு பரியதாய்க் குருவுரைத்த உபதேசத்தைக
கானானாறிந்து பொருள்மூத்தனாகக் கருதியதோர் ரத்தமெல்லாம் குருவுக்கீயே

விளக்கவுரை :

[ads-post]

303. ஈய்ந்துபார் பரம்நோக்கத் தானமாகும் இருக்கிறதோர் தன்தேக சுகபோகமெல்லாம்
ஆய்ந்துபார் செய்துந்தனக்கு வந்தாப்போலே அனேகசெந்து பொதித்ததெல்லாம் நாமென்று திருத்தி
நயந்துபார் ஒருமித்தால் ஈசருக்கும் பூசைநலமாக ஆச்சுதென்று அறிந்துகொள்ளு
தோய்ந்துபார் இப்படிதாந் திருத்தியானால் தீர்க்கமாம் சிவபூஜை யென்றுகாணே

விளக்கவுரை :


304. காணவே சாஸ்திரங்கள் எல்லாம்விட்டு கலந்தாடு விர்த்தியெல்லாம் அடித்துத்தள்ளி
தாணவே தன்னிழல்போல் குருவினுட்பின்னே சச்சிதானந்த வெள்ளந்தானென்றெண்ணி
தோணவே தெளிவிக்கும் வஸ்துக்குள்ளே தோற்றியே சோதித்து மனந்தானென்றால்
ஆனவே தெளிவித்து முபஷத்துவென்று அறிவிக்கும் பூரணமே சிரவணமுமாமே

விளக்கவுரை :


305. அறிவிக்குமாம் காரவியாபாரத்தால் ஆதாயம் மிகுதியாய் அகப்பட்டாலும்
பொரிவித்தும் அதின்மேலே யபேட்சைவிட்டு பொறிதானும் புலன்வழியே போக்குண்டாக்கி
அறிவிக்கும் கேட்டிருந்த ஞானமெல்லாம் கெடியாக நிலைகுலைந்து உலகத்தேசிக்கி
வறிவிக்கும் வாசனையாம் பெண்டிர்பிள்ளை வாருகின்ற பாசமெல்லாம் லட்சமெண்ணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 296 - 300 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

296. கேளப்பா வேதாந்த சாஸ்திரமே செம்மை கேள்வியுற்ற சமயமெல்லாம் பொய்யென்றுதள்ளி
தேனப்பா திடப்பட்டால் ஆட்சேபமாகும் ஜெயமான சத்துருவும் வியாதிபீடை என்பார்
மீளப்பா நிரஞ்சனமும் சீதளமுமாகும் இஷ்டான துக்கவபிமானம் வந்து
ஏளப்பா சொற்பனம் போலென்றெண்ணி ஏங்காமல் சேருவது சமயமென்பாரே

விளக்கவுரை :


297. என்பார்கள் வேதாந்தத்துள்ளே முத்தியொடு குறியாம் சாஸ்திரத்தில் முத்தியில்லை
என்பார்கள் அதினாலே சொன்னபொருளென்ன வேறில்லை நாமதுதான் என்பதல்லோ
உன்பார்கள் காரியத்தில் மனத்திற்கோனை புருகாமலிருப்பதே திருப்தியென்பார்
இன்பார்கள் வேதாந்தத்தாலே முத்தி இதைவிட்டால் மற்றொன்றுமில்லைதானே

விளக்கவுரை :

[ads-post]

298. இல்லையே பூரணந்தான் நாமென்றெண்ணி ஏகநித்தம் மறவாமல் இருந்தானாகில்
கொல்லையே நம்மிடத்தில் வந்ததொன்றுமில்லை கூடிநின்றால் இதுவே ஆகாரம் என்றுமாகும்
வெல்லையே நிற்குணம் வேறொன்றில்லை இருதாவாய் ஆகாரந்தன்னைச் சுக்கி
கல்லையே துருத்திகையும் ஜலத்தினாலே தனித்துநின்ற ஆசனந்தான் சவுசமாச்சே

விளக்கவுரை :


299. சவுசமாம் வேதாந்த சாரத்தாலே சுகமென்ற துரியமதில் தானே நின்று
நிவுசமாஞ் சொற்பனத்தில் அவத்தைகளைக் கண்டுநெருங்கிநின்று போனதில்லை வந்ததில்லையென்று
வெவுசமாம் வேதாந்த குருமுகத்தில் விரைந்துகொண்டு காலம்வந்து சேர்ந்துதானால்
துவுசமாய் இருப்பதுவே சவுசமாகும் துரிதமாம் ஏமமென்ற பத்துமாச்சே

விளக்கவுரை :


300. பத்தான ஏமத்தைப் பகரக்கேளு பாங்கான சத்தியமென்ன மித்தையென்ன
நத்தான நானேது நானென்றதாரு நமக்குத்தான் மகக்துவந்த பேதமேது
சத்தான சோத்தியங்காண் அதுவாலாச்சு சுருதியாம் வேதாந்தத்தாலே பார்த்து
நித்தான நிரந்தயமும் ஆலோசித்து நீங்காட்டால் பொல்லாங்கைத் தவசுமாச்சே

விளக்கவுரை :


Powered by Blogger.