போகர் சப்தகாண்டம் 296 - 300 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 296 - 300 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

296. கேளப்பா வேதாந்த சாஸ்திரமே செம்மை கேள்வியுற்ற சமயமெல்லாம் பொய்யென்றுதள்ளி
தேனப்பா திடப்பட்டால் ஆட்சேபமாகும் ஜெயமான சத்துருவும் வியாதிபீடை என்பார்
மீளப்பா நிரஞ்சனமும் சீதளமுமாகும் இஷ்டான துக்கவபிமானம் வந்து
ஏளப்பா சொற்பனம் போலென்றெண்ணி ஏங்காமல் சேருவது சமயமென்பாரே

விளக்கவுரை :


297. என்பார்கள் வேதாந்தத்துள்ளே முத்தியொடு குறியாம் சாஸ்திரத்தில் முத்தியில்லை
என்பார்கள் அதினாலே சொன்னபொருளென்ன வேறில்லை நாமதுதான் என்பதல்லோ
உன்பார்கள் காரியத்தில் மனத்திற்கோனை புருகாமலிருப்பதே திருப்தியென்பார்
இன்பார்கள் வேதாந்தத்தாலே முத்தி இதைவிட்டால் மற்றொன்றுமில்லைதானே

விளக்கவுரை :

[ads-post]

298. இல்லையே பூரணந்தான் நாமென்றெண்ணி ஏகநித்தம் மறவாமல் இருந்தானாகில்
கொல்லையே நம்மிடத்தில் வந்ததொன்றுமில்லை கூடிநின்றால் இதுவே ஆகாரம் என்றுமாகும்
வெல்லையே நிற்குணம் வேறொன்றில்லை இருதாவாய் ஆகாரந்தன்னைச் சுக்கி
கல்லையே துருத்திகையும் ஜலத்தினாலே தனித்துநின்ற ஆசனந்தான் சவுசமாச்சே

விளக்கவுரை :


299. சவுசமாம் வேதாந்த சாரத்தாலே சுகமென்ற துரியமதில் தானே நின்று
நிவுசமாஞ் சொற்பனத்தில் அவத்தைகளைக் கண்டுநெருங்கிநின்று போனதில்லை வந்ததில்லையென்று
வெவுசமாம் வேதாந்த குருமுகத்தில் விரைந்துகொண்டு காலம்வந்து சேர்ந்துதானால்
துவுசமாய் இருப்பதுவே சவுசமாகும் துரிதமாம் ஏமமென்ற பத்துமாச்சே

விளக்கவுரை :


300. பத்தான ஏமத்தைப் பகரக்கேளு பாங்கான சத்தியமென்ன மித்தையென்ன
நத்தான நானேது நானென்றதாரு நமக்குத்தான் மகக்துவந்த பேதமேது
சத்தான சோத்தியங்காண் அதுவாலாச்சு சுருதியாம் வேதாந்தத்தாலே பார்த்து
நித்தான நிரந்தயமும் ஆலோசித்து நீங்காட்டால் பொல்லாங்கைத் தவசுமாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar