போகர் சப்தகாண்டம் 491 - 495 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

491. கேளப்பா  வெடியுப்பு பலமேநூறு கெடியான சீனமது நூற்றுப்பத்து
வாளப்பா சவுட்டுப்பு  இருபத்தைந்து மருவியதோர் துரிசியது  முப்பதாகும்
நாளப்பா நவாச்சாரம்  பலமும்பத்து நண்பான சத்தியென்ற  சாரமாச்சு
காளப்பா கல்லுப்புப்  பலமும் அஞ்சு கடிசாகக்  கல்வத்தில்  பொடியாய்ப்பண்ணே

விளக்கவுரை :


492. பொடிபண்ணி பிரண்டைசார் தன்னினாலே பூணியரைத்து ஏழுநாள் பில்லைசெய்து
கெடிபண்ணி  ரவிதனிலே உலரப்போட்டு கெட்டியாம்  பாண்டத்தில் அரைவாசியிட்டு
தடிபண்ணிச்  சக்கரமாம்  பானைதன்னை சாங்கமாய்  மூடியெல்லாம்  சீலைமண்செய்து
துடிபண்ணி அடுப்பேற்றி தீயைமூட்டித்  துப்புரவாய்த் தீநீரை வாங்குவாங்கே

விளக்கவுரை :

[ads-post]

493. நீரிலே வெள்ளைநீர்  தனையகற்றி நேர்பான சிவந்தநீர்  தன்னைவாங்கிச்
சீரிலே யரக்கான தய்யர்தன்னில் சிறப்பாக  அடைத்துவைத்து சேதிகேளு
தூரிலே சூதமது பலந்தான்பத்து சூஷாதி கல்லுப்பு அஞ்சுமாகும்
ஊரிலே  துரிசியது ரண்டரையே பலந்தான் முற்பனமாம் வெடியுப்பு ரண்டுபலமுமாமே

விளக்கவுரை :


494. ஆமப்பா சீனமது  ரண்டுபலமாகும் அன்னமென்ற  பேதியது பலமுமிரண்டு
ஓமம்பா  சாரமது பலமும்ரண்டு உறுதியாம்  பூநீரு பலமும்ரண்டு
காமப்பா  லிங்கமது பலமுமெட்டுக் கம்பிரசகர்ப்பூர பலமுமெட்டு
காமப்பா   வெள்ளையது பலமேயொன்று  நற்கெவுரிமனோசிலையும் பலமுமொன்றுபோடே

விளக்கவுரை :


495. போடவே பலமொன்று கெந்திதானும் புகழான சூடனது பலமுமொன்று
வாடவே தொட்டியொடு அப்புரக நிமிளை வர்த்தமொடு வைகிருந்து தமர்காந்தலோகம்
தேடவே கற்காதி சாத்திரவேதி சிறப்பான சிங்கியொடு குதிரைப்பல்லு
நீடவே அஞ்சனக்கல் துத்தத்தோடு கெடிதான சலாசித்துக் கல்நார்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 486 - 490 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

486. சொன்னதினால்  சித்தரென்னப்  பகையுமாச்சு  தோற்றாத கருவெல்லாம்
வெட்டவெளியாகப் பன்னதினால் பலனென்று விரித்துச்சொன்னேன் பரத்துக்கேவுப்பென்று
மனதிலெண்ணி தன்னதினால்  மன்னதினால்  நூல்கொடுத்தோன் நரகமெய்தி 
மாண்டிறந்து கடைநரகில் வீழ்வான் காணே

விளக்கவுரை :


487. காணவே  நிர்மூடவாவாதிகட்கு  கைகொடுக்கில்   இந்நூலில் கருவையுண்ணி
பூணவே  பார்த்தலைந்து ஏமம்கண்டு புளாகித்து மெய்மறந்து பெண்ணைக்கண்டு
ஆணவே  தனையீய்ந்து கற்பழிந்து அழும்பாக்கிக் குடிகெடுத்து  ஆசைபூட்டி
ஊணவே காமநோய் கொண்டுயேங்கி உலகத்து நடத்தைத் தப்பியவன்தானே

விளக்கவுரை :

[ads-post]

488. தானான ஞானிக்கு  இந்நூல்  எய்தில்  சண்டாளப்  பாசத்தை  அறுத்துத்தள்ளி
ஊணான காயத்தைச்சுத்திப்பண்ணி  ஊரூரு தலங்களெல்லாம்  சோதித்துப்பார்த்து
பானான நிராதாரத்துக்குள்ளே சொக்கிப் பரத்துக்கு அடுக்கநின்று பானம்பண்ணி
ஆனான அன்னமரை தண்ணீர்கால்  மருந்தியே ஒருபொழுது இருப்பார்தானே 

விளக்கவுரை :


489. இருந்திட்ட  கருவெல்லாம் எண்ணிப்பார்த்து  எளிதாகத் தொழில்செய்து ஏமம்கண்டு
திருந்திட்ட சிவனுடைய சொத்திதுவென்று  செலவுசெய்யார்  கனமான கர்மத்துக்கும்
பொருந்திட்ட மாத்திரையே எடுத்துவித்து பூசைதிரவியத்துக்கும் கற்பத்துக்கும்
அருந்திட்டும்  ஒன்றும் அறியாதார்போல வசையற்று  இருப்பார்கள்  ஞானிதானே 

விளக்கவுரை :


490. ஞானிக்கு  வறுமைவந்தால்  சகலசித்தும்  பொய்யாம்  நாட்டிலுள்ள மனிதரெல்லாம் நகைப்பாரென்று
ஞானிக்குப் பசிவந்தால்  மனமலையுமென்று நலமானகாயசித்தி  போகுமென்று
ஞானிக்கு  விகடம் வரலாகாதென்று  நாதாக்கள்  சொல்லாத கருவைச்சொன்னேன்
ஞானிக்கு சொன்னதால் குருவுக்காச்சு நலமான சவ்வீர  வைப்புகேளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 481 - 485 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
481. வைத்தெல்லாம் சூதத்தில் நன்றாய்ப்போட்டு வாகாகப்பொடிசெய்து குப்பிக்கேற்றி
பைத்ததெல்லாம்  அரைவாசிதானே போட்டுப் பக்குவமாய் வாலுகையில் மேலேயேற்றி
கைத்தல்லோ  தீபோட்டுக் கமலம்போல  நாலுநாள்  மூச்சாமம்  ஆறவிட்டுப்போடு
கைத்தல்லோ  பனிரண்டுசாமமானால் கனமான தங்கம்போலிருக்கும் தானே

விளக்கவுரை :


482. தானென்ற  சவ்வீரப்பொடிதான் சேரை சமர்த்தான கல்லுப்பு ஒன்றுக்கு முக்கால்
மானென்ற சவ்வீரம்  பொடியாக்குப்பாதி மகத்தான மூரில்யென்ற  பலந்தானப்பா
தானென்ற துரிசுக்குப்பாதிப் பூநீரு கனமான நீருக்குச் சீனம் முக்கால்  
வேனென்ற  வெடியுப்பும்  அப்படியேயாகும்  வெடியுப்பு  மூன்றிலொன்று  சாரஞ்செய்யே

விளக்கவுரை :

[ads-post]

483. சேர்க்கவே  அன்னமென்றபேதி தானும்சிறந்த பூநீருக்குப்பாதியப்பா
ஆர்க்கவே  பொடிசெய்து குப்பிக்கேற்றி  அரைவாசி  வாலுகையில்  மேலேவைத்து
ஏர்க்கவே  தீயிடுவாய் கமலம்போல இதமான  நாலுமுச்சாமமப்பா
பார்க்கவே  ஆறவிட்டு எரித்தாயானால்  பருவமாய்  பனிரண்டு சாமம்தானே

விளக்கவுரை :


484. தானென்ற  மும்முறைதான் இப்படியே செய்தால் சமர்த்தான கொச்சியென்ற பேருமாச்சு
தானென்ற  பரங்கிவைத்தான் மாயிசொல்ல கனமான வீரத்தால் வாதமாச்சு  
வேனென்ற  வீரத்தைச் சுன்னம்செய்தால்  வெகுளாமல்  தங்கமது பூப்போலாகும்
தேனென்ற  சரக்கெல்லாம்  சுண்ணாம்பாகும்  சிறுபிள்ளையாடுமிந்த வாதந்தானே

விளக்கவுரை :


485. வாதத்துக்கு  ஆதியென்ற  வீரப்போக்கை  மரைத்தாரே  நாதாக்கள்  ரிஷிகள்சித்தர்
வேதத்தின் முடிவுபோல் ஒளிப்புமெத்த வெட்டவெளியாச்சுதென்றார் லோகமெல்லாம்
போதத்தின் பஞ்சகர்த்தாள்  சிருட்டிபோகும்  பொன்மயமாயுலகமெல்லாம்  போகுமென்று
நீதத்தல்  சொன்னவராருமில்லை நேர்ப்பாக எந்நூலில் சொன்னேன் காணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 476 - 480 of 7000 பாடல்கள்


bogar-saptha-kaandam

476. அஞ்சுமே  செந்தூரம்  பணந்தானொன்று  அனுபானம்  தேனோடே மண்டலமேகொள்ளு
கெஞ்சுமே  நோய்களெல்லாம்  தவிடுபொடியாகும்  கொடியான காயசித்தி அருணன்போலாம்
துஞ்சுமே  நரைதிரையெல்லாம்  மாறும் சகமான சட்டையொன்று கக்கிப்போகும்
வஞ்சுமே  கற்பாந்தகோடிகாலம்  வாசியை ஐந்துதலத்தில்  இருத்திப்பாரே

விளக்கவுரை :


477. இருந்திடமே  சவ்வீரவைப்புகேளு  எழிலான வெடியுப்பு நாலுபத்து பலந்தான்
பொருத்திடவே  சீனமது அஞ்சுபத்து பலந்தான் புகழாமல் இதுரண்டும்கல்வத்திட்டு
வருத்திடவே  மேனிசார்விட்டுஆட்டு வகையாக வில்லைதட்டி  உலரப்போட்டு
கரித்திடவே  கவசத்தில்  இதனைப்போட்டு சக்கரமாம் பானையைத்தான் மேலேமூடே

விளக்கவுரை :

[ads-post]

478. மூடியே  சீலைசெய்து அடுப்பிலேற்றி முசியாதே பீங்கானில் கிண்ணிவைத்துச்
சாடியே தணலெறிப்பாய் மூச்சாமம்தான் தன்னுக்குள்  வேர்வைபோலிறங்கும்பாரு
வாடியே வெளுப்பாக இறங்கும்நீரை  வகையாக ஊற்றிவிடு மறுகாலைநீரைத்
தேடியே வீதருக்குள்  அடைத்துவைத்துச் சிதறாமல் நீரையெல்லாம் வாங்குவாங்கே

விளக்கவுரை :


479. வாங்கியே சூதமொரு பலந்தானெட்டு வகையாக மறுபீங்கான் தன்னில்வைத்து
ஓங்கியே திராவகத்தை அதிலேவிட்டு உர்ப்பனமாய்த் தனலிட்டு உருகவைத்து
தேங்கியே மணல்போலே ஆகும்பாரு சிறக்கவே கல்லுப்பு பலந்தானொன்று
பாங்கியே துரிசியொரு  பலந்தானாறு  பக்குவமாம்  பூநீருபலந்தான் ரண்டே  

விளக்கவுரை :


480. ரெண்டோடு வெடியுப்பு  ஒன்றைதானப்பா  நேர்ப்பான சீனமது ஒன்றரையேயாகும்
ரண்டோடு அன்னமென்ற பேதிதானும் கருவவே ஒருபலந்தான் கூடப்போடு
தண்டோடு சாரமது அரையேபோடு சார்வான கல்லுப்பு துரிசுதன்னை
பண்டோடே பொடியாக வறுத்துப்போடு பக்குவமாய்  வெவ்வேறே பொடித்துவையே

விளக்கவுரை :


Powered by Blogger.