போகர் சப்தகாண்டம் 546 - 550 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
546. தானென்ற நாற்சாமம் எரித்துப்போடு சாதகமாய் ராக்காலம் ஆறப்போடு
கானென்ற மூன்றுநாள் ஆனபின்பு கடுங்குப்பி எடுத்துடைத்தால் தேங்காய்போலத்
தேனென்ற சிறுதிடத்தில் சிவந்துகாணும் திரும்பவதைக் கல்வத்தில் பொடியாய்பண்ணி
வானென்ற திராவகத்தை விட்டுஆட்டு மறுப்பீங்கான் தனிலிட்டுத் திராவகத்தைக் குத்தே

விளக்கவுரை :


547. குத்தியே நாள்மூன்று ரவியில்போடு குவிந்தபின்பு தணலுக்குள் வறுத்துப்போடு
எத்தியே பொடியாக்கி மேருக்கேற்றி விதமான வானுகையில் தீயைமூட்டு
பத்தியே கமலம்போல் எரிப்பாயப்பா பனிரண்டு சாமமுந்தான் கடந்தபின்பு
தத்தியே குப்பியைத்தானுடைத்துப்போடு தணலில் நிற்கும் தங்கமதை எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

548. கொள்ளவே முன்போல திராவகத்தாலாட்டு குவிந்தபின்பு நீர்குத்தி தவியிற்போடு
அன்னவே தணலுக்குள் வறுத்துப்போடு அதிமாம் காசிபென்ற மேருக்கேற்றி
தன்னவே வானுகையில் தீயைமூட்டித் தனையெடுத்து முன்போலப் பாவனைசெய்து
துன்னவே ஏழுதரம் தீர்ந்தாயானால் சூரியன்போல் வந்திருக்கும் சாரம்தானே

விளக்கவுரை :


549. சாரந்தான் பலம்பத்து நிறுத்துக்கொண்டு சமர்த்தாகச் சூதமது பலமும்பத்து
வாரந்தான் தங்கமது ரண்டரையேபலந்தான் மருவிநன்றாய்லேசாய்க் கல்வத்திட்டு
தீரந்தான் எலுமிச்சம் பழச்சார்விட்டுதிரளவகை மூன்றுநாள் பொடியாய்பண்ணி
காரந்தான் காசிபென்ற மேருக்கேற்றி கனமான வானுகையில் வைத்திடாயே  

விளக்கவுரை :


550. வைத்துமே பனிரண்டுசாமம் தீயை மறவாமல் போட்டுவர தீபம்போல
மைத்துமே மாதளம்பூ போலேயாகும் மைந்தனே வேறொன்று குப்பிக்கேற்றி
வைத்து மண்சீலையினால் காற்றொடாமல் நலமாகக் கட்டிவைத்து ஆயிரத்துக்கொன்று
தைத்துமே காசிடைதான் கொடுப்பாயானால் தங்கமது பதினாறு மாற்றுமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 541 - 545 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

541. தங்கமாம் குருபட்டால் சூதங்கட்டும் சாவென்ற பேர்போச்சு தேகத்துக்கு
பங்கமாம் சரக்குகளில் போட்டுப்போட பதைத்தங்கே கட்டிப்போம் தூரவோடும்
கெங்கையாம் சாறுவாரத் தழைகளெல்லாம் கெடியாகப் பிசைந்தழுத்தி பிழியத்தண்ணீர்
கங்கையாம் உட்கொள்ளக் காயசித்தியாகி சதகோடியுகம்வரைக்கும் அழியாதெண்ணே

விளக்கவுரை :


542. எண்ணவே சிவப்பான யெவாச்சாரத்தை இயமாகக் கேளுங்கள் மாணாக்காளே
பண்ணவே வெடியுப்பு ரண்டுபத்து பலந்தான் பருவமுடன் சீனமது இருபத்தைந்து
கண்ணவே ரண்டையுந்தான் கல்வத்திட்டு காரமாம் நாயுருவிச் சாற்றாலாட்டி
தெண்ணவே தெல்லுபோல் பில்லைதட்டி திறமான ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :

[ads-post]

543. போடவே தினமூன்ற காயகாயப் பொருக்கான பின்பெடுத்து கலையத்திட்டு
ஆடவே சக்கரமாம் பானைமேலே அனைத்தாப்போல் வைத்திட்டு மாசிமண்பூசி
நீடவே அடுப்பில்வைத்து தீயைமூட்டு நினைவாக வெள்ளைநீர் வருகும்பாரு
வாடவே சிவந்தநீர் பன்வருகுமுக்கால் மகத்தான பீங்கானில் எடுத்துவையே

விளக்கவுரை :


544. வைக்கவே அரக்காலே குப்பிபண்ணி வருகிறதோர் திராவகத்தை அதிலேவாரு
கைக்கவே வெள்ளைதன்னை வீசிப்போடு நவாச்சாரம் ஒருசேரை கல்வத்திட்டு
ஐயிக்கமே திராவகத்தாலாட்டு ஆட்டுஅது சாகமாட்டியபின் வழித்தெடுத்து  
பைக்கவே பரும்பீங்கான் தன்னில்வைத்தும் பருவமாய்த் திராவகத்தை வாங்கிக்குத்தே

விளக்கவுரை :


545. குத்தியே ரவியில்வைத்து மூன்றுநாள்தான் குறிப்பாகத் தணல்மேலே பீங்கான்வைத்துப்
பத்தியே பொடிபொடிபோல் வறுத்துக்கொண்டு பருவமாய் காசிபென்ற மேருக்கேற்றி
அத்தியே அரைமாசிமட்டும் போடு அனிகான வானுகையில் மேலேவைத்து
எத்தியே தீப்போடு கமலம்போல இதமாக பனிரண்டு சாமம்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 536 - 540 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

536. போட்டுடனே மெழுகாகும் எடுத்துமக்காள் பேரான காரீயம் பலந்தானொன்றில்
நீட்டுடனே சரியிடையாய் மெழுகிலீய நேர்ப்பாக வாங்கியது தூளாய்ப்போகும்
மாட்டுடனே ஈயத்தில் தங்கமீய்ந்தால் மலிந்துதங்கம் நொருங்கியே தூளாய்ப்போகும்
ஆட்டுடனே இதற்குநேர் சூதங்காட்டி யரைத்துமுந்நீர் தன்னாலே பில்லைகட்டே

விளக்கவுரை :


537. கட்டியே அயச்செம்புக்குள்ளேவைத்து கெமான பத்தெருவில் புடத்தைப்போடு
உட்டியே குருவாகும் நூற்றுக்கொன்றீய ஓடியே பத்தரைதான் உயர்த்திமெத்த
தூட்டியே அம்மெழுகு சூதம்கட்டும் துலையாத சரக்கெல்லாம் கொல்லும் கொல்லும்
எட்டியே வெகுதூரம் ஓடுமோடும் எடுக்கெடுக்கத் துலையாத ஊற்றுமாமே

விளக்கவுரை :

[ads-post]

538. ஊற்றான தாளகந்தான் பலத்தைவாங்கி உறுதியாஞ்சுன்னத்தில் சுத்திபண்ணி
மாற்றான அயச்சட்டிக்குள்ளேவைத்து மருவவே இலைக்கள்ளிப் பாலுக்குள்ளே
நீற்றான துரிசியென்ற சுன்னம்போடு நீறாக முறிந்தபின்பு எடுத்துக்கொண்டு
காற்றான தாளகத்தில் சுருக்குப்போட கனமான மெழுகாகும் எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


539. கொள்ளவே சுத்தித்த செம்புஒன்று குவிந்து நின்று உருகையிலே மெழுகொன்றீய
மெள்ளவே வெங்கலம்போல் தகர்ந்துநிற்கும் ஏதித்து வருகையிலே தங்கமீயத்
தள்ளவே சுழன்று ஒன்றாய் ஆடும்போது தங்கத்தின் சரியிடைக்கு நாகமீய
அள்ளவே கூட்டியெல்லாம் பொடியாய்ப் பண்ணி அதிகமாய்சூரணத்தைச் சரியாய்கூட்டே

விளக்கவுரை :


540. கூட்டவே சூதந்தான் கெந்தகத்தில் கொட்டி குறிப்பாக முன்பாவின் தண்ணீராலாட்டி
நாட்டவே பில்லைபண்ணி அயச்சிமிளில்வைத்து  நயமாக மேல்மூடி சீலைசெய்து
வாட்டவே பத்தெருவில் புடத்தைப்போடு மகத்தான செந்தூரம் ரவிதானப்பா
ஆட்டவே மதிதன்னில் நூற்றுக்கொன்றீய வருணனைப்போல் சிவப்பான தங்கமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 531 - 535 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

531. ஆமிந்தப் பாஷாணம் பலம்தான்வாங்கி அயச்சட்டிக்குள்வைத்து அப்பால்கேளு
சாமிந்தச் சதுரக்கள்ளி பால்தான்சேரை சமர்த்துடனே யெலிபாலம் பலந்தான்சேரை
வேமிந்த ரண்டும் ஒன்றாய்க் கலக்கிவைத்து விரவியதோர் கருநாபிபலம் பொடித்துப்போட்டு
ஊமிந்த மூன்றுநாள் கலக்கிவைத்து உற்பனமாம் தண்ணீரால் சுருக்குபோடே

விளக்கவுரை :


532. சுருக்கிடவே ரசிதமென்ற பாஷாணந்தான் துடியான மெழுகாகும் சுரண்டிவாங்கி
சுருக்கிட்ட வெள்ளியைத் தீர்ந்தாயானால் நலமான நீர்வற்றி ரசிதமாகும்
முழுக்கிட்ட மெழுகாலே சூதங்கட்டும் முயற்சியாம் துரிசியது குருவுமாகும்
குருக்கிட்ட வாதமொன்று பார்ப்போமென்று குலாமான வாதியல்ல குருடனாமே

விளக்கவுரை :

[ads-post]

533. குருடனென்றால் புத்தியண்டு பயபக்தியண்டு குரங்கான வாதியென்றால் இலைதழையைத்தேடி
குருடனைப்போல் ஒன்றோடே ஒன்றைச்சேர்த்து முயற்சியாய் உரைத்தங்கே புடத்தைப்போடு
திருடனைப்போல் விழித்தங்கே யெடுத்துப்பார்த்து சீயென்று எறிந்துவிட்டு பின்னொன்றைப் பார்ப்பான்
கெருடனைப்போல் ஞானமுற்ற வாதியென்றால் கேள்வியாய்ச் சுடுகாமல் குருதேடுவானே

விளக்கவுரை :


534. குருத்தேடியவர்கள் சொன்னமொழிகேட்டு குறையாதே சாஸ்திரத்தைத் தேடிச்சேர்த்து
கருத்தேறிக் கைம்முறைகள் கண்டுதேறிக் கலங்காதே யோகத்தை நின்றுதேறி
உருத்தேடி உட்கருவில் கருவையறிந்து உடலறிந்த உயிர்நிற்கும் தானந்தேடி
அருள்தேடி ஆத்தாளை அறிந்துதேடி அவள்சொல்லக் கேட்டறிந்து வாதம்பாரே

விளக்கவுரை :


535. பாரப்பா துரிசியென்ற சுன்னம்தானும் பதறாமல் விராகணிடை எடுத்துக்கொண்டு
சேரப்பா எருக்கனுட பால்ரண்டுசேரில் நினைவாக அதிலிட்டுச் சாமம்வைக்க
சேரப்பா கசடற்றி ஜலமாய்நிற்கும் சிறப்பான கெவுரியென்ற பாஷானந்தான்
வாரப்பா அயச்சட்டிக்குள்ளே வைத்து மறவாமல் நாற்சாமம் சுருக்குபோடே

விளக்கவுரை :


Powered by Blogger.