536. போட்டுடனே மெழுகாகும்
எடுத்துமக்காள் பேரான காரீயம் பலந்தானொன்றில்
நீட்டுடனே சரியிடையாய்
மெழுகிலீய நேர்ப்பாக வாங்கியது தூளாய்ப்போகும்
மாட்டுடனே ஈயத்தில்
தங்கமீய்ந்தால் மலிந்துதங்கம் நொருங்கியே தூளாய்ப்போகும்
ஆட்டுடனே இதற்குநேர்
சூதங்காட்டி யரைத்துமுந்நீர் தன்னாலே பில்லைகட்டே
விளக்கவுரை :
537. கட்டியே
அயச்செம்புக்குள்ளேவைத்து கெமான பத்தெருவில் புடத்தைப்போடு
உட்டியே குருவாகும்
நூற்றுக்கொன்றீய ஓடியே பத்தரைதான் உயர்த்திமெத்த
தூட்டியே அம்மெழுகு
சூதம்கட்டும் துலையாத சரக்கெல்லாம் கொல்லும் கொல்லும்
எட்டியே வெகுதூரம் ஓடுமோடும்
எடுக்கெடுக்கத் துலையாத ஊற்றுமாமே
விளக்கவுரை :
[ads-post]
538. ஊற்றான தாளகந்தான்
பலத்தைவாங்கி உறுதியாஞ்சுன்னத்தில் சுத்திபண்ணி
மாற்றான
அயச்சட்டிக்குள்ளேவைத்து மருவவே இலைக்கள்ளிப் பாலுக்குள்ளே
நீற்றான துரிசியென்ற
சுன்னம்போடு நீறாக முறிந்தபின்பு எடுத்துக்கொண்டு
காற்றான தாளகத்தில்
சுருக்குப்போட கனமான மெழுகாகும் எடுத்துக்கொள்ளே
விளக்கவுரை :
539. கொள்ளவே சுத்தித்த
செம்புஒன்று குவிந்து நின்று உருகையிலே மெழுகொன்றீய
மெள்ளவே வெங்கலம்போல்
தகர்ந்துநிற்கும் ஏதித்து வருகையிலே தங்கமீயத்
தள்ளவே சுழன்று ஒன்றாய்
ஆடும்போது தங்கத்தின் சரியிடைக்கு நாகமீய
அள்ளவே கூட்டியெல்லாம்
பொடியாய்ப் பண்ணி அதிகமாய்சூரணத்தைச் சரியாய்கூட்டே
விளக்கவுரை :
540. கூட்டவே சூதந்தான் கெந்தகத்தில் கொட்டி குறிப்பாக முன்பாவின் தண்ணீராலாட்டி
நாட்டவே பில்லைபண்ணி
அயச்சிமிளில்வைத்து நயமாக மேல்மூடி சீலைசெய்து
வாட்டவே பத்தெருவில்
புடத்தைப்போடு மகத்தான செந்தூரம் ரவிதானப்பா
ஆட்டவே மதிதன்னில்
நூற்றுக்கொன்றீய வருணனைப்போல் சிவப்பான தங்கமாமே
விளக்கவுரை :