போகர் சப்தகாண்டம் 541 - 545 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 541 - 545 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

541. தங்கமாம் குருபட்டால் சூதங்கட்டும் சாவென்ற பேர்போச்சு தேகத்துக்கு
பங்கமாம் சரக்குகளில் போட்டுப்போட பதைத்தங்கே கட்டிப்போம் தூரவோடும்
கெங்கையாம் சாறுவாரத் தழைகளெல்லாம் கெடியாகப் பிசைந்தழுத்தி பிழியத்தண்ணீர்
கங்கையாம் உட்கொள்ளக் காயசித்தியாகி சதகோடியுகம்வரைக்கும் அழியாதெண்ணே

விளக்கவுரை :


542. எண்ணவே சிவப்பான யெவாச்சாரத்தை இயமாகக் கேளுங்கள் மாணாக்காளே
பண்ணவே வெடியுப்பு ரண்டுபத்து பலந்தான் பருவமுடன் சீனமது இருபத்தைந்து
கண்ணவே ரண்டையுந்தான் கல்வத்திட்டு காரமாம் நாயுருவிச் சாற்றாலாட்டி
தெண்ணவே தெல்லுபோல் பில்லைதட்டி திறமான ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :

[ads-post]

543. போடவே தினமூன்ற காயகாயப் பொருக்கான பின்பெடுத்து கலையத்திட்டு
ஆடவே சக்கரமாம் பானைமேலே அனைத்தாப்போல் வைத்திட்டு மாசிமண்பூசி
நீடவே அடுப்பில்வைத்து தீயைமூட்டு நினைவாக வெள்ளைநீர் வருகும்பாரு
வாடவே சிவந்தநீர் பன்வருகுமுக்கால் மகத்தான பீங்கானில் எடுத்துவையே

விளக்கவுரை :


544. வைக்கவே அரக்காலே குப்பிபண்ணி வருகிறதோர் திராவகத்தை அதிலேவாரு
கைக்கவே வெள்ளைதன்னை வீசிப்போடு நவாச்சாரம் ஒருசேரை கல்வத்திட்டு
ஐயிக்கமே திராவகத்தாலாட்டு ஆட்டுஅது சாகமாட்டியபின் வழித்தெடுத்து  
பைக்கவே பரும்பீங்கான் தன்னில்வைத்தும் பருவமாய்த் திராவகத்தை வாங்கிக்குத்தே

விளக்கவுரை :


545. குத்தியே ரவியில்வைத்து மூன்றுநாள்தான் குறிப்பாகத் தணல்மேலே பீங்கான்வைத்துப்
பத்தியே பொடிபொடிபோல் வறுத்துக்கொண்டு பருவமாய் காசிபென்ற மேருக்கேற்றி
அத்தியே அரைமாசிமட்டும் போடு அனிகான வானுகையில் மேலேவைத்து
எத்தியே தீப்போடு கமலம்போல இதமாக பனிரண்டு சாமம்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar