546. தானென்ற நாற்சாமம் எரித்துப்போடு
சாதகமாய் ராக்காலம் ஆறப்போடு
கானென்ற மூன்றுநாள் ஆனபின்பு
கடுங்குப்பி எடுத்துடைத்தால் தேங்காய்போலத்
தேனென்ற சிறுதிடத்தில்
சிவந்துகாணும் திரும்பவதைக் கல்வத்தில் பொடியாய்பண்ணி
வானென்ற திராவகத்தை
விட்டுஆட்டு மறுப்பீங்கான் தனிலிட்டுத் திராவகத்தைக் குத்தே
விளக்கவுரை :
547. குத்தியே நாள்மூன்று
ரவியில்போடு குவிந்தபின்பு தணலுக்குள் வறுத்துப்போடு
எத்தியே பொடியாக்கி
மேருக்கேற்றி விதமான வானுகையில் தீயைமூட்டு
பத்தியே கமலம்போல்
எரிப்பாயப்பா பனிரண்டு சாமமுந்தான் கடந்தபின்பு
தத்தியே குப்பியைத்தானுடைத்துப்போடு
தணலில் நிற்கும் தங்கமதை எடுத்துக்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
548. கொள்ளவே முன்போல திராவகத்தாலாட்டு குவிந்தபின்பு நீர்குத்தி தவியிற்போடு
அன்னவே தணலுக்குள்
வறுத்துப்போடு அதிமாம் காசிபென்ற மேருக்கேற்றி
தன்னவே வானுகையில்
தீயைமூட்டித் தனையெடுத்து முன்போலப் பாவனைசெய்து
துன்னவே ஏழுதரம்
தீர்ந்தாயானால் சூரியன்போல் வந்திருக்கும் சாரம்தானே
விளக்கவுரை :
549. சாரந்தான் பலம்பத்து
நிறுத்துக்கொண்டு சமர்த்தாகச் சூதமது பலமும்பத்து
வாரந்தான் தங்கமது
ரண்டரையேபலந்தான் மருவிநன்றாய்லேசாய்க் கல்வத்திட்டு
தீரந்தான் எலுமிச்சம்
பழச்சார்விட்டுதிரளவகை மூன்றுநாள் பொடியாய்பண்ணி
காரந்தான் காசிபென்ற
மேருக்கேற்றி கனமான வானுகையில் வைத்திடாயே
விளக்கவுரை :
550. வைத்துமே பனிரண்டுசாமம் தீயை
மறவாமல் போட்டுவர தீபம்போல
மைத்துமே மாதளம்பூ
போலேயாகும் மைந்தனே வேறொன்று குப்பிக்கேற்றி
வைத்து மண்சீலையினால்
காற்றொடாமல் நலமாகக் கட்டிவைத்து ஆயிரத்துக்கொன்று
தைத்துமே காசிடைதான்
கொடுப்பாயானால் தங்கமது பதினாறு மாற்றுமாமே
விளக்கவுரை :