551. தங்கமே ஆச்சுதென்று
கெர்விக்காதே தளராமல் காயத்தை சித்திபண்ணு
பங்கமே வாராமல்
தினம்பணந்தானுண்டு பளபளக்கும் உடம்பெல்லாம் பாலையாவாம்
அங்கமே சரீரமது பவளம்போலாம்
அரனுண்ட கற்பமிது யானும்உண்டேன்
சிங்கமே இவனென்பார்
நரையோயில்லை ஜெகமெல்லாம் குன்றியிடை கொள்ளவாமே
விளக்கவுரை :
552. ஒவ்வாது ஏகாம்ப சாரத்துக்கு
உத்தமியாம் மனோன்மணித்தாய் பிளப்பமெத்த
சவ்வாது உடன்கூடிச்
சரக்கிற்பூசி தணலிலே வாட்டையிலே சவளையாகும்
கவ்வாது நவலோகம் படிகுமுன்னே
கனகமயமாகிவிடும் கணக்கோமெத்த
பவ்வாது உலகத்தில்
கெட்டபேர்கள் பரிபாசமென்பார்கள் பாஷாண்டிதானே
விளக்கவுரை :
[ads-post]
553. பாஷாண்டி மெத்தவுண்டு
லோகத்துள்ளே பரவாக அவனுடனே பேசவேண்டாம்
பாஷாண்டி வாதமுண்டோ
என்றுகேட்டால் பண்பாகச் செய்தொழிலே வாதமென்றுசொல்லு
பாஷாண்டி வைதாலும்
சகித்துக்கொண்டு பயபக்தி மார்க்கமாய் விசேஷம்சொல்லி
பாஷாண்டி முகத்துமுன்னே
நிற்குமூதேவி பாங்கான தேசம்விட்டு மறுதேசம்புக்கே
விளக்கவுரை :
554. புக்கவே ஞானமுற்ற
வாதியுடன்பேச பிறப்பான மனிதருடன் பேசவேண்டாம்
மக்கியே மனதடங்கி போதம்பாரு
மகத்தான பெரியோர்க்கு தொண்டுபண்ணு
எக்கியே மூலத்தைக்
குப்பிக்கேற்று இயலான தளங்களெல்லாம் சோதித்தேறி
நக்கியே அமுதத்தை மவுனமுன்னி
நாதாக்கள் ரிஷியுடைய மரபில்நில்லே
விளக்கவுரை :
555. நில்லென்று அறுபத்துநாலு
மரபுள்ளே நிலைத்துநிற்கும் வாதசித்தி குளிகைசித்தி
கல்லென்ற காயசித்தி
கெவுனசித்தி கரையுடனே காயசித்தி ஞானசித்தி
வில்லென்ற எட்டெட்டுச்
சித்தியுண்டு மேதினியும்கொள்ளாது கரைகொள்ளாது
சில்லென்ற காடுபோல்
சாத்திரங்கள்மெத்த செப்பரிது உரைகாணில் வாதந்தானே
விளக்கவுரை :