556. வாதந்தான் முன்பின்னாய்ச் சொல்லிவைத்து மறைத்தாரே சரக்கென்ற வைப்புதன்னை
நீதந்தான் ஆதியுப்பை
இழுக்காய்ச் சொல்லி நிலைத்துநிற்கும் வீரத்தை மறைத்துப்போட்டார்
வேதந்தான் முடிவுக்கு
ஒப்பாய்நின்ற வீரத்தைவைத்தாலே வாதமாகும்
பாதந்தான் இல்லாமல்
நடக்கப்போமோ பரிவாகச் சிவந்திருந்த சாரந்தானே
விளக்கவுரை :
557. சிவந்திருந்த சாரத்தின்
மகிமைசொல்ல சித்தர்முதல் ரிஷிகளுக்கும் முடியாதப்பா
உவந்திருந்த காலாங்கி
நாயனார்சொல்ல உண்மையாய்க் கேட்டிருந்து யானுங்கண்டேன்
நவத்திருந்த சூதத்தைத்
தாக்கிக்கொல்ல நலமாக வெகுசுளுக்கு நல்கப்போகார்
தவழ்ந்திருந்து பின்னைசென்று
கடந்தாப்போல சரக்கெல்லாம் கண்ணிமைக்குள் கொல்லுந்தானே
விளக்கவுரை :
[ads-post]
558. கொல்லுகிற
கருவேதுயென்றாயானால் குருந்தபடி சொல்லுகிறேன் குறிப்பாய்க்கேளு
வெல்லுகிற சூதமென்ற
கெந்தியொன்று விடுபட்ட தாளகமும் சிலையும்லிங்கம்
அல்லுகிற சிவப்பான சாரமொன்று
அப்பனே பழச்சாற்றால் சாமமாட்டி
தெல்லுகிற பில்லைதட்டி
உலறப்போட்டு சிறப்பான ஐங்குகையில் வைத்திடாயே
விளக்கவுரை :
559. வைத்துமே சீலைசெய்து
புடத்தைப்போடு வயிரவற்கு வஸ்துசுத்திப் பூசைபண்ணி
கைத்துமே
கவசத்தைவாங்கிப்போடு களங்காகவே இருக்கும் நவலோகத்தில்
ஐந்துமே
ஆயிரத்துக்கொன்றுபோடு அப்பனே மாற்றென்ன பனிரண்டாகும்
கைத்துமே காவிக்கு
உப்புக்கேகா நலமான சீஷருக்குத் தொழிலில்லைசொல்லே
விளக்கவுரை :
560. சொல்லவே சூதத்தைக்
கட்டுதற்கு சுளுவாக வழிசொல்வேன் கேளுமக்காள்
அல்லவே இருப்பகலில்
பழச்சார்விட்டு அதீதமென்ற சாரத்தை பொடியாய்ப்பண்ணி
மல்லவே சூதமொரு பலத்தைவிட்டு
மறவாமல் தணலில்வைத்து பொடியைத்தூவு
கல்லவே கட்டியது மண்போடும்
கரியில்வைத்து உருகிடவே ரசிதமாமே
விளக்கவுரை :