போகர் சப்தகாண்டம் 566 - 570 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

566. தீர்க்கவே உருட்டியதை வைத்துக்கொண்டு செப்பரிய மத்தங்காய்க்குள்ளேவைத்து
மூர்க்கமாய்ப் புடந்தன்னைப் பேர்த்துப்போடு முயற்சியாய்ப் பின்பெடுத்துக் கழுவிப்போடு
ஆர்க்கமாய் வெள்ளியதன் விராகனிடைபத்து அழகாக சிமிழ்போல திருவள்வைத்துப்பண்ணி
தூர்க்கதே சூதவுண்டை நடுவேவைத்து துப்புரவாய் மேல்மூடிதிருவப்போடே

விளக்கவுரை :


567. திருவியே மறுசற்றால் நல்லயெண்ணை சிறப்பாகக் கல்வத்திலரைமட்டம் வார்த்து
மருவியே வெள்ளியென்ற கிண்ணிதன்னை வட்டமிட்டு ஊங்சல்போல் கல்வத்திட்டு
தருவியே மேலோடுகொண்டுமூடி சாங்கமாய்ப் பாஷாணம்மேலேபூசி
கருவியே கவசத்தின் கழுத்துதன்னில் கடுகியே மனம்போலத் தமருபோடே

விளக்கவுரை :

[ads-post]

568. தமரிட்டுக் கலசத்தை ஆணிமேல்வைத்து தயங்காதே விரல்பருமன் கிரியைப்போட்டு
கமரிட்டு விளக்கேற்றி நாலுசாமம் கலங்காதே யெரியிட்டு ஆறவிட்டு
அமரிட்டு வெள்ளியென்ற கிண்ணிதன்னை அசையாமல் திருகிவிடு உண்டைவாங்கி
பமரிட்டுத் தண்ணியிலே கழுவிப்போட்டு பத்துவிசை அவிப்புடமாய் காயில்போடே

விளக்கவுரை :


569. காயிலே போட்டபின்பு தண்ணீரில்கழுவி கசகாமல் வெள்ளியிட சிமிளில்வைத்துப்
பாயிலே முன்போல யெண்ணையிலேபோட்டு பக்குவமாய் நாற்சாமம் எரித்தபின்பு
போயிலே இப்படிதான் ஆறுபுடம்போடு பேரான எண்ணையிலே பத்துவிசைபோடு
தோயிலே வெள்ளியைத்தான் அடித்துப்போடு சிறப்பான வெள்ளியைத்தான் ஈயம்விட்டதே

விளக்கவுரை :


570. ஊதியே முன்னிரையில் சிமிள்போலப்பண்ணு உத்தமனே புடம்பத்து எரிப்புபத்து
பாதியே இப்படிதான் செய்துகொண்டு பரிவாகக் கரியில்வைத்து உருக்கஆடும்
கோதியே தங்கமிட்டு உருக்கிக்கொண்டு குறிப்பான நாகமதுகூடவிட்டு
ஆதியே சகனாகப் பொடியாய்ப்பண்ணி அற்றகெந்தி சூதமிடைச்சரியாய் கூட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 561 - 565 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

561. ஆமப்பா இச்சாரம் பொடியாய்ப்பண்ணி அப்பனே மஞ்சளென்ற கருவைப்போட்டு
ஓமப்பா ரவியில்வைக்க தயிலமாகும் உற்பனமாம் பணவிடைதான் தயிலம்கொள்ள
போமப்பா சாவுபொய்யா கற்பகாலம் பகழான வயிரம்போல் இருக்கும்தேகம்
காமப்பா வித்தைக்கு மெத்தநன்று கைவிட்ட சூத்திரம்போல் ஆடும்பாரே

விளக்கவுரை :


562. பார்க்கவே துரிசியொரு வைப்புசொல்லப் பண்பாக செம்பாலே பானைபண்ணி
கார்க்கவே கல்லுப்புப் பொடியாய்ப் பண்ணி காணிதுக்குப் பதினாறில் வெடியுப்புச்சீனம்
நீர்க்கவே நிறுத்தந்த பானையிலேபோட்டு இதமான பழச்சாறு மோரும்வார்த்து
ஆர்க்கவே மேல்மூடி புதைத்துப்போடு ஆறுதிங்களானபின்பு எடுத்துப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

563. எடுத்துப்பார் பச்சையாய் கட்டியாக இதமான வயிரம்போல் துரிசியாகும்
அடுத்தப்பார் உப்பதுவும் சத்தியாச்சு அப்பனே செம்பதுவும் சிவமுமாச்சு
கடுத்தப்பார் தயிரதுவும் விஷ்னுவாச்சு கலந்துநின்ற பழச்சாறு பிருமாவாச்சு
தொடுத்துப்பார் இதைகுருவுசெய்யில் வேதைதுலையாது வாதத்தில் ஆதியாமே

விளக்கவுரை :


564. வாதத்தில் ஆதியென்ற சூதக்கட்டு வகைசொல்வேன் பச்சையென்று மயங்கவேண்டாம்
நீதத்தில் துரிசியது பலமுமொன்று நேர்ப்பாகப்பொடிபண்ணி வைத்துக்கொண்டு
பூதத்தில் இரும்பான கரண்டிதன்னைப் புதுக்கியே தண்ணிர்விட்டுக் கழுவிப்போடு
சூதத்தை நிறுத்தல்லோ பலமும்போட்டு சுறுக்குடனே தண்ணீரை முக்கால்வாரே

விளக்கவுரை :


565. தண்ணீர்தான் கொதிக்கையிலே துரிசுத்தூளை சாதகமாய் தூவிவரதண்ணீர்மேலே
தண்ணிர்தான் சுண்டிடவே மறுதண்ணீர்விட்டு சாகாமல் தூவிவர தண்ணீர்சுண்டும்
இண்ணீர்தான் மூன்றுதரம்விட்டுக்காய்ச்ச மெழுகுபோல் உருண்டிருக்கும் சூதந்தானும்
தண்ணீரை விட்டுநன்றாய் தோய்த்துத் தோய்த்துச் சிறப்பாக் கழுவிவிட தீர்க்கமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 556 - 560 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

556. வாதந்தான் முன்பின்னாய்ச் சொல்லிவைத்து மறைத்தாரே சரக்கென்ற வைப்புதன்னை
நீதந்தான் ஆதியுப்பை இழுக்காய்ச் சொல்லி நிலைத்துநிற்கும் வீரத்தை மறைத்துப்போட்டார்
வேதந்தான் முடிவுக்கு ஒப்பாய்நின்ற வீரத்தைவைத்தாலே வாதமாகும்
பாதந்தான் இல்லாமல் நடக்கப்போமோ பரிவாகச் சிவந்திருந்த சாரந்தானே

விளக்கவுரை :


557. சிவந்திருந்த சாரத்தின் மகிமைசொல்ல சித்தர்முதல் ரிஷிகளுக்கும் முடியாதப்பா
உவந்திருந்த காலாங்கி நாயனார்சொல்ல உண்மையாய்க் கேட்டிருந்து யானுங்கண்டேன்
நவத்திருந்த சூதத்தைத் தாக்கிக்கொல்ல நலமாக வெகுசுளுக்கு நல்கப்போகார்
தவழ்ந்திருந்து பின்னைசென்று கடந்தாப்போல சரக்கெல்லாம் கண்ணிமைக்குள் கொல்லுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

558. கொல்லுகிற கருவேதுயென்றாயானால் குருந்தபடி சொல்லுகிறேன் குறிப்பாய்க்கேளு
வெல்லுகிற சூதமென்ற கெந்தியொன்று விடுபட்ட தாளகமும் சிலையும்லிங்கம்
அல்லுகிற சிவப்பான சாரமொன்று அப்பனே பழச்சாற்றால் சாமமாட்டி
தெல்லுகிற பில்லைதட்டி உலறப்போட்டு சிறப்பான ஐங்குகையில் வைத்திடாயே

விளக்கவுரை :


559. வைத்துமே சீலைசெய்து புடத்தைப்போடு வயிரவற்கு வஸ்துசுத்திப் பூசைபண்ணி
கைத்துமே கவசத்தைவாங்கிப்போடு களங்காகவே இருக்கும் நவலோகத்தில்
ஐந்துமே ஆயிரத்துக்கொன்றுபோடு அப்பனே மாற்றென்ன பனிரண்டாகும்
கைத்துமே காவிக்கு உப்புக்கேகா நலமான சீஷருக்குத் தொழிலில்லைசொல்லே

விளக்கவுரை :


560. சொல்லவே சூதத்தைக் கட்டுதற்கு சுளுவாக வழிசொல்வேன் கேளுமக்காள்
அல்லவே இருப்பகலில் பழச்சார்விட்டு அதீதமென்ற சாரத்தை பொடியாய்ப்பண்ணி
மல்லவே சூதமொரு பலத்தைவிட்டு மறவாமல் தணலில்வைத்து பொடியைத்தூவு
கல்லவே கட்டியது மண்போடும் கரியில்வைத்து உருகிடவே ரசிதமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 551 - 555 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

551. தங்கமே ஆச்சுதென்று கெர்விக்காதே தளராமல் காயத்தை சித்திபண்ணு
பங்கமே வாராமல் தினம்பணந்தானுண்டு பளபளக்கும் உடம்பெல்லாம் பாலையாவாம்
அங்கமே சரீரமது பவளம்போலாம் அரனுண்ட கற்பமிது யானும்உண்டேன்
சிங்கமே இவனென்பார் நரையோயில்லை ஜெகமெல்லாம் குன்றியிடை கொள்ளவாமே

விளக்கவுரை :


552. ஒவ்வாது ஏகாம்ப சாரத்துக்கு உத்தமியாம் மனோன்மணித்தாய் பிளப்பமெத்த
சவ்வாது உடன்கூடிச் சரக்கிற்பூசி தணலிலே வாட்டையிலே சவளையாகும்
கவ்வாது நவலோகம் படிகுமுன்னே கனகமயமாகிவிடும் கணக்கோமெத்த
பவ்வாது உலகத்தில் கெட்டபேர்கள் பரிபாசமென்பார்கள் பாஷாண்டிதானே

விளக்கவுரை :

[ads-post]

553. பாஷாண்டி மெத்தவுண்டு லோகத்துள்ளே பரவாக அவனுடனே பேசவேண்டாம் 
பாஷாண்டி வாதமுண்டோ என்றுகேட்டால் பண்பாகச் செய்தொழிலே வாதமென்றுசொல்லு
பாஷாண்டி வைதாலும் சகித்துக்கொண்டு பயபக்தி மார்க்கமாய் விசேஷம்சொல்லி
பாஷாண்டி முகத்துமுன்னே நிற்குமூதேவி பாங்கான தேசம்விட்டு மறுதேசம்புக்கே

விளக்கவுரை :


554. புக்கவே ஞானமுற்ற வாதியுடன்பேச பிறப்பான மனிதருடன் பேசவேண்டாம்
மக்கியே மனதடங்கி போதம்பாரு மகத்தான பெரியோர்க்கு தொண்டுபண்ணு
எக்கியே மூலத்தைக் குப்பிக்கேற்று இயலான தளங்களெல்லாம் சோதித்தேறி
நக்கியே அமுதத்தை மவுனமுன்னி நாதாக்கள் ரிஷியுடைய மரபில்நில்லே

விளக்கவுரை :


555. நில்லென்று அறுபத்துநாலு மரபுள்ளே நிலைத்துநிற்கும் வாதசித்தி குளிகைசித்தி
கல்லென்ற காயசித்தி கெவுனசித்தி கரையுடனே காயசித்தி ஞானசித்தி
வில்லென்ற எட்டெட்டுச் சித்தியுண்டு மேதினியும்கொள்ளாது கரைகொள்ளாது
சில்லென்ற காடுபோல் சாத்திரங்கள்மெத்த செப்பரிது உரைகாணில் வாதந்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.